நாட்டில் முட்டை தொழிற்சாலை இருக்கலாம் என பரவும் வீடியோ பிண்ணனி தெரியுமா?
INTRO :
நாட்டில் முட்டை தொழிற்சாலை இருக்கலாம் என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):
சமூகவலைத்தளங்களில் “முட்டை தொழிற்சாலை
அவதானம் நம் நாட்டிலும் இருக்கலாம்
Egg factory “ என கடந்த மாதம் 27 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு (27.02.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் முதலில் குறித்த வீடியோவின் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, 2017 ஆம் ஆண்டு sohu என்ற இணையத்தளத்தில் சீன மொழியில் வெளியாகிருந்த ஒரு கட்டுரை எமக்கு கிடைக்கப்பெற்றது.
அதில் இருந்த வீடியோவும் தற்போது இணையத்தில் பரவி வருகின்ற வீடியோவும் ஒன்றாக இருந்தமை காணக்கிடைத்தது. அதற்கமைய குறித்த கட்டுரையினை மொழியாக்கம் செய்து பார்க்கையில்
Facts | "Fake eggs" are rumors! Everything you need to know about eggs என்ற தலைப்பில் குறித்த ஆய்வறிக்கையினை பதிவேற்றம் செய்திருந்தமை காணக்கிடைத்தது.
அதில் குறித்த முட்டைகள் விளையாட்டு முட்டைகள் என Nanjing Public Security Bureau தெரிவித்திருந்தாக குறித்த கட்டுரையில் பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது.
இணையத்தில் வைரலாகும் வீடியோவில் உள்ள ஸ்டிக்கர்களும், இணையத்தில் விற்பனைக்கு உள்ள விளையாட்டு முட்டைகளில் உள்ள ஸ்டிக்கர்களும் ஒத்தவையாக காணப்பட்டது.
நாம் மேலும் இது குறித்து தேடிய போது, யூடியுப் தளத்தில் சிறு குழந்தை குறித்த விளையாட்டு முட்டையுடன் விளையாடும் காட்சி எமக்கு காணக்கிடைத்தது.
மேலும் இது விற்பனைக்குள்ள சில இணையத்தளங்களும் எமக்கு காணக்கிடைத்தது.
இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் நாட்டில் செயற்கை முட்டை தொழிற்சாலை இருக்கலாம் என பரவும் வீடியோவில் இருப்பது விளையாட்டு முட்டை தயாரிக்கும் வீடியோ என உறுதி செய்யப்பட்டுள்ளது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.
Title:நாட்டில் முட்டை தொழிற்சாலை இருக்கலாம் என பரவும் வீடியோ பிண்ணனி தெரியுமா?
Fact Check By: S.G.PrabuResult: Misleading