Archives

இலங்கையில் உள்ள ராவணன் கோட்டையின் புகைப்படம்- உண்மை என்ன?

இலங்கையில் அமைந்துள்ள ராவணன் கோட்டையில் அமைந்துள்ள பாரிய படிகள் என்றும் அதை கட்டியவனும், அதில் நடந்தவனும் எத்தனை பெரிதாய் இருந்திருப்பான் என ஒரு புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பரவுவதை நாம் அவதானித்தோம். குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுப்பட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Batti memes factory என்ற பேஸ்புக் பக்கத்தில் “இலங்கை ராவணன் கோட்டை தான்… ஆனா இந்த படி எங்க இருக்கு என்டு எனக்கே தெரியல….😲😲 […]

Continue Reading

பண்டாரகொஸ்வத்தையில் முஸ்லிம் ஒருவரின் கடை எரிப்பா?

இலங்கையில் கடந்த சனிக்கிழமை (16.11.2019) அன்று நடந்த ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் கடந்த ஞாயிற்றுகிழமை அன்று உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும், குறித்த தினத்தில் முஸ்லிம் ஒருவரின் கடையெரிப்பு என செய்தி பேஸ்புக்கில் பரப்பப்பட்டுள்ளது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  SL muslim media என்ற பேஸ்புக் பக்கத்தில் “பண்டாரகொஸ்வத்தையில் முஸ்லிம் ஒருவரின் கடையெரிப்பு.” என்று கடந்த ஞாயிற்று கிழமை  (17.11.2019) பதிவேற்றம் […]

Continue Reading

தமிழில் தேசிய கீதம் பாட தடையா?

இலங்கையில் கடந்த சனிக்கிழமை (16.11.2019) அன்று நடந்த ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் இலங்கையின் ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்ச கடந்த திங்கள் கிழமை (18.11.2019) பதிவி பிரமானம் செய்துகொண்டார். இதேவேளையில் சிலர் பேஸ்புக் மற்றும் சில இணையத்தளங்களில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச இலங்கை தேசிய கீதம் சிங்களத்தில் மாத்திரமே பாடவேண்டும் என தெரிவித்ததாக செய்திகள் வெளியிட்டிருந்தன. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுப்பட்டோம். தகவலின் […]

Continue Reading

மெசேஜ் ஷேர் செய்தால் 10 பைசா கிடைக்குமா?

எனக்கு இதயப் புற்று நோய் உள்ளது. இதற்கு அறுவை சிகிச்சை செய்ய 6 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு ஷேருக்கும் 10 பைசா எனக்கு கிடைக்கிறது என பேஸ்புக் பக்கத்தில் ஒரு செய்தி பரவி வருகின்றது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுப்பட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Saravana L என்ற பேஸ்புக் கணக்கில் “pls share pannunga  0771926984 என் பெயர் *NIROSA* […]

Continue Reading

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மரணமா?

இலங்கையின் தற்போதைய எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச மரணித்ததாக பேஸ்புக்கில் தகவல் பரவி வருகின்றது. இது தொடர்பான உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் எமது ஆய்வினை மேற்கொள்ள திட்டமிட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Kinniya King FirdhouZe என்ற பேஸ்புக் கணக்கில் “இலங்கை முன்னாள் ஐனாதிபதி மகிந்த ராஜபக்ஷ காலமானார். இருளில் மூழ்கியது இலங்கை“ என்று நேற்று (12.11.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. மேலும் குறித்த பதிவேற்றத்தில் EELAMALAR.COM இன் […]

Continue Reading

அம்பலன்கொடை தேர்தல் தொகுதியில் சஜித் பிரேமதாஸவுக் கூடிய மக்களா இது?

இலங்கையின் 8 ஆவது ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் மிக முக்கியமான ஜனாதிபதி தேர்தல் வருகின்ற 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. குறித்த தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவினால் காலி மாவட்டத்தில் அம்பலன்கொடை தேர்தல் தொகுதியில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு வருகை தந்த மக்கள் தொகையினர் என சில புகைப்படங்கள் பேஸ்புக் பக்கங்களில் பகிரப்படுகின்றது. இது தொடர்பான உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் எமது ஆய்வினை மேற்கொள்ள திட்டமிட்டோம். தகவலின் விவரம்: Facebook […]

Continue Reading

தமிழர்களும், முஸ்லிம்களும் உடமைகளுடன் வெளியேற வேண்டும் என ஞானசார தேரர் சொன்னாரா?

