Tank Cleaner என்று அழைக்கப்படும் Pleco மீன்கள் ஒரு மாத காலம் வரை தண்ணீர் இன்றி காய்ந்து போனாலும் அதன் மேல் தண்ணீர் பட்டவுடன் அதற்கு மீண்டும் உயிர் வந்துவிடும் என தெரிவித்து சமூக ஊடகங்களில் தகவல் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.
எனவே அது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):
குறித்த பதிவில் அதிகம் பகிருங்க சொந்தங்களே…! இந்த மீனை எங்க பார்த்தாலும் விடாதீங்க…..இந்த மீனை கொல்வது கடினம் இது சாதாரணமாக சாகாது .இதை நீங்கள் குலங்களிலும் பார்க்கலாம் முன்பு இது டேங்க் கிளீனர் என்று சொல்லி இந்த மீனை கலர் மீன்கள் விக்கும் கடைகளில் வித்தார்கள் இந்த மீனை நம் பிள்ளைகள் வாங்கி வளர்த்தார்கள் .சிலர் இந்த மீனை வளர்க்க முடியாமல் குளங்களில் விட்டுவிட்டனர்.அதன் விளைவு தான் இன்று இந்த மீன்கள் அதிக அளவில் அனைத்து ஏறி, குளம்,குட்டைகளில் அதிக அளவில் காணப்படுகிறது. இப்ப இந்த மீனின் வளர்ச்சி நம் நாட்டு மீன்களின் வளர்ச்சியை முற்றிலும் அழிக்கிறது.இதை பற்றி பேசினால் நிறைய பேசலாம் இந்த மீனை. மனிதர்கள் சாப்பிடமாட்டார்கள்.
குறிப்பு இந்த மீனை பிடித்து கரையில் போட்டால் காய்ந்து செத்துவிடும் என்று நினைக்க வேண்டாம் .இந்த மீன் வெயிலில் 1மாதம் காய்ந்து கருவாடா ஆனாலும் அதான் மேல் தண்ணி பட்டால் உயிர் வந்து விடும் இந்த மீன் ஒருவேளை உங்கள் தூண்டிலில் மாட்டினால் அதை 2 ஆக கத்தியில் வெட்டி போடவும் 100%இது உண்மை.
விவசாயம் காப்போம். என தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.08.13 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் இதனை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பில் நாம் ஆராயும் போது Tank Cleaner மீன் இனமானது ஒரு மாத காலம் வரை தண்ணீர் இன்றி இருக்கும் என்றோ அல்லது காய்ந்து போனாலும் அதன் மேல் தண்ணீர் பட்டவுடன் அதற்கு மீண்டும் உயிர் வந்துவிடும் என்றோ எந்த விதமான நம்பத்தகுந்த அறிக்கைகளும் எமக்கு கிடைக்கவி்லலை.
எனினும் Tank Cleaner என்று அழைக்கப்படும் இந்த Plecos மீன்கள் தண்ணீர் இன்றி 30 மணித்தியாலங்கள் வரை தரையில் உயிர் வாழும் எனவும் அதன் பின்னர் இவை ஈரப்பதன் அதிகம் கொண்ட சேற்றில் ஒரு மாதத்திற்கும் குறைவான காலம் வரை உயிர் வாழும் எனவும் சில அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. Link | Link
மேலும் Pleco மீன்களுக்கு தண்ணீருக்கு வெளியே தாங்கும் திறன், அதன் துணை சுவாச உறுப்பு மூலம், நீண்ட நேரம் வாழும் தன்மை எளிதாக்கப்படுகிறது, இது ஒரு செவுள் குழி போன்றது, இது மீன் காற்றில் இருந்து ஒட்சிசனை பிரித்தெடுக்க அனுமதிக்கிறது. இந்த உறுப்பு, பரிணாம உயிரியலின் ஒரு அற்புதம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர.. Pleco அதன் தோல் ஈரப்பதமாக இருக்கும் வரை நிலத்தில் 30 மணி நேரம் வரை உயிர்வாழகிறது. அதன் பின்னர் சேற்றில் துளையிட்டு, ஈரப்பதத்தைப் பாதுகாக்கும் மற்றும் காற்று பரிமாற்றத்தை அனுமதிக்கும் ஒரு பாதுகாப்பு கூட்டை உருவாக்குவதன் மூலம் அதற்கு 30 மணித்தியாலங்கள் பின்னரும் நீர் இன்றி உயிர்வாழ முடிகின்றது என நீரியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.Link
நீரின்றி Pleco மீன்கள் 30 மணித்தியால்ங்கள் வரை உயிர்வாழ்வதை காட்டும் சில காணொளிகள்.Link
தெஹிவளை மிருகக்காட்சி சாலை
இது குறித்து மேலதிக தெளிவினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் நாம் தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலை அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு வினவியிருந்தோம்.
இதன்போது Pleco மீன்கள் தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவிற்கு சொந்தமான மீன்கள் எனவும் இவை இலங்கைக்கு சொந்தமான மீன்கள் அல்ல எனவும் குறிப்பிட்டனர். அதனால் குறித்த மீன்கள் நம் நாட்டின் சுற்றுச் சூழல் அமைப்புடன் ஒத்துப்போவது கடினம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் Pleco மீன்கள் அதன் இளமை காலத்தில் தாவர உண்ணியாக இருந்தாலும் அது வளரும் போது விலங்குண்ணியாகவே கருதப்படுகின்னறது. எனவே அவை ஆரம்ப காலங்களில் பாசிகளை உண்பதற்காக மீன்தொட்டிகளில் வளர்க்கப்பட்டு பின்னர் அவை பெரிதானவுடன் ஆறுகளில் விட்டுவிடுவதனால் அங்குள்ள சுற்றுச்சூழல் அமைப்பை இந்த மீன்கள் அழிப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
அத்துடன் இவை உணவை உரிஞ்சி எடுத்து உண்பதனால் ஆறுகளில் உள்ள ஏனைய உயிரினங்களின் முட்டைகள் மற்றும் சிறிய மீன்கள் என்பன அழிவதற்கும் இந்த மீன்கள் காரணமாக அமைகின்றது என தெரிவித்தனர்.
Pleco மீன்கள் நீரின்றி வறண்ட நிலத்தில் 30 மணித்தியாலங்கள் வரையான காலப்பகுதி உயிர்வாழும் திறனை கொண்டுள்ளதாகவும், அதன் பின்னர் சேற்றில் குறிப்பிட்ட சில மணிநேரங்களுக்கு அதனால் வாழமுடியுமே தவிர ஒரு மாதம் வரை அவை நீரின்றி வாழும் என்பதற்கான எந்தவித ஆதாரங்களும் இல்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
எங்களதுசமூகவலைதளபக்கங்களைபின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் Tank Cleaner என்று அழைக்கப்படு Pleco மீன்கள் ஒருமாதம் வரை நீரின்றி காய்ந்துபோய் இருந்தாலும் அதன் மேல் ஒரு துளி நீர் பட்டவுடன் அதற்கு உயிர்வந்துவிடும் என தெரிவிக்கப்பட்ட தகவல் தவறானது என்பதுடன் குறித்த Pleco மீன்கள் நீரின்றி வறண்ட நிலத்தில் 30 மணித்தியாலங்களுக்கு மாத்திரமே உயிர்வாழ முடியும் என்பதுடன் ஈரத்தன்யைான சேற்று நிலப்பகுதிகளில் சில காலத்திற்கு உயிர்வாழ முடியும் என்பதுவும் கண்டறியப்பட்டது.
இந்த மீனின் சுவாச அமைப்பானது ஒட்சிசனை சேமித்து வைக்கும் விதத்தில் காணப்படுவதனால், இந்த மீன் இனங்களுக்க நீரின்றி சில மணிநேரங்களுக்கு வாழ முடிகின்றது என்பது ஆராய்ச்சியாளர்களின் அறிக்கைளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Title:Tank Cleaner மீன்கள் தண்ணீர் இன்றி ஒரு மாதம் வரை உயிர் வாழுமா?
Fact Check By: Suji shabeedharanResult:Missing Context
