முயல் இரத்தத்தினால் செய்யும் எண்ணெய் முடி வளர்ச்சியை ஊக்குவிக்குமா? ?

False மருத்துவம்

Subscribe to our WhatsApp Channel


INTRO :

முயல் இரத்தத்தினால் செய்யும் எண்ணெய் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் என தெரிவித்து சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது.

எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின்விவரம் (What is the claim):

facebook Link  |  Archived Link

சமூகவலைத்தளங்களில் “கூந்தல் கருகருவென வளர்வதற்கான 16 வகை மூலிகைகளில்🌿 செய்த இயற்கை ஹேர் ஆயில் ஆதிவாசி மூலிகை முடி வளர்ச்சி எண்ணெய், 6 வாரங்களில் நீண்ட முடி வளர பயன்படுத்தவும்.

இது ஒரு அற்புதமான மூலிகை Rabbit Blood hair oil  𝐇𝐚𝐢𝐫 ☘️🍀

✅100 % தலைமுடி கொட்டுவதை நிறுத்துகிறது.

✅தலைமுடியை அடர்த்தியாக,நீளமாக வளரச்செய்கிறது.

✅பொடுகை நீக்குகிறது.

✅இளநரைமுடியை கருப்பாக மாற்றுகிறது.

✅வழுக்கை தலையில்

𝐑𝐚𝐛𝐛𝐢𝐭 𝐁𝐥𝐨𝐨𝐝 𝐡𝐚𝐢𝐫 𝐨𝐢𝐥  முடி வளர்ச்சி முயல் எண்ணெய் )

හිසකෙස් වර්ධනය හාවා තෙල්)

65+ 𝐇𝐞𝐫𝐛𝐚𝐥 𝐢𝐧𝐠𝐫𝐞𝐝𝐢𝐞𝐧𝐭𝐬  🌱    GGவிடம் இருந்து மட்டுமே…

65+ 𝐇𝐞𝐫𝐛𝐚𝐥 𝐢𝐧𝐠𝐫𝐞𝐝𝐢𝐞𝐧𝐭𝐬 🌱 වෙතින් පමණක්

50ml=1590/Rs

100ml=2490/Rs

𝐀𝐥𝐥 𝐢𝐬𝐥𝐚𝐧𝐝  𝐝𝐞𝐥𝐢𝐯𝐞𝐫𝐲 

𝐂𝐨𝐧𝐭𝐚𝐜𝐭 𝐰𝐡𝐚𝐭’𝐬 𝐚𝐩𝐩 –

0743093116

#Rabbitoil

#Rabbitbloodherioil

0743093116 See less

” என கடந்த மாதம் 23 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு  (23.05.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

முயல் ரத்த எண்ணெய் முடி வளர்ச்சியை வேகமாக அதிகரிக்கும் என்று பல காணொளிகள் மற்றும் சமூகவலைத்தள பதிவுகள் என பல்வேறு பதிவுகள் எமக்கு காணக்கிடைத்தது.

மேலும் இதன் உண்மை தன்மை குறித்து எமது வாசகர்கள் கேள்வி எழுப்பவே நாம் இது குறித்து ஆய்வினை மேற்கொண்டோம்.

முயல் இரத்தத்தில் என்ன நிறைந்துள்ளது?

பல பாலூட்டிகளின் இரத்தத்தைப் போலவே, முயலின் இரத்தத்திலும் ஹீமோகுளோபின், சிவப்பு மற்றும் வெள்ளை அணுக்கள், மற்றும் பல்வேறு புரதங்கள் நிறைந்துள்ளன. 

இவை முயல்களின் உயிரியல் செயல்பாடுகளுக்கு மட்டுமே முக்கியமானவை. மனிதர்களின் முடி பராமரிப்பிற்கு இவை எந்த வகையிலும் பயனளிக்காது.

முயலின் இரத்தத்தைத் தலைமுடிக்குப் பயன்படுத்தலாமா?

பொதுவாக விலங்குகளின் இரத்தம் அழகுசாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படுவதில்லை. விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் (Zoonotic) நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால் இது குறிப்பிடத்தக்க உடல்நலப் பிரச்சினைகளை விளைவிக்கலாம். 

மேலும், விலங்குகளின் இரத்தம் மனிதர்களுக்கு ஒவ்வாமை (Allergies) மற்றும் தோல் தொற்றுகளையும் ஏற்படுத்தக்கூடும். Link

முயல் இரத்தத்தினை பயன்படுத்தி தயாரிக்கும் எண்ணெய் முடி வளர்ச்சிக்கு உதவுமா?

இல