இறக்குமதி செய்யப்படும் பொருட்களை குறைந்த விலையில் விற்பனை செய்தால் தண்டனை என ஹந்துன்னெத்தி தெரிவித்தாரா?

முழுமையான அறிக்கைகளில் ஒரு பகுதியை மாத்திரம் எடுத்து, வெவ்வேறு தலைப்புகளுடன் வெளியிடும்போது சில சந்தர்ப்பங்களில் அதன் அர்த்தம் சிதைக்கப்படுகின்றது. அவ்வாறு வெளியிடப்பட்ட ஒரு பதிவு குறித்து ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link “நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விடக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டால் கடும் தண்டனை வழங்கப்படும்” எனும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்தப் பதிவில், […]

Continue Reading

ஹோர்முஸ் ஜலசந்தியில் காத்திருக்கும் கப்பல்கள் என பகிரப்படும் காணொளி உண்மையா?

ஹோர்முஸ் ஜலசந்தியில் காத்திருக்கும் கப்பல்கள் என தெரிவித்து காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் ஹோர்முஸ் ஜலசந்தியில் காத்திருக்கும் இந்தக் கப்பல்கள் அனைத்தின் தலைவிதியும் ஈரானின் கைகளில் உள்ளது. கடந்து செல்லலாம் என்று அது சொன்னால், கடந்து போகலாம். தடை  என சொன்னால், காத்திருக்க வேண்டும். […]

Continue Reading

உதய கம்மன்பிலவின் நூல் வெளியீட்டு நிகழ்வில் சஜித் கலந்துகொண்டமை உண்மை!!

சமூக ஊடகப் பயன்பாட்டில் பெரும்பாலும் காணக்கூடிய விடயம் என்னவென்றால், போலியான தகவல்களைப் பரப்புவதற்காக செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தி சில உள்ளடக்கங்களை  உருவாக்கி அவற்றைச் சமூக ஊடகங்களில் வெளியிடுவதாகும். அதேவேளை, சில உண்மையான சம்பவங்களைக் கூட செயற்கை நுண்ணறிவின் மூலம் உருவாக்கப்பட்டவை எனக் கூறி, உண்மையை மறைப்பதற்கும் இதனைப் பயன்படுத்தும் சந்தர்ப்பங்களைக் காணமுடிகின்றது.  அவ்வாறு பகிரப்பட்ட ஒரு பதிவு தொடர்பில் ஃபேக்ட் கிரஸண்டோ நாம் ஆய்வொன்றை மேற்கொண்டிருந்தோம். தகவலின் விவரம் (What is the claim): Facebook […]

Continue Reading

உண்மையில் பூநகரியில் சல்பியூரிக் தொழிற்சாலைக்கான கட்டுமானம் ஆரம்பிக்கப்படவுள்ளதா?

உலகப் போர் நிலவி வரும் சூழலிலும் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன என்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில், எதிர்வரும் ஏப்ரல் 10ஆம் திகதி பூநகரியில் ஒரு சல்பியூரிக் அமில தொழிற்சாலை தொடங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் […]

Continue Reading

இன்று சர்வதேச உண்மை சரிபார்ப்பு தினம்!

சர்வதேச உண்மை சரிபார்ப்பு தினம் (International Fact-Checking Day) ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. இணையதளங்களில் பரவி வரும் தவறான தகவல்களைத் தடுப்பதற்கும், இணையத்தில் நாம் காணும் அனைத்தும் உண்மையானவை அல்ல என்பதை மக்கள் புரிந்து கொள்வதற்கும் இந்தத் தினத்தைக் கொண்டாடுவது மிகவும் அவசியமாகும். ஒரு குறிப்பிட்ட தினத்தை ஒதுக்கி சர்வதேச உண்மை கண்டறியும் தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டாலும், உண்மையிலேயே தகவல்களைச் சரிபார்க்கும் பழக்கம் ஆண்டின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நபரின் பொறுப்பாக […]

Continue Reading

நாட்டின் வெப்பநிலை 55°C வரை அதிகரிக்கும் என கடும் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளதா?

தற்போது நிலவும் வெப்பமான வானிலை என்பது நாட்டின் அநேகமான பகுதிகளில் வாழும் மக்கள் மத்தியில் பாரிய பேசுபொருளாக மாறியுள்ளது. பிரதான ஊடகங்களும், நிலவும் இந்த  கடும் வெப்பம் குறித்து அதிகளவான செய்திகளை வெளியிட்டு வரும் நிலையில், சமூக ஊடகங்களில் இது தொடர்பான பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. இவ்வாறானதொரு பின்னணியில், சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் மக்களை தவறாக வழிநடத்தக் கூடிய தகவல் தொடர்பில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் உண்மைக் கண்டறியும் ஆய்வை மேற்கொண்டிருந்தது. தகவலின் விவரம் […]

Continue Reading

இறைச்சிக்காக ஏழு நாய்கள் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் கதை உண்மையா?

சமூக ஊடகங்களில் உணர்வுபூர்வமான விடயங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்படும் பதிவுகள் பல சந்தர்ப்பங்களில் பயனர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஒரு புகைப்படம் அல்லது காணொளியை மையமாகக் கொண்டு இத்தகைய பதிவுகள் பரவுகின்றன. ஆனால் அவை உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களா என்பதை பலரும் கவனிக்காமல் இருக்கின்றனர். அவ்வாறு இறைச்சிக்காக கடத்தப்பட்ட ஏழு நாய்கள் உரிமையாளர்களை தேடிச்சென்றதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்ட காணொளி தொடர்பில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் மேற்கொண்ட  உண்மை கண்டறியும் ஆய்வு பின்வருமாறு. தகவலின் […]

Continue Reading

வெள்ளை யானைகள் தொடர்பில் பகிரப்படும் காணொளி உண்மையா?

காரைதீவில் வெள்ளை யானைகள் உலாவியதாக தெரிவிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே இது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் மாவடிப்பள்ளி, நிந்தவூர், சம்மாந்துறைப் பகுதியில் யானைகள் சஞ்சாரம் என சில ஊடகங்களில் செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்தது. காரைதீவில் வெள்ளை யானைகளே உலவியதாகவும் அதனாலேயே அச்செய்திகளிள் காரைதீவு குறிப்பிடப்படவில்லை எனவும் அறியக்கிடைத்துள்ளது. […]

Continue Reading

விரிவுரையாளர் கொலை வழக்கில்  சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சந்தேகநபர் சார்பில் ஆஜராகினாரா?

யாழ். பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீடத்தின் பெண் விரிவுரையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குறித்த விரிவுரையாளரின் மகள் மற்றும் மருமகன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மகள் சார்பில் சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் ஆஜராகியுள்ளார் என தெரிவித்து சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே இது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Threads | […]

Continue Reading

மன்னாரிலுள்ள எண்ணெய் களங்களிலிருந்து விரைவில் எண்ணெய் கிடைக்கும் என அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்தாரா?

இலங்கையில் கனிம எண்ணெய் ஆராய்ச்சியானது தற்போது ஆரம்பமான ஒன்றல்ல. 1974ஆம் ஆண்டு, சோவியத் ஒன்றியம் மன்னார் தீவில் பேசாலை பகுதியைச் சுற்றிய பகுதிகளில் எண்ணெய் ஆய்வுகளை ஆரம்பித்தது. 2011ஆம் ஆண்டு மன்னார் படுகையில் செயலில் உள்ள கனிம எண்ணெய் அமைப்பு இருப்பது அறிவியல் ரீதியாக வெளிப்படுத்தப்பட்டாலும், நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் எண்ணெய் உற்பத்தி இன்னும் ஒரு கனவாகவே இருந்து வருகிறது. எனினும், 2025ஆம் ஆண்டு மன்னார் எண்ணெய் களங்களில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி […]

Continue Reading

எரிபொருளுக்கான QR குறியீட்டை பெறும் இணையதளம் குறித்து அவதானமாக செயற்படுங்கள்!

மத்திய கிழக்கில் போர் நிலைமை தீவிரமடைந்துள்ள நிலையில், தற்போதைய எரிபொருள் பயன்பாட்டை முகாமைத்துவம் செய்வதற்காக QR முறையின் மூலம் எரிபொருள் பெறும் ஒரு திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த QR குறியீட்டை பெறும் இணையதளம் என தெரிவித்து இணைப்பொன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிகின்றது. எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Archived Link QR முறையின் மூலம் எரிபொருள் […]

Continue Reading

நெதன்யாகுவின் கையில் ஆறு விரல்கள் என பகிரப்படும் தகவலின்  உண்மை என்ன?

ஈரான் – இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையில் பலத்த போர் சூழல் நிலவி வரும் நிலையில் பல்வேறு காணொளிகள், புகைப்படங்கள் என்பன இந்த போர் நிலையுடன் தொடர்புபடுத்தி தவறாக வழிநடுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிகின்றது. அந்தவகையில் தற்போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இறந்துவிட்டதகவும் அவர் கடந்த தினத்தில் நேரலையில் பேசிய காணொளி செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டது என்றும் அதில் அவரது கையில் ஆறுவிரல்கள் காணப்பட்டதாகவும் தெரிவித்து ஒரு தகவல் […]

Continue Reading

IRIS Bushehr கப்பலில் 300 குழந்தைகள் இருந்ததாக பகிரப்படும் தகவல் உண்மையா?

இலங்கை கடல் எல்லைக்கு அருகில் உள்ள தனிச்சிறப்பு பொருளாதார கடல் மண்டலத்திற்குள் வந்த மற்றுமொரு ஈரான் கப்பலில் 300 குழந்தைகள் இருப்பதாக தெரிவித்து சமூக ஊடகஙடகளில் பல தகவல்கள் பகிரப்பட்டு வந்தமையை காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link கு𝗝𝗨𝗦𝗧 𝗜𝗡: இலங்கை கடல் எல்லைக்கு அருகில் உள்ள தனிச்சிறப்பு பொருளாதார கடல் மண்டலத்தில் […]

Continue Reading

எதிரி விமானங்களைத் ஏமாற்ற ஈரான் 3D படங்களைப் பயன்படுத்துகிறதா?