பொதுபல சேனாவின் தலைவர் கலகொட அத்த ஞானசார தேரர் ”கோட்டபாய ராஜபக்சவுக்கு வாக்களிக்காவிட்டால் தமிழர்களும், முஸ்லிம்களும் உடமைகளுடன் வெளியேற வேண்டி ஏற்படும்” என்று தெரிவித்ததாக ஒரு பதிவு பேஸ்புக் பக்கங்களில் பகிரப்பட்டு வருகின்றது. கடந்த மாதம் 30 ஆம் திகதி (30.10.2019) நடந்த ஊடக சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்தாக குறிப்பிட்டப்பட்டுள்ளது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Navaa Yugha என்ற பேஸ்புக் […]

Continue Reading

டட்யானா கையில் ஏந்தியுள்ள குழந்தை யாருடையது?

இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரான மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் – ரோஹித்த மற்றும் டட்யானா தம்பதியினருக்கு கடந்த மாதம் 30 ஆம் திகதி (30.10.2019) காலை ஆண் குழந்தை பிறந்தது. இதன்போது, டட்யானா கையில் குழந்தையினை ஏந்தியவாறு ஒரு புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Sivarajah Ramasamy என்ற பேஸ்புக் கணக்கில் “எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் […]

Continue Reading

பரவை முனியம்மா காலமானாரா?

நாட்டுப்புற பாடகரும், நடிகருமான பறவை முனியம்மா காலமானார் என இணையத்தில் செய்தி ஒன்று பரவலாக பகிரப்பட்டு வருகின்றது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுப்பட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Rizvi Hussain என்ற பேஸ்புக் கணக்கில் “நாட்டுப்புற பாடகரும், நடிகருமான பறவை முனியம்மா காலமானார்,“ என்று கடந்த மாதம் 22 ஆம் திகதி (22.10.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அதில் பரவை முனியம்மா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவாறு ஒரு புகைப்படம் […]

Continue Reading

உண்மையிலேயே பேச்சிப்பாறை அணைக்கட்டில் இடி விழுந்ததா?

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணைக்கட்டில் இடி விழுந்ததாக ஒரு காணொளி இணையத்தில் பரவி கொண்டுள்ளது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  ECHO Tamil News என்ற பேஸ்புக் பக்கத்தில் “கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிபாறை அணைக்கட்டில் இருந்து வரும் ஆற்றில் வில்லுக்குறி அருகில் தண்ணீரில் இடி விழுவதை பாருங்கள்! CCTV captured. By Nanjil Asokan. “ என்று கடந்த மாதம் 22 […]

Continue Reading

உண்மையிலேயே இது தான் சுஜித்தா?

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்கும் பணி 80 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. ஆனால் மீட்பு பணிகள் இறுதியில் தோல்வியில் முடிந்துவிட்டன. குறித்த சம்பவத்தின் போது ஆள்துளை கிணற்றில் சிக்கிய சுஜித்தின் பழைய காணொளி மற்றும் புகைப்படங்கள் என ஒரு குழந்தையின் புகைப்படம் மற்றும் காணொளிகள் இணையத்தில் பலராலும் பகிரப்பட்டது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுப்பட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | […]

Continue Reading

இஸ்லாத்தை தழுவினாரா ஷிராந்தி ராஜபக்ச?

முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ச அவர்களின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ச இஸ்லாம் மதத்தினை தழுவியதாக பேஸ்புக் பக்கங்களில் பகிரப்படுகின்றது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுப்பட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Hussain Jasmeen என்ற பேஸ்புக் பக்கத்தில் “இன்று வெள்ளிக் கிழமை நல்ல நாள் என்பதால் இஸ்லாத்தை தழுவினார்.. முன்னாள் ஜனாதிபதி #மஹிந்த #ராஜபக்ச வின் மனைவி #சிறாந்தி #ராஜபக்ச !! “அல்ஹம்துலில்லாஹ”” என்று கடந்த வெள்ளிக்கிழமை […]

Continue Reading

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டாரா ஹிருனிகா?

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ஹிருனிகா பிரேமசந்திர இஸ்லாம் மதத்தினை தழுவியதாக பேஸ்புக் பக்கங்களில் பகிரப்படுகின்றது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுப்பட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Kalmunai Pasanga என்ற பேஸ்புக் பக்கத்தில் “இன்று வெள்ளி கிழமை ஜும்மாவை தொடர்ந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஹிருனிகா… அதிகமாக செயார் செய்யுங்கள்… ” என்று இன்று (25.10.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. Fact Check (உண்மை அறிவோம்)  இது […]

Continue Reading

பலாங்கொடையில் கோட்டபாய ராஜபக்ச கூட்டத்தின்போது இலங்கை கொடியில் மாற்றமா?

