எரிபொருளுக்கான QR குறியீட்டை பெறும் இணையதளம் குறித்து அவதானமாக செயற்படுங்கள்!

False இலங்கை | Sri Lanka

மத்திய கிழக்கில் போர் நிலைமை தீவிரமடைந்துள்ள நிலையில், தற்போதைய எரிபொருள் பயன்பாட்டை முகாமைத்துவம் செய்வதற்காக QR முறையின் மூலம் எரிபொருள் பெறும் ஒரு திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த QR குறியீட்டை பெறும் இணையதளம் என தெரிவித்து இணைப்பொன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிகின்றது.

எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook

Archived Link

QR முறையின் மூலம் எரிபொருள் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  எனவே எங்களின் QR குறியீட்டை பெற்றுக்கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்யவும் என தெரிவிக்கப்பட்டு குறித்த பதிவு பகிரப்பட்டிருந்ததுடன், வட்ஸ்அப் ஊடாகவும் இந்த தகவல் பகிரப்படுவதனை காணமுடிந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலையால் எரிசக்தி விநியோகத்திற்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் காரணமாக, தடையின்றி எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்ய வாகனங்களுக்கு QR குறியீட்டு முறையின் மூலம் எரிபொருள் வழங்குவது தொடர்பாக, எரிசக்தி அமைச்சு 2026.03.14 அன்று சிறப்பு அறிவிப்பொன்றை வெளியிட்டது.

அதில், 2026.03.15 அன்று காலை 06 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில், எரிபொருள் கொள்முதல் செய்ய QR குறியீட்டு முறை செயல்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த முழுமையான அறிவிப்பை இங்கே பார்க்கலாம்.

QR குறியீட்டை பெறுவதற்காக அணுக வேண்டிய அதிகாரப்பூர்வ இணையதளம் https://fuelpass.gov.lk என்பது அந்த அறிவிப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அதனைப் பற்றிய தகவல்கள் ஊடகங்களிலும் வெளியிடப்பட்டிருந்தன.Link 

எரிபொருள் அனுமதியை பெறும் இணையதளம் எனக் தெரிவித்து செயல்பட்டு வரும் போலியான இணையதளம்

எரிசக்தி அமைச்சு வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், சமூக ஊடகங்களில் பரவி வரும் இணையதள இணைப்பு எங்கும் குறிப்பிடப்படவில்லை.

இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (Sri Lanka CERT) 

எரிபொருள் அனுமதிப்பத்திரம் வழங்குவதாகக் கூறி, பகிரப்படும் தகவல்களட குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (Sri Lanka CERT) பொதுமக்களை எச்சரித்துள்ளது. 

எனவே, சந்தேகத்துக்கிடமான இணைப்புகளை க்ளிக் செய்யவோ, அதிகாரபூர்வமற்ற இணையதளங்கள், மூலம் பகிரப்படும் QR குறியீடுகளை ஸ்கேன் செய்யவோ வேண்டாம் என பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மோசடி இணையதளங்களில்  சிறிது மாற்றப்பட்ட எழுத்துப்பிழைகள் காணப்படும். ஆகையால், URLஇல் உள்ள இணையதள பெயர்கள் மற்றும் எழுத்துக்களை கவனமாக சரிபார்க்க வேண்டும் என்றும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரே ஒரு அதிகாரபூர்வ இணையதளம் https://fuelpass.gov.lk  என்பதாகும். எனவே  இணைய மோசடி தொடர்பான குற்றங்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்தால் Sri Lanka CERT இற்கு முறைப்பாடு செய்யுமாறும் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

சைபர் பாதுகாப்பு நிபுணர் அசேல வைத்தியாலங்கார

சைபர் பாதுகாப்பு நிபுணர் அசேல வைத்தியாலங்கார, X தளத்தில் வெளியிட்ட பதிவில், சமூக ஊடகங்களில் பரவி வரும் இணைப்பைக் கொண்ட இணையதளம் போலியான இணையதளம் என்றும், அந்த இணையதளத்தில் எந்தவொரு தனிப்பட்ட தகவல்களையும் உள்ளிட வேண்டாம் என்றும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

X

அதேபோல், தேசிய எரிபொருள் அனுமதி QR அமைப்பைச் சார்ந்து பரவி வரும் மோசடி இணையதளங்கள் குறித்து, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமார பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில், சில நபர்கள் தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கும் நோக்கில் போலியான கணக்குகளை உருவாக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தேசிய எரிபொருள் அனுமதி அட்டைக்கான அதிகாரப்பூர்வ இணையதளம் fuelpass.gov.lk என்பதையும், இதற்கு அப்பாற்பட்ட பிற இணையதளங்கள் அல்லது மூன்றாம் தரப்புகளுடன் தனிப்பட்ட தரவுகளை பகிர வேண்டாம் என்றும் பொதுமக்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

எரிபொருள் விநியோகத்திற்காக தேசிய எரிபொருள் அனுமதி (QR குறியீடு) முறையை செயல்படுத்துவது தொடர்பான வழிகாட்டி காணொளி ஒன்றை தற்போது அரசு வெளியிட்டுள்ளது. அந்த முழுமையான காணொளியை  இங்கே காணலாம்.

தேசிய எரிபொருள் அனுமதி (National Fuel Pass) முறையின் மூலம் எரிபொருள் ஒதுக்கீட்டை பெறும் QR குறியீட்டு செயல்முறை வழமைக்கு  திரும்பியது

மேலும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதிக்கப்பட்ட தேசிய எரிபொருள் அனுமதி (National Fuel Pass) முறையின் மூலம் எரிபொருள் ஒதுக்கீட்டை பெறும் QR குறியீட்டு செயல்முறை தற்போது முற்றிலும் வழமை நிலைக்கு திரும்பியுள்ளதாகவும், அது தற்போது செயல்பாட்டில் இருக்கிறதெனவும் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த முழுமையான அறிவிப்பை இங்கே காணலாம்.

எங்களது  சமூகவலைதள  பக்கங்களை  பின்தொடர….

Facebook PageI Twitter PageIInstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு

எனவே எமது ஆய்வின் அடிப்படையில் எரிபொருள் அனுமதியை பெறுவதற்கான இணையதள இணைப்பு என பகிரப்படும் இணைப்பு போலியானது என்பதுடன், QR குறியீட்டை பெற அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ இணையதளம் https://fuelpass.gov.lk என்பவும் கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Result Stamp

Title: எரிபொருளுக்கான QR குறியீட்டை பெறும் இணையதளம் குறித்து அவதானமாக செயற்படுங்கள்!

Fact Check By: Suji shabeedharan

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *