“மெலிசா” புயலின் மையப்பகுதியின் காணொளியா இது?

Misleading சர்வதேசம் | International

அட்லாண்டிக் புயல்களில் மிக சக்திவாய்ந்த ஒன்றாகக் கருதப்படும் ‘மெலிசா’ புயல், ஹெய்ட்டி மற்றும் ஜமைக்காவில் கடும் சேதத்தை ஏற்படுத்தியதோடு, தற்போது கியூபாவைத் நோக்கி நகர்வதா சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் மெலிசா புயலின் மையப் பகுதிக்குச் சென்று அமெரிக்க படை வீரர்களினால் எடுக்கப்பட்ட காணொளி என தெரிவிக்கப்பட்டு ஒரு காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்படுகின்றமையை காணமுடிந்தது.

எனவே அந்த காணொளி தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின்விவரம் (What is the claim):

Facebook | Archived Link

அதில் மேற்கிந்திய தீவுகள் ஜமைக்கா நாட்டுக்கு அருகே நிலைகொண்டு உள்ள ‘மெலிசா’ என்ற சூறாவளிப் புயலின் மையப் பகுதிக்குச் சென்று வீடியோ எடுத்த அமெரிக்க விமானப்படை வீரர்கள்!

மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் சுழலும் இந்த புயல், ஜமைக்கா, ஹைதி, டோமினிகன் குடியரசு ஆகிய நாடுகளை புரட்டிப் போட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டு 2025.10.28 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் அதன் உண்மை அறியாத பலரும் சமூக ஊடகங்களில் இதனை பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த காணொளி தொடர்பான உண்மையை அறிய அந்த காணொளியின் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி நாம் தேடுதலில் ஈடுபட்டபோது, @earthimpacts என்ற டிக்டொக் பக்கத்தில் குறித்த காணொளியானது 5 நாட்களுக்கு முன்னர் (2025.10.26) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது.

அந்த காணொளியில் இது மெலிசா புயல் என்று எந்த இடத்திலும் குறிப்பிட்டிருக்கவில்லை. அத்துடன் அதில் இது AI ஆல் உருவாக்கப்பட்டது என்ற label காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமன்றி குறித்த டிக்டொக் பக்கத்தில் இதேபோன்ற AI ஆல் உருவாக்கப்பட்ட பல காணொளிகளையும் காணமுடிந்தது.

TikTok
எனவே நாம் இந்த காணொளியை AI Detective Tool ஐ பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்ட போது இந்த காணொளியானது AI தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டுள்ளமை உறுதியானது.

இந்த காணொளியில் காணப்படும் வானியல் ரீதியான முரண்பாடுகள்

மேற்குறிப்பிட்ட காணொளியை நாம் நன்கு அவதானித்தால்,இந்தக் காட்சிகள், சூறாவளியின் மையப் பகுதிக்கு (hurricane’s eye) மேலே ஒரு விமானம் பறப்பதையே காட்டுகிறது, அது மேகங்களின் சமச்சீர், ஆழமான “புனல்” வழியாகக் கீழ் நோக்கி காட்டப்படுகின்றது, இது உண்மையான சூறாவளிகள் எவ்வாறு தோன்றும் என்பதற்குப் நேர்மாறாக இருப்பதனை அறியமுடிகின்றது.

உண்மையான சூறாவளிகளில், மையப் பகுதியை சுற்றியுள்ள உயர்ந்த மேகங்கள் (the “eyewall”) 50,000 அடி (சுமார் 15 கிலோமீட்டர்) அல்லது அதற்கு மேற்பட்ட உயரத்தை எட்டும்.  எனவே இந்த மேகங்களுக்குள் அல்லது கீழே இருக்கும், தெளிவான காட்சியை படமெடுக்கும் விதத்தில் ஒரு விமானம் பொதுவாக கீழே பறக்காது. இதுபோன்ற புயல்களில் ஏற்படும் சக்திவாய்ந்த இடியுடன் கூடிய மழை கோபுரங்கள், வணிக விமானங்கள் பொதுவாக பறக்கும் இடத்திற்கு மேலே, மேல் வெப்ப மண்டலத்தில் நீண்டுள்ளன என்பதை நாசா மற்றும் இங்கிலாந்து வானிலை தகவல் மையம் உறுதிப்படுத்தியுள்ளன. Met Office, FlightRadar

உண்மையில் இந்த மெலிஸா புயலின் ஊடாக பயணித்த அமெரிக்க விமானப்படை விமானம்

சமூக ஊடகங்கங்களில் பகிரப்பட்ட காணொளி  AI ஆல் உருவாக்கப்பட்டது என்றாலும், மெலிசா புயலின் மையப்பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட உண்மையான காட்சிகளும் உள்ளன.

53வது வானிலை மறுபரிசீலனைப் படையைச் சேர்ந்த அமெரிக்க விமானப்படையின்   “Hurricane Hunter” குழுவினர் அக்டோபர் 27 ஆம் திகதியன்று மெலிசா புயலின் உண்மையான காட்சிகளைப் பதிவு செய்துள்ளனர்.

அந்த காணொளியை கீழே காணலாம்.

இது தொடர்பில் பிரதான ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மெலிசா புயலின் கோரத்தாண்டவம்

அட்லாண்டிக் புயல்களில் மிக சக்திவாய்ந்த ஒன்றாகக் கருதப்படும் ‘மெலிசா’ புயல், ஹெய்ட்டி மற்றும் ஜமைக்காவில் கடும் சேதத்தை ஏற்படுத்தியதோடு, தற்போது கியூபாவைத் நோக்கி நகர்வதா சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

புயல் தாக்கத்தினால் ஏற்ப்பட்டுள்ள அனர்த்தங்களுக்கு இதுவரை 26 பேர் பலியாகியுள்ளனர். அவர்களில் 25 பேர் ஹெயிட்டி நாட்டவர்கள் என தெரியவந்துள்ளது. அமெரிக்க தேசிய சூறாவளி மையத்தின் பதிவுகளில் உள்ள சக்திவாய்ந்த புயல்களில் ஒன்றாக மெலிசா அடையாளம் காணப்பட்டுள்ளது.

புயலின் வேகத்தால் வீடுகளின் கூரைகள் அடித்து சென்றன, விவசாயப் பகுதிகள் நீரில் மூழ்கின, மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால், ஜமேய்காவின் ஆயிரக்கணக்கான மக்கள் மின் துண்டிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை புயல் தாக்கம் காரணமாக கியுபாவில் 7,35,000க்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எங்களது  சமூகவலைதள  பக்கங்களை  பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு

எனவே எமது ஆய்வின் அடிப்படையில் மெலிசா புயலின் மையப் பகுதிக்குச் சென்று அமெரிக்க படை வீரர்களினால் எடுக்கப்பட்ட காணொளி என சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளியானது AI தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டுள்ளமை கண்டறிப்பட்டது.

குறிப்பு: 53வது வானிலை மறுபரிசீலனைப் படையைச் சேர்ந்த அமெரிக்க விமானப்படையின்   “Hurricane Hunter” குழுவினர் அக்டோபர் 27 ஆம் திகதியன்று மெலிசா புயலின் உண்மையான காட்சிகளைப் பதிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம். 


இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Avatar

Title: “மெலிசா” புயலின் மையப்பகுதியின் காணொளியா இது?

Fact Check By: Suji shabeedharan 

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *