
இலங்கை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டபாய ராஜபக்ஷவை கைது செய்ய சிஐடி தாக்கல் செய்த மனு நீதிமன்றத்தால் நிராகரிப்பு செய்யப்பட்டது என்ற செய்தி வெளியாகி சமூகவலைத்தளங்களில் இது குறித்து பரபரப்பாக பேசப்பட்டது.
தகவலின் விவரம்:

Madawala News என்ற பேஸ்புக் பக்கம் கோட்டபாய ராஜபக்ஷவை கைது செய்ய C I D தாக்கல் செய்த மனு நீதிமன்றத்தால் நிராகரிப்பு என்ற செய்தியை கடந்த செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதி (20.09.2019) குறித்த பதிவை பதிவேற்றம் செய்துள்ளது.
Fact Check (உண்மை அறிவோம்)
இலங்கையின் பிரதான ஊடகங்கள் முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் தற்போதைய இலங்கை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டபாய ராஜபக்ஷவிடம் விசாரணைகளை மேற்கொள்ளவே மனு அளிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தது.
அதில் அமெரிக்க பிரஜையாக இருந்த காலத்தில் இலங்கை தேர்தல் விதிமுறைகள் மற்றும் குடியுரிமை விதிமுறைகளை மீறியதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
குறித்த குற்றம் முதலில் பொலிஸ் அதிகாரிகளிடம் அளிக்கப்பட்டிருந்த வேளை அது கடந்த 14 ஆம் திகதி சிஐடி இருவர்களிடம் கையளிக்கப்பட்டது.
அது குறித்து கடந்த 20 ஆம் திகதி (20.09.2019) அன்று நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட மனுவை நீதிபதி நிராகரித்துள்ளார்.

மேலும் குறித்த செய்தியில் பிழையிருப்பதாக பொலிஸ் ஊடக பிரிவினால் கடந்த 20 ஆம் திகதி இரவே (20.09.2019) தமது ஊடகயறிக்கையினை வெளியிட்டிருந்தது.

குறித்த அறிக்கையில்,” கோட்டபாய ராஜபக்ஷவிடம் வாக்கு மூலம் பெற்றுக்கொள்ளவே குறித்த மனு அளிக்கப்பட்டதாகவும், அது நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளாதவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சில இணையத்தளங்களில் வெளியான செய்திகள்,

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக குற்றப் புலனாய்வு பிரிவு விடுத்து கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரட்ன நேற்று நிராகரித்தார். முழு அறிக்கை
முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் கோட்டபாய ராஜபக்ஷவை கைது செய்ய சிஜடி தாக்கல் செய்த மனு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டது என்று வெளியான செய்தி பிழையானது.
