
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் பிள்ளையான் கைது செய்யப்பட்டதனைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பல்வேறு விதமான கருத்துக்கள் பகிரப்பட்டு வருவதனை எம்மால் காணமுடிந்தது.
அந்தவகையில் தற்போது தமிழ் மக்கள் மேற்கொண்ட ஆயுதப் போராட்டத்தை ராஜபக்ஷக்களுக்கும் இராணுவத்திற்கும் காட்டிக்கொடுத்த பிள்ளையான் மற்றும் கருணாவிற்கு எங்கள் அரசாங்கத்தினாலும் ஜனாதிபதியினாலும் எந்த மன்னிப்பும் வழங்கப்படமாட்டாது என தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே. இளங்குமரன் தெரிவத்ததாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் காணமுடிந்தது.
எனவே இது தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
குறித்த பதிவில் தமிழ் மக்கள் மேற்கொண்ட ஆயுதப் போராட்டத்தை ராஜபக்ஷக்களுக்கும் இராணுவத்திற்கும் காட்டிக்கொடுத்த பிள்ளையான் மற்றும் கருணாவிற்கும் எங்கள் அரசாங்கத்தினாலும் ஜனாதிபதியினாலும் எந்த மன்னிப்பும் கிடையாது என தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே. இளங்குமரன் தெரிவத்துள்ளார் என சிங்கள மொழியில் குறிப்பிட்டு கடந்த 2025.04.16ஆம் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் இதன் உண்மை அறியாது பலரும் சமூக ஊடகங்களில் இதனை பகிர்ந்திருந்தமையை எம்மால் காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
மேற்குறிப்பிட்ட சமூக ஊடகப் பதிவில் தெரிவிக்கப்பட்ட விடயத்தை பாராளுமன்ற உறுப்பினர் உண்மையில் தெரிவித்திருப்பாராயின் அது குறித்து பிரதான ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கும் எனினும் பிரதான ஊடகங்களில் அவ்வாறான எந்தவொரு செய்தியும் வெளியாகியிருக்கவில்லை.
மேலும் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் யாழ். தேர்தல்கள் அலுவலகத்திற்கு முன் நின்று கருத்து தெரிவித்திருப்பதனை காட்டும் புகைப்படத்துடனேயே குறித்த பதிவானது பகிரப்பட்டிருந்தது.
எனவே நாம் அது குறித்து மேற்கொண்ட ஆய்வில் இளங்குமரன் யாழ். தேர்தல்கள் அலுவலகத்திற்கு முன்நின்று தெரிவித்த ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த காணொளியை எம்மால் காணமுடிந்தது.
அந்த காணொளியில், கடந்த மார்ச் மாதம் 14 ஆம் திகதி தேசிய மக்கள் சக்தி சார்பில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்திய பின்னர் அவர் தேர்தல் தொடர்பிலேயே ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனின் பேஸ்புக் பக்கத்தை நாம் ஆய்வு செய்த போதும் அவர் மேற்குறிப்பிட்ட சமூக ஊடகப்பதிவில் தெரிவித்ததனைப்போன்ற எந்த தகவலும் அங்கு பதிவிடப்பட்டிருக்கவில்லை.
தொடர்ந்து நாம் இது குறித்த ஆய்வில் ஈடுபட்ட வேளையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் யாழ். விஜயத்தினை முன்னிட்டு கடந்த 2025.04.16 ஆம் திகதி இளங்குமரன் நடத்திய ஊடகவியாலாளர் சந்திப்பின் காணொளியையும் காணமுடிந்து.
இந்த காணொளியை நாம் அவதானித்த போது அதில் பிள்ளையான் மற்றும் கருணா அம்மான் தொடர்பில் அவர் எந்த கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்பது எமது ஆய்வில் உறுதியானது.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு பின்வருமாறு
பாராளுமன்ற உறுப்பினர் கே. இளங்குமரன்
மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பில் தெளிவினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் நாம் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனை தொலைபேசியில் தொடர்புகொண்டு இது குறித்து வினவியிருந்தோம்.
இதன்போது பிள்ளையான் மற்றும் கருணா தொடர்பில் தான் ஊடகங்களுக்கு எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை எனவும் தனது பேஸ்புக் பக்கத்திலும் அவ்வாறான எந்த கருத்துக்களையும் தான் பதிவிடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் தான் தெரிவித்தாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவாலானது முற்றிலும் தவறான ஒன்று எனவும் அவர் தெரிவித்தார்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion (முடிவு)
மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை ராஜபக்ஷக்களுக்கும் இராணுவத்திற்கும் காட்டிக்கொடுத்த பிள்ளையான் மற்றும் கருணாவிற்கும் எங்கள் அரசாங்கத்தினாலும் ஜனாதிபதியினாலும் எந்த மன்னிப்பும் கிடையாது என தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்ததாக சமூக ஊடகங்களிலும் பகிரப்படும் தகவல் தவறானது என்பது தெளிவாகின்றது.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:பிள்ளையானுக்கு எங்கள் அரசாங்கத்தினால் எந்த மன்னிப்பும் வழங்கப்படாது என இளங்குமரன் தெரிவித்தாரா?
Fact Check By: suji shabeedharanResult: False