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டபாய ராஜபக்சவின் தேர்தல் பிரச்சார கூட்டம்  கடந்த 16 ஆம் திகதி (16.10.2019) பலாங்கொடையில் நடைப்பெற்றது. குறித்த கூட்டத்தின் போது இலங்கை தேசிய கொடியில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை குறிக்கும் பச்சை மற்றும் செம்மஞ்சள் நிறங்கள் அகற்றப்பட்ட கொடி ஏந்தியதாக பேஸ்புக் பக்கத்தில் புகைப்படங்கள் பகிரப்படுகின்றன. இது தொடர்பான உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் ஆய்வினை மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  […]

Continue Reading

முஸ்லீம் பகுதிகளின் அபிவிருத்திகளை தடுக்க, கோட்டபாயவிற்கு வாக்களிக்க வேண்டும் என்றாரா நாமல்?

கடந்த சனிக்கிழமை மன்னாரில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டபாய ராஜபக்ஷவிற்கு ஆதரவாக மேற்கொண்ட பிரசாரத்தின் போது” முஸ்லீம் பகுதிகளின் அபிவிருத்திகளை தடுப்பதற்கு, நீங்கள் கோத்தாபாயவிற்கு வாக்களிக்க வேண்டும்.” என தெரிவித்தாக UTV Tamil செய்தி வெளியிட்டிருந்தது. குறித்த செய்தி தொடர்பான உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் ஆய்வினை மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  கிரிகெட் தல என்ற பேஸ்புக் கணக்கில் […]

Continue Reading

அமேசன் நடுவில் அல்லாஹ் என்ற வார்த்தை வடிவில் நீர் வீழ்ச்சி?

அமேசன் காட்டின் நடுவில் அல்லாஹ் என்ற வார்த்தை வடிவில் நீர் வீழ்ச்சி உள்ளதாக பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றது. குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மை தன்மையினை கண்டறிய நாம் ஆய்வினை மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  பரபரப்பு நீயூஸ் என்ற பேஸ்புக் பக்கத்தில் “அமேசான் காட்டின் நடுவில் *அல்லாஹ் என்ற வார்த்தை வடிவில்* நீர் வீழ்ச்சி ஒன்று இரகசியமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனைக் காண்பவர்கள் இஸ்லாத்தை தழுவுகின்றனர் என்ற காரணத்தினால் , பிரேசில் […]

Continue Reading

சீமான் பேச்சு தொடர்பாக விடுதலைப்புலிகள் அறிக்கை வெளியிட்டனரா?

விக்கிரவாண்டி அருகே நேமூரில் கடந்த 14 ஆம் திகதி (14.10.2019) அன்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்று பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ராஜீவ் காந்தியை தாங்கள் தான் கொலை செய்ததாக தெரிவித்தார்.  அவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ராஜீவ் கொலையில் தொடர்பு இல்லை – விடுதலைப் புலிகள் பெயரில் லதன் சுந்தரலிங்கம், குருபரன்சாமி அறிக்கை வெளியானது என செய்தி பரவுகின்றது. குறித்த செய்தி தொடர்பிலான உண்மை தன்மையினை கண்டறிவதற்கு […]

Continue Reading

காலிமுகத்திடல் கூட்டத்திற்காக வந்தவரை கோட்டபாய தரப்பினர் தாக்கினரா..?

இலங்கையில் தற்போது ஜனாதிபதி தேர்தலில் நிமிர்த்தமாக தேர்தல் பிரசார நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவின் முதலாவது கூட்டம் காலி முகத்திடலில் கடந்த 10 ஆம் திகதி (10.10.2019) அன்று நடைப்பெற்றது. குறித்த கூட்டத்திற்கு வந்த ஒரு நபரை தாக்கியதாக சில புகைப்படங்கள் பேஸ்புக் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. இது குறித்தான உண்மை தன்மையினை கண்டறிய நாம் ஆய்வினை மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  […]

Continue Reading

பௌத்த புனித சின்னத்தை அவமதித்த அரபு கல்லூரி மாணவர்களுக்கு பாரபட்சமின்றி தண்டனையா?

பௌத்த புனித சின்னத்தை அவமதித்த அரபு கல்லூரி மாணவர்களுக்கு பாரபட்சமின்றி தண்டனை வழங்க வேண்டும் என வீரகேசரி இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தாக ஒரு ஸ்கிரின் ஷாட் (screenshot) ஒன்று பேஸ்புக் தளத்தில் பரப்பப்பட்டு வருகின்றது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிய நாம் ஆய்வினை மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Rizal Max என்ற பேஸ்புக் கணக்கில் “பௌத்த புனித சின்னத்தை அவமதித்த அரபு கல்லூரி மாணவர்களுக்கு பாரபட்சமின்றி தண்டனை வழங்க […]

Continue Reading

வைகை புயல் வடிவேலுவின் பிறந்தநாள் எப்போது?

தமிழ் திரையுலகத்தினை தமது காமெடி நடிப்பினால் தம் கைவசம் இன்று வரை வைத்துள்ளவர் என்றால் அது நடிகர் வடிவேலு தான். வடிவேலுவின் பிறந்தநாள் எப்போது என்று பலர் மத்தியில் இன்னும் குழப்பநிலை காணப்படுகின்றது. மேலும், நேற்று (10.10.2019) தான் நடிகர் வடிவேலுவின் பிறந்தநாள் என்று பலர் தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியிருந்தனர். இது குறித்து உண்மை தன்மையினை கண்டறிய நாம் ஆய்வினை மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Selvaraj Kulandaivelu என்ற […]

Continue Reading

கடந்த உள்ளூராட்சி தேர்தல் வாக்குகளின் எண்ணிக்கை சரியா?

இலங்கையில் தற்போது தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.  இந்நிலையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இன்று (09.10.2019) இலங்கை சுகந்திர கட்சியும் இணைந்தது. தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Niyas Shifat என்ற பேஸ்புக் கணக்கில் “கை ; மொட்டு இணைந்துள்ளது கடந்த உள்ளுராட்சி தேர்தல் வாக்குளின் கருத்துக்கணீப்பின் படி இலகுவான வெற்றியை ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபாய ராஜபக்ச பெறுவார்.-அரசியல் விமர்சகர் ஜோன் பிரீஸ்- ” என்று இன்று (09.10.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அத்துடன் […]

Continue Reading

ஜனாதிபதி தேர்தலில் அஸாத் சாலி களமிறங்குகிறாரா?

இலங்கையில் 7 ஆவது ஜனாதிபதி தேர்தல் வருகின்ற மாதம் 16 ஆம் திகதி (16.11.2019) அன்று  நடப்பெறவுள்ளது. இந்நிலையில் அஸாத் சாலி தலைமையிலான தேசிய ஐக்கிய முன்னணி அணி களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த செய்தி தொடர்பில் உண்மை தன்மையினை கண்டறிய நாம் ஆய்வினை மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Madawala News என்ற பேஸ்புக் பக்கத்தில் “ஜனாதிபதி தேர்தலில் அஸாத் சாலி தலைமையிலான நுஆ போட்டி!!” என்று கடந்த முதலாம் […]

Continue Reading

அதுரலிய ரத்ன தேரர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவா..?

இலங்கையில் 8 ஆவது ஜனாதிபதி தெரிவு செய்வதற்காக வருகின்ற மாதம் 16 ஆம் திகதி (16.11.2019) அன்று ஜனாதிபதி தேர்தல் நடப்பெறவுள்ளது. இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாச அவர்களுக்கு அதுரலிய ரத்ன தேரர் ஆதரவு வழங்குவதாக பேஸ்புக் சமூகவலைத்தளத்தில் செய்திகள் வெளிவந்துள்ளன. குறித்த செய்தி தொடர்பில் உண்மை தன்மையினை கண்டறிய நாம் ஆய்வினை மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Haala Media என்ற பேஸ்புக் பக்கத்தில் […]

Continue Reading

மரத்தை வெட்டினால் இரத்தம் வருகிறதா?

ஏமன் நாட்டில் உள்ள மரம், ஆதாமின் மகன் ஆபேல் கொல்லப்பட்ட இடம் என்று கூறப்படுகிறது, வெட்டினால் இரத்தம் வடிகின்றது என்று காணொளி ஒன்று பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றது. குறித்த வீடியோ தொடர்பில் உண்மைத் தன்மையினை கண்டறிய நாம் ஆய்வினை மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link பரபரப்பு நீயூஸ் என்ற பேஸ்புக் கணக்கில் “ஏமன் நாட்டில் உள்ள மரம், ஆதாமின் மகன் ஆபேல் கொல்லப்பட்ட இடம் என்று கூறப்படுகிறது, வெட்டினால் இரத்தம் வடிகின்றது, […]

Continue Reading

ஐ.தே.க வுடன் இணைந்தாரா சுசந்த புஞ்சிநிலமே..?

இலங்கையில் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச அறிவிக்கப்பட்டதன் அடுத்து சில கட்சி தாவுதல்கள் இடம்பெற்று வருகின்றனர்.  அதில்,இலங்கை சுகந்திர கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சுசந்த புஞ்சிநிலமே ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு அளிப்பதாக பேஸ்புக் சமூகவலைத்தளத்தின் ஊடாக செய்திகள் பரவி வருவது தொடர்பில் உண்மை தன்மையினை கண்டறியும் முயற்சியில் ஈடுப்பட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link […]

Continue Reading

முல்லைத்தீவில் கரையொதுங்கிய புள்ளிச்சுறா இதுவா?

இலங்கையின் முல்லைத்தீவு கடற்கரையில் கரையொதுங்கிய புள்ளி சுறாவை குறித்த பகுதி மீனவர்கள் பாதுகாப்பாக மீண்டும் கடலுக்குள் விட்டுள்ளதாக கடந்த மாதம் 4 ஆம் திகதி (04.09.2019) இணையத்தில் செய்திகள் வெளியாகியிருந்தன. அந்த செய்தியில் பகிரப்பட்ட புள்ளி சுறாவின் புகைப்படம் தொடர்பில் உண்மைதன்மையினை கண்டறியும் முயற்சியில் எம் குழு இறங்கியது. தகவலின் விவரம்: Facebook Link | Archived Link செட்டிகுளம் என்ற பேஸ்புக் பக்கத்தில் “முல்லைத்தீவு கடற்கரயில் கரையொதுங்கிய புள்ளிச்சுறா; மீனவர்கள் செயல் பாராட்டப்படவேண்டியது !” என்று […]

Continue Reading

6 மாத குழந்தை தொட்டால் பல்பு எரியுதா..?

இந்தியாவில், ஆந்திராவில் 6 மாத பெண் குழந்தையின் உடலில் பட்டவுடன் பல்ப் எரியும் அதிசயம் என்ற செய்தி மிகவும் பிரசியடைந்து வருகின்றது. இது குறித்து உண்மைதன்மையினை கண்டறியும் முயற்சியில் எம் குழு இறங்கியது. தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Tamil Super Scence என்ற பேஸ்புக் பக்கத்தில் “6 மாத குழந்தை தொட்டால் மின்சார பல்பு ? எரியும் அதிசயம்” நேற்று (30.09.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. குறித்த பதிவில் ஒரு காணொளி பதிப்பும் […]

Continue Reading

இலங்கை தமிழர் கோயிலில் சிங்கள இனவெறித் தாக்குதலா?

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தினுள் அடாத்தாக குருகந்த புராண ரஜமகா பௌத்த விகாரை எனும் பெயரில் விகாரை அமைத்து அங்கு தங்கியிருந்த சர்ச்சைக்குரிய பௌத்த பிக்குவான மேதாலங்கார கீர்த்தி புற்று நோய் காரணமாக கொழும்பில் 21 ஆம் திகதி (21.09.2019) காலை காலமானார். அவருடைய பூதவுடலை முல்லைத்தீவுக்கு கொண்டு வந்து நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அண்மித்த பகுதியில் இறுதி கிரியைகளை முன்னெடுத்து உடலை தகனம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றன. இதனால் குறித்த பகுதியில் […]

Continue Reading

எல்ல காட்டுப்பகுதியில் தீயென பரவிய புகைப்படம் உண்மையா..?

கடந்த ஆகஸ்ட் மாதம் உலக மக்களே பேசிக் கொண்டிருந்த ஒரு சம்பவம் என்றால் அமேசான் காடுகளில் பரவிய தீ என்பது யாவரும் அறிந்த உண்மையே. அக்காலத்தில் இலங்கையில் எல்ல காட்டு பகுதியிலும் தீ பரவியதாக சில நபர்கள் பரப்பிய செய்தி நாம் காணக்கூடியதாக இருந்தது. இதன் உண்மைத்தன்மையினை நாம் கண்டறிய ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விபரம் : Nawalapitiya Memes | Archived Link Nawalapitiya Memes என்ற பேஸ்புக் பக்கத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 22 […]

Continue Reading

காஷ்மீரில் இந்திய இராணுவத்தின் அட்டகாசமா..?

காஷ்மீரில் இந்திய இராணுவத்தின் அட்டகாசம் என சமூகவலைத்தளங்களில் சில புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த புகைப்படங்களின் உண்மை தன்மையினை கண்டறிய நாம் ஆய்வினை மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Sri Lankan Muslims | Archived Link Sri Lankan Muslims பேஸ்புக் பக்கத்தில் ”இரத்தம் சிந்தும் காஷ்மீர்!! இந்தியாவின் காஷ்மீரில் இந்திய இராணுவத்தின் அட்டகாசம் உலக மீடியாவினால் மறைக்கப்படுகிறது. இதனை அதிகம் பகிர்ந்து உலகின் கவனத்தை பெற்றுக்கொடுப்போம்.” என்ற பதிப்போடு ஒரு புகைப்படம் ஒன்று கடந்த […]

Continue Reading

Bigg Boss -04இல் சூர்யா ; சிறையில் சரணடைந்தாரா கமல் ..?

இந்திய தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் 4 தொகுப்பாளராக சூர்யா செயல்படவுள்ளதாகவும், கமல்  சிறையில் சரணடைந்ததாக வெளியான செய்தி தொடர்பில் உண்மையினை கண்டறிய ஆய்வினை நாம் மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link | News Link | Archive Link Sooriyan Fm பேஸ்புக் பக்கத்தில், “ Bigg Boss -04இல் சூர்யா ; சிறையில் சரணடைந்த கமல் !! ” என்று குறிப்பிட்டுள்ளது. புகைப்படத்தில் […]

Continue Reading

கோட்டபாய ராஜபக்சவை கைது செய்ய சிஐடி மனு தாக்கலா?

இலங்கை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டபாய ராஜபக்ஷவை கைது செய்ய சிஐடி தாக்கல் செய்த மனு நீதிமன்றத்தால் நிராகரிப்பு செய்யப்பட்டது என்ற செய்தி வெளியாகி சமூகவலைத்தளங்களில் இது குறித்து பரபரப்பாக பேசப்பட்டது. தகவலின் விவரம்: Madawala News | Archived Link Madawala News என்ற பேஸ்புக் பக்கம் கோட்டபாய ராஜபக்‌ஷவை கைது செய்ய C I D தாக்கல் செய்த மனு நீதிமன்றத்தால் நிராகரிப்பு என்ற செய்தியை கடந்த செப்டெம்பர் மாதம் 20 ஆம் […]

Continue Reading

பாகிஸ்தானில் மதக்கலவரம் என்று வெளியான புகைப்படங்கள் உண்மையா?

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கொட்கி நகரிலுள்ள பாடசாலை ஒன்றில் பணியாற்றிய  சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த அதிபர் மத நிந்தனையில் ஈடுபட்டதாக அந்தப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் முறைப்பாடு செய்ததையடுத்து அந்தப் பிராந்தியத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (15.09.2019) பாரிய மதக் கலவரம் இடம்பெற்றுள்ளது. தகவலின் விவரம்: Virakesari | Archived Link Virakesari என்ற பேஸ்புக் பக்கத்தில் கடந்த செவ்வாய் கிழமை (17.09.2019) ”பாகிஸ்தானில் மதக்கலவரம்” என்ற பதிப்போடு ஒரு செய்தி வெளியிடப்பட்டிருந்தது. குறித்த பதிவில் […]

Continue Reading

கடந்த தேர்தல்களில் ஜனாதிபதிகள் பெற்ற வாக்கு சதவீதம் உண்மையா?

கடந்த கால ஜனாதிபதி தேர்தல்களில் ஜனாதிபதிகள் பெற்ற வாக்குகளின் சதவீதத்தினை கொண்ட புகைப்படம் ஒன்று பேஸ்புகில் பகிரப்பட்டு வருவதை காணக்கிடைக்கின்றது. தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Ceylon Magazine என்ற பேஸ்புக் பக்கத்தில் ”கடந்த தேர்தல்களில் ஜனாதிபதிகள் பெற்ற வாக்குகள் சதவீதம்” என்ற பதிப்போடு இலங்கை ஜனாதிபதிகளின் புகைப்படங்கள் மற்றும் அவர்கள் பெற்ற வாக்கு சதவீதங்கள் இடப்பட்ட புகைப்படம் ஒன்றும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. குறித்த பதிப்பானது கடந்த 11 ஆம் (11.09.2019) அன்று […]

Continue Reading

நீண்டநேரம் டயபர் அணிவித்த தாய்; குழந்தை புற்றுநோயால் மரணமா?

நீண்ட நேரம் டயபர் அணிவித்தமையால் குழந்தைக்கு புற்று நோய் தோற்று ஏற்பட்டு மரணித்துள்ளாதாக நியூஸ் 7 தமிழ் தொலைகாட்சியின் நியூஸ் டைட்டில் காட் ஒன்று பேஸ்புக் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Mohammed Peer Sheik என்ற நபரின் பேஸ்புக் கணக்கில் ”தாய்மார்கள் கவனத்திற்க்கு” என்ற பதிவோடு நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் நியூஸ் டைட்டில் காட் ஒன்று கடந்த முதலாம் திகதி (01.09.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. […]

Continue Reading

தெஹிவளை மிருகக் காட்சி சாலையிலிருந்து தப்பிச் சென்றதா சிங்கம்?

