
இந்தியாவிலுள்ள மஹாராஸ்டிராவில் 24 வயது முஸ்லிம் பெண் IAS OFFICER ஆக பதவி ஏற்பு என்ற பதிவோடு ஒரு சிறுமி பொலிஸ் நிலையத்தில் பொலிஸாரால் கௌரவிப்பு செலுத்துவது போல புகைப்படம் ஒன்று பேஸ்புக்கில் பகிரப்படுவது எமக்கு காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:

Farook Najee என்ற பேஸ்புக் பக்கத்தில் ” 24 years old Indian Muslim Girl became IAS OFFICER in Maharashtra
இந்தியாவிலுள்ள மஹாரஸ்திராவில் 24 வயது முஸ்லிம் பெண் IAS OFFICER ஆக பதவி ஏற்பு!
#East1st👈 ” என்று நேற்று (06.03.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இதுதொடர்பில் நாம் ஆய்வினை மேற்கொண்டவேளையில், குறித்த புகைப்படத்தில் இருந்த பெண் 24 வயது நிரம்பியவர் போன்று எமக்கு தென்படவில்லை. அவர் ஓர் கல்லூரி மாணவி போன்றே தோற்றமளித்தார்.
தொடர்ந்து நாம் மேற்கொண்ட சோதனையில் சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு இந்தியாவில் மஹாராஷ்டிராவில் புல்தானா மாவட்டத்தில் 14 வயது சிறுமியை ‘ஒரு நாள்’ மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) ஆக்கியது.
மல்காபூர் தெஹ்ஸில், ஜில்லா பரிஷத் உருது உயர்நிலைப் பாடசாலையினை சேர்ந்த சஹ்ரிஷ் கன்வால் என்ற சிறுமியே ஒரு நாள் டிஎஸ்பி யாக பதவி வகுத்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு மஹாராஷ்டிராவில் 14 வயது சிறுமி ஒரு நாள் டிஎஸ்பியாக பதிவியேற்ற நிகழ்வினை மாற்றி 24 வயது முஸ்லிம் பெண் IAS OFFICER ஆக பதவி ஏற்பு என போலியாக செய்தி பரப்பி வருகின்றனர்.
முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், மஹாராஷ்டிராவில் 24 வயது முஸ்லிம் பெண் IAS OFFICER ஆக பதவி ஏற்பு எனும் தகவல் தவறானது என்று உறுதியாகிறது.

Title:மஹாராஷ்டிராவில் 24 வயது முஸ்லிம் பெண் IAS OFFICER ஆக பதவி ஏற்பா?
Fact Check By: Nelson ManiResult: False