
பௌத்த புனித சின்னத்தை அவமதித்த அரபு கல்லூரி மாணவர்களுக்கு பாரபட்சமின்றி தண்டனை வழங்க வேண்டும் என வீரகேசரி இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தாக ஒரு ஸ்கிரின் ஷாட் (screenshot) ஒன்று பேஸ்புக் தளத்தில் பரப்பப்பட்டு வருகின்றது.
குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிய நாம் ஆய்வினை மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
Rizal Max என்ற பேஸ்புக் கணக்கில் “பௌத்த புனித சின்னத்தை அவமதித்த அரபு கல்லூரி மாணவர்களுக்கு பாரபட்சமின்றி தண்டனை வழங்க வேண்டும் ” என்று ஒரு ஸ்கிரின் ஷாட் (screenshot) கடந்த 10 ஆம் திகதி (10.10.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த ஸ்கிரின் ஷாட்டிலுள்ள ”பௌத்த புனித சின்னத்தை அவமதித்த அரபு கல்லூரி மாணவர்களுக்கு பாரபட்சமின்றி தண்டனை வழங்க வேண்டும்“ என்ற செய்தி தலைப்பினை வீரகேசரி இணையத்தளத்தில் தேடுதல் மேற்கொண்டோம்.
குறித்த தேடலின் போது வீரகேசரி இணையத்தளத்தில் அவ்வாறான செய்தி வெளியாகியில்லை.
மேலும் குறித்த பதிவிலுள்ள செய்தி லிங்கினை நாம் தேடிய போது,
இந்த செய்தி லிங்கில் , “சென்னையில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாய்க்கு தாலி கட்டி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்திய 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.” என்ற செய்தியே பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டிருந்தது. (முழு செய்தி)
வீரகேசரி பேஸ்புக் பக்கத்தில் நாம் தேடிய போது குறித்த நியூஸ் கார்டு காணப்படவில்லை.
மேலும் fotoforensics.com இணையத்தளத்தில் நாம் குறித்த ஸ்கிரின் ஷாட்டை பரிசோதனை செய்தவேளையில், குறித்த புகைப்படம் Photoshop செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இச்செய்தி தொடர்பில் உண்மை தன்மையினை கண்டறிய நாம் வீரகேசரி இணையத்தள பிரிவுடன் தொடர்பு கொண்டு வினவிய வேளையில், இது போலியான செய்தி என்றும், அவர்களின் இணையதளத்தில் அவ்வாறு வெளியிடவில்லை என்றும் மறுப்பு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அடிப்படையில் வீரகேசரியில் வெளியான செய்தி என பரப்பப்படும் ஸ்கிரின் ஷாட் போலியானது என முடிவு செய்யப்படுகிறது.

Title:பௌத்த புனித சின்னத்தை அவமதித்த அரபு கல்லூரி மாணவர்களுக்கு பாரபட்சமின்றி தண்டனையா?
Fact Check By: Nelson ManiResult: False