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தின் பின்னணியில், ஈரான் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஹெலிகாப்டர் மற்றும் F-14 போர் விமானங்களின் படங்களை நிலத்திலேயே முப்பரிமாண (3D) வடிவில் வரைந்து, அவை உண்மையான விமானங்கள் போலத் தோன்றுமாறு செய்து அவற்றை போர்த் தந்திரமாக பயன்படுத்தியதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மையை கண்டறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook […]

Continue Reading

இஸ்ரேல் படையினர் CCTV கேமராக்களை அகற்றுவதாக பகிரப்படும் காணொளியின் உண்மை என்ன? 

ஈரான் – இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையில் நிலவும் போர் பதற்மானது மத்திய கிழக்கு நாடுகளையும் தற்போது தாக்கி வருகிறகு இந்த சூழலில் போரை மையப்படுத்தி பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை அவதானிக்க முடிகின்றது. அந்தவகையில் இஸ்ரேலின் ரகசியங்கள் கசியாமல் இருப்பற்காக, அந்நாட்டு குடியிருப்புகளில் பொருத்தப்பட்டுள்ளCCTV கண்காணிப்புக் கேமராக்களை அந்நாட்டுப் படையினர் அதிரடியாக அகற்றி வருவதாக தெரிவித்து ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிகின்றது. எனவே இதன் உண்மையை அறிய ஃபேக்ட் […]

Continue Reading

போர் பதற்றம் காரணமாக இலங்கையை பயணம் செய்ய ஆபத்தான நாடாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளதா?

அமெரிக்காவின் தாக்குதலுக்கு உள்ளான ஈரான் கப்பலில் இருந்த பயணிகளை மீட்க விரைவாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை சர்வதேச அளவில் கவனத்தை பெற்றது. இதற்காக பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்தனர். அதேவேளை, சிலர் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிக்கையில், இந்த நடவடிக்கையின் காரணமாக அமெரிக்காவை ஆதரிக்கும் ஏனைய நாடுகளிடமிருந்து இலங்கைக்கு தேவையற்ற பிரச்சினைகள் உருவாகலாம் என்று கூறப்பட்டது. அந்தவகையில், மத்திய கிழக்கில் நிலவும் போர்முனை நிலைமைகளில் நேரடியாக ஈடுபடாத இலங்கையை, மத்திய கிழக்கு நாடுகளுடன் சேர்த்து பயணிப்பதற்கு ஆபத்திற்குறிய நாடாக குறிப்பிடப்பட்டதாக […]

Continue Reading

சவுதி நாட்டிலிருந்து மக்கள் வெளியேறுவதாக பகிரப்படும் காணொளி உண்மையா?

இஸ்ரேல் – அமெரிக்கா மற்றும் ஈரான் இடையில் நிலவும் இந்த போர் நிலைமையானது மத்திய கிழக்கு நாடுகளையும் பெரிதும் பாதித்துள்ளது. அந்தவகையில் மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள அமெரிக்க தளங்களை நோக்கி ஈரான் பாரிய தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் சவுதி அரேபியாவில் இடம்பெறும் தாக்குதல்கள்கள் காரணமாக சவுதி நாட்டிலிருந்து மக்கள் வெளியேறுவதாக தெரிவித்து காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link  […]

Continue Reading

புர்ஜ் கலீஃபா தாக்கப்பட்டதாக பகிரப்படும் காணொளி உண்மையா?

அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையில் நிலவும் போர் பதற்றம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் மத்திய கிழக்கு நாடுகள் மீதும் தொடர் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  அதனை மையமாகக் கொண்டு பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுவரும் நிலையில்,துபாயில் அமைந்துள்ள உலகின்  மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா மீது 1,800 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட் […]

Continue Reading

தப்பியோடும் இஸ்ரேலிய வீரர்கள் என பகிரப்படும் காணொளி தொடர்பான உண்மை என்ன?

அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரான் இடையிலான பதற்றம் நேரடி முழு போராக மாறவில்லை என்றாலும், அதன் தாக்கம் மத்திய கிழக்கு நாடுகளில் பல வழிகளில் உணரப்படுகிறது. அதனடிப்படையில் தற்போது, ஏவுகணை வீச்சிலிருந்து தப்பிக்க போராடும் இஸ்ரேலிய படை வீரர்கள் என தெரிவிக்கப்பட்டு ஒரு காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மையை கண்டறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): […]

Continue Reading

MAS Holdings அதன் சில தொழிற்சாலைகளை மூட தீர்மானம் செய்து, 26,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்ததா?

MAS Holdings குழுமம் நாட்டை விட்டு வெளியேறுகிறது, அதன் செயல்பாடுகளை நிறுத்துகிறது என்ற தலைப்புகளில் அவ்வப்போது சமூக ஊடகங்கள் வழியாக பல தகவல்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. அத்தகைய சூழலில், அந்த குழுமத்திற்குச் சொந்தமான ஆடை உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட மெத்லிய தொழிற்சாலை மற்றும் MAS Holdings தொடர்பாக சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளியாகிவரும் பதிவுகள் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook […]

Continue Reading