கொழும்பு தெஹிவளை மிருகக்காட்சி சாலையிலிருந்து சிங்கம் ஒன்று தப்பிச்சென்றுள்ளதாகவும், குறித்த சிங்கம் இரவு வேளையில் தெஹிவளை சந்தியில் திரிந்ததாக ஒரு புகைப்படத்துடன் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்ட பதிவு பலராலும் பகிரப்பட்டிருந்தது. தகவலின் விவரம்: Abdul Hakeem Sha | Archived Link Abdul Hakeem Sha என்ற நபரின் பேஸ்புக் கணக்கில் “colombo Dehiwala junction…,.. சில தினங்களுக்கு முன் – தெஹிவளை மிருகக் காட்சிசாலையிலிருந்து தப்பிச் சென்ற சிங்கம் தெஹிவளை சந்தியால் இரவில் வலம் வரும் […]

Continue Reading

பெண் சிசுவை கொலை செய்யாதவர்கள், அதிக தான தர்மம் வழங்குவதில் முதலிடம் இஸ்லாமியர்களா?

இந்திய அளிவில் இஸ்லாமியர்கள் பெண் சிசுவை கொலை செய்யாதவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்ததாகவும், அதற்காக மகளிர் ஆணையம் பாராட்டு விடுத்துள்ளதாகவும்,அதிக தான தர்மம் வழங்குவதில் உலக அளிவில் முஸ்லிம்கள் முதலிடம் வகிப்பதாக மனித உரிமை ஆணையம் பாராட்டு என்ற இரு தலைப்பில் பேஸ்புக்கில் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Islamic Daily Reminders | Archived Link Islamic Daily Reminders என்ற பேஸ்புக் பக்கம் கடந்த […]

Continue Reading

முரளிதரன் மரணம்; பகிரப்படும் மரண அறிவித்தல் போஸ்டர் உண்மையா?

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சூழல் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் இறந்துவிட்டதாகக் கூறி, போஸ்டர் ஒன்று பேஸ்புக்கில் பலராலும் பகிரப்பட்டு வருகின்றது. தகவலின் விவரம்: Jekan Jekan | Archived Link ராக்குரிசி அம்மன் முந்தல் | Archived Fact Check (உண்மை அறிவோம்) குறித்த பதிவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள முரளிதரனின் மரண அறிவித்த போஸ்டர் போலியானதோடு, அதில் பதிவேற்றம் செய்துள்ள கருத்துக்கள் அவர்களின் தனிப்பட்ட கருத்தாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. Google இல் முத்தையா முரளிதரனின் […]

Continue Reading

இலங்கையருக்கு விசா இன்றி கனடா வர அனுமதியா…?

இலங்கையருக்கு விசா இன்றி கனடா வருவதற்கு பாராளுமன்றத்தில் அனுமதிக்குமாறு கனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே உத்தரவிட்டுள்ளதாக சமூகவலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகின்றது. தகவலின் விவரம்: குறித்த செய்தியில் இலங்கையர்கள் வீசா இன்றி கனடாவிற்குள் பிரவேசிக்க அனுமதிக்குமாறு பிரதமர் உத்தரவு❗ இலங்கையர்கள் வீசா இன்றி கனாடவிற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்குமாறு கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே அந்நாட்டு நாடாளுமன்றிற்கு உத்தரவிட்டுள்ளார். வீசா இன்றி நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கும், பணி அனுமதி (வேர்க் பேர்மிட்) வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள […]

Continue Reading

விடுதலைப்புலிகள் குறித்து முரளிதரன் உண்மையில் விமர்சனம் தெரிவித்தாரா…?

இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் குறித்து பேசப்பட்டு வருகின்ற வேளையில் முத்தையா முரளிதரன் கொழும்பு ஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (08.09.2019 ) இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போது, விடுதலைப் புலிகளுடனான யுத்தம் நிறைவடைந்த நாள் தனக்கு மகிழ்ச்சியான தினம் எனத் தெரிவித்திருந்தமை தொடர்பான செய்திகள் வெளியாகி இருந்தன. தகவலின் விவரம்: டுடே ஜப்நா – Today Jaffna | Archived Link  குறித்த செய்தியில்  #முரளிதரன்.! உன் […]

Continue Reading

பொத்துவில் விகாரை சிலைகள் முஸ்லீம்களால் தாக்கப்பட்டதா?

கிழக்கு மாகாணத்தில் பொத்துவில் கடற்கறை ஓரத்தில் அமைந்துள்ள  முகுது மகா விகாரையில் உள்ள சிலைகள் முஸ்லீம் இனத்தினரால் தாக்கப்பட்டு உடைக்கப்பட்டுள்ளதாக பலர் தங்களின் பேஸ்புக் வழியாக பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். தகவலின் விவரம்: குறித்த விகாரையில் 2013 ஆம் காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் நடத்தப்பட்ட “தெயட கிருல” என்ற கண்காட்சியின் போது சிலைகளை வரிசையாக அடுக்கப்பட்டிருந்த புகைப்படத்தோடு, தற்போது குறித்த சிலைகள் உடைத்து கீழே தள்ளப்பட்டுள்ளவாறு புகைப்படங்கள் பகிரப்படுகின்றன. டுடே ஜப்நா – Today […]

Continue Reading

பாகிஸ்தானைச் சேர்ந்த இந்து பெண் புஷ்பா கோலியா இது?

பாகிஸ்தானைச் சேர்ந்த இந்து பெண் புஷ்பா கோலி. இவர் சிந்து அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்று துணை உதவி ஆய்வாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் சிந்து மாகாணத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தகவலின் விவரம்: குறித்த செய்தியில் புஷ்பா கோலியாக ராணுவ உடையில் ஒரு பெண்ணின் புகைப்படத்துடன் பதிவேற்றம் செய்யப்பட்டு பகிரப்பட்டு வருகின்றது. JVP News | Archived Link Fact Check (உண்மை அறிவோம்) குறித்த புகைப்படத்தினை google reverse […]

Continue Reading

இலங்கை அதிபர் பதவிக்கு போட்டியிடும் கோத்தபய ராஜபக்ச அல்லது சாஜித் பிரேமதாசாவை ஆதரித்து மாடல் அழகி சாந்தனி ஃபெர்னாண்டோ ஓட்டு கேட்டாரா?

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இயங்கும் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனா (எஸ்எல்பிபி), எதிர்வரும் தேர்தலில் அதிபர் வேட்பாளராக திரு.கோத்தபய ராஜபக்சவை அறிவித்துள்ளது. இதையடுத்து, அவருக்கு ஆதரவாகவும், அவரை எதிர்த்தும் சமூக ஊடகங்களில் பலவிதமான பதிவுகள் வைரலாகி வருகின்றன. அதேசமயம், ஐக்கிய தேசிய கட்சி (யூஎன்பி) இதுவரை தனது அதிபர் வேட்பாளர் யார் என அறிவிக்கவில்லை. ஆனால், கண்டிப்பாக, அக்கட்சியின் துணைத் தலைவரும், தற்போது அமைச்சராகவும் உள்ள சாஜித் பிரேமதாசா களம் இறங்குவார் என […]

Continue Reading

ராவணா 1 இனால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உண்மையானதா..?

இலங்கையினை சேர்ந்த பரிசோதனை இன்ஜீனியர்கள் இருவரினால் உருவாக்கப்பட்ட ”ராவணா 1” என்ற விண்கலமானது, கடந்த ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு வட்டப்பாதைக்கு அனுப்பப்ட்ட குறித்த விண்கலமானது கடந்த ஜுலை மாதம் 17 ஆம் திகதி புவியிலிருந்து 400 கிலோ மீற்றர் தூரத்தில் அமையப்பட்டது. விண்வெளியிலிருந்து ராவணா 1 என்ற விண்கலத்தினால் எடுக்கப்பட்ட முதலாவது புகைப்படம் ஆகஸ்ட் 3 ஆம் திகதி வெளியானது.ராவணா 1 இனால் எடுக்கப்பட்டதாக கூறப்படும் இலங்கை புகைப்படங்கள் […]

Continue Reading

SLPP இளையோருக்கான மகாநாட்டின் போது ஊடகவியலாளர் தாக்கப்பட்டாரா..?

இலங்கை பொதுஜன பெரமுனவின் இளையோர் மகாநாட்டின் ஆகஸ்ட் 24 திகதி கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் இடம்பெற்றது.குறித்த நிகழ்விற்கு இலங்கை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டபாய ராஜபக்ஷ கலந்துக்கொண்டார். குறித்த மகாநாட்டிற்கு வருகை தந்த ஊடகவியலாளர் தமது அடையாள அட்டையினை காண்பித்து உள்நுழைய முற்பட்ட வேளையில் தாக்கப்பட்டதாக புகைப்படத்துடன் வெளியாகியுள்ள செய்தி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவைதை காணக்கூடியதாக இருக்கின்றது. இந்நிகழ்வுகள் அனைத்திற்கும் பிறகு, குறித்த மகாநாட்டிற்கு வருகை தந்த ஊடகவியலளார் தாக்கப்பட்டதாக ஒரு புகைப்படம் சமூக […]

Continue Reading

இலங்கையில் 8000 இந்து பெண்களுக்கு கருத்தடை செய்த முஸ்லீம் டாக்டர்?

‘’8000 இந்து பெண்களுக்கு கருத்தடை செய்த இலங்கையை சேர்ந்த முஸ்லீம் டாக்டர் கைது,’’ என்ற தலைப்பில் ஒரு வைரல் ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Hindu Samayam என்ற ஃபேஸ்புக் ஐடி, கடந்த மே 29, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், HinduSamayamTV எனும் இணையதளத்தில் வெளியான செய்தியின் லிங்கை இணைத்துள்ளனர். அந்த செய்தியை படிக்க […]

Continue Reading