Meta AIஆல் எமது WhatsApp chatsகளை படிக்க முடியுமா?

Misleading சமூகம் | Society

சமூக ஊடக செயலிகளின் அப்டேட்கள் காலத்திற்கு காலம் அந்தந்த நிறுவனங்களினால் புதுப்பிக்கப்பட்டுக்கொண்டே செல்கின்றன. எனினும் அவை குறித்து எமக்கு முழுமையான தெளிவின்றி இருக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்தி சிலரினால் போலியான தகவல்களும் பகிரப்படுகின்றன.

அந்தவகையில் தற்போது Whatsapp group chatகள் AI தொடர்பான சைபர் பாதுகாப்பு அபாயங்களுக்கு ஆளாகக்கூடும் என்ற தகவலொன்று பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது.

எனவே அது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின் விவரம் (What is the claim)

Facebook | Archived Link

குறித்த பதிவில் வேறொரு WhatsApp group இலிருந்து பெறப்பட்டது.

Whatsapp group chat கள்* AI சைபர் பாதுகாப்பு அபாயங்களுக்கு ஆளாகக் கூடும்.

ஒவ்வொரு WhatsApp குழு நிர்வாகியும் Advance Chat Privacy ஐ இயக்கவும், இல்லையெனில் AI அனைத்து Group Chat உறுப்பினர்களின் செய்திகளையும் தனிப்பட்ட HP n ஐயும் சட்டப்பூர்வமாக அணுகும்.

1 to 1  WhatsApp Chatகளைில் கூட Advanced Chat Privacy ஐ இயக்க வேண்டும்.

இதைச் செய்ய, நீங்கள் Chatல் இருக்கும்போது, மேலே உள்ள groupபெயரைத் அழுத்தி, கீழே செல்லும் போது, அதை இயக்குவதற்கான விருப்பத்தைப் பார்ப்பீர்கள். என ஆங்கிலத்தில் தெரிவிக்கப்பட்டு இன்று (2025.07.17) பதிவிடப்பட்டிருந்தது.

மேலும் இதே தகவல் WhatsApp ஊடாகவும் பகிரப்பட்டு வருகின்றமையை அறியக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

 Whatsapp group chatகள் AI தொடர்பான சைபர் பாதுகாப்பு அபாயங்களுக்கு ஆளாகக் கூடும் என்பது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அது குறித்த செய்திகள் பிரதான ஊடகங்களில் வெளியாகியிருக்கும் எனினும் அவ்வாறான எந்த செய்திகளும் ஊடகங்களில் வெளியாகியிருக்கவில்லை.

மேலும் நாம் இது குறித்து ஆய்வினை மேற்கொண்ட போது பல்வேறு சர்வதேச உண்மைக் கண்டறியும் நிறுவனங்களில் இது தொடர்பில் அறிக்கையிடப்பட்டிருந்தமையை கண்டறிந்தோம். Link | Link 

உண்மையில் Whatsapp group chatகளை Meta நிறுவனமானது புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள AI ஊடாக அறிந்துகொள்ள முடியுமா என்பது குறித்து ஆராய்வதற்காக நாம் “meta ai whatsapp” என்ற வார்த்தையை கூகுள் தேடலில் ஆராய்ந்த போது WhatsApp உதவி மையத்தின் (Help Center) ‘FAQ’ பிரிவில் பகிரப்பட்டிருந்த தகவல்களை எம்மால் காணமுடிந்தது. 

அதில் @Meta AI என்று குறிப்பிடும் செய்திகளையும் அல்லது அதனுடன் வெளிப்படையாகப் பகிரப்படும் செய்திகளை மாத்திரமே Meta அணுக முடியும் என்றும், வேறு எந்த செய்திகளையும் அணுக முடியாது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.


மேலும் அனைத்து அழைப்புகளும் செய்திகளும் முழுமையாக குறியாக்கம் செய்யப்பட்டுள்ளன ( end-to-end encryption) என்றும், வேறு எந்த தரப்பினரும் அவற்றைப் படிக்கவோ, கேட்கவோ அல்லது பகிரவோ முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் Meta AI என்பது தொழில்நுட்ப நிறுவனத்தால் வழங்கப்படும் ஒரு விருப்ப சேவையாகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

Whatsapp இல் Advanced Chat Privacy என்ற அம்சம் உள்ளதா?

குறித்த சமூக ஊடகப் பதிவில் Whatsapp group chatகளை AI அணுகாமல் இருப்பதற்கு Advanced Chat Privacy இயக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே நாம் உண்மையில் அவ்வாறான ஒரு அம்சம் Whatsapp இல் உள்ளதா என்பது தொடர்பில் ஆய்வினை மேற்கொண்டோம்.

இதன்போது இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட Whatsapp இன் சமீபத்திய பதிப்பில் (latest version) இந்த Advanced Chat Privacy என்ற அம்சம் உட்சேர்க்கப்பட்டுள்ளது என்பதனை அறிய முடிந்தது. எந்தவொரு தனிப்பட்ட chatகளிலும் இதனை நாம் பார்க்க முடியும் என்பதுடன்  தகவல் பக்கத்திலும் இதைக் காணலாம்.

இந்த அம்சத்தின் உண்மையான நோக்கம் என்ன?

Whatsapp மற்றும் அதன் தாய் நிறுவனமான Metaவின் அதிகாரப்பூர்வ ஆவணங்களின்படி, இந்த அம்சம் ஒரு குறிப்பிட்ட Chat இற்குள் உள்ள உள்ளடக்கத்தின் மீது பயனர்களுக்கு கூடுதல் கட்டுப்பாட்டை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நமது Chatகளுக்குள் இந்த அம்சமானது இயக்கப்படும்போது, நமது உரையாடல்களின் history வேறு இடங்களுக்கு கடத்தப்படுவதை தடுக்கிறது, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் போன்றவை தானாகவே தொலைபேசியின் பிரதான கேலரியில் சேமிக்கப்படுவதைத் தடுக்கிறது, மேலும் இந்த அம்சம் இயக்கப்பட்ட Chatல், Metaவின்சொந்த ஒருங்கிணைந்த AI உதவியாளரைப் பயன்படுத்துவதையும் கட்டுப்படுத்துகிறது.

மேலும் இந்த அம்சமானது Chat களின் போது பங்கேற்பாளர்கள் உரையாடலை எவ்வாறு கையாள்வது என்பதை நிர்வகிக்க மாத்திரமே வடிவமைக்கப்பட்டுள்ளது மாறாக  வெளிப்புற அச்சுறுத்தலுக்கு எதிராக பாதுகாக்க இந்த அம்சமானது வடிவமைக்கப்படவில்லை. Linkஇந்த அம்சமானது இயக்கப்படாமல் (OFF)  இருந்தால் , AI ஆல் உங்கள் மற்ற செய்திகளைப் படிக்க முடியுமா?

AI உங்கள் செய்திகளைப் படிக்க முடியும் என்ற மையக் கூற்றானது,  WhatsApp’s end-to-end encryption (E2EE) பாதுகாப்பு அம்சத்தால் சாத்தியமற்றதாகிவிட்டது.

மேலும் இந்த பாதுகாப்பு அம்சமானது அனைத்து தனிப்பட்ட Chatகள்  மற்றும் அழைப்புகளுக்கும் இயல்பாகவே இயக்கப்படும். தகவல்களை அனுப்புபவரும் பெறுபவரும் மாத்திரமே அவற்றைத் திறந்து படிக்க கூடியதாக இருக்கும் அதைவிடுத்து உங்கள் Chat ஆனது  lock செய்யப்பட்டே இருக்கும்.

ஆகவே WhatsApp உட்பட யாரும் உங்கள் தனிப்பட்ட தகவல் தொடர்புகளின் உள்ளடக்கத்தை இடைமறித்து பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok | YouTube

Conclusion: முடிவு

எனவே எமது ஆய்வின் அடிப்படையில் உங்கள் செய்திகளை AI அணுகுவதனை தடுப்பதற்கு Advanced Chat Privacy ஐ இயக்க வேண்டும் என பகிரப்படும் தகவல் தவறானது என்பதுடன், WhatsApp ஆல் இந்த ஆண்டின் ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட Advanced Chat Privacy   என்ற அம்சத்தின் உண்மையான பயன்பாட்டை தவறாக சித்திரிக்கின்ற ஒரு போலியான தகவல் என்பதுவும்  கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் அனைத்து தனிப்பட்ட WhatsApp செய்திகளும் ஏற்கனவே default end-to-end encryption மூலம் பாதுகாக்கப்படுகின்றன, இதனால் Meta AI உள்ளிட்ட எந்த மூன்றாம் தரப்பினராலும் அவற்றை அணுக முடியாது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள்மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:Meta AIஆல் எமது WhatsApp chatsகளை படிக்க முடியுமா??

Fact Check By: suji Shabeedharan 

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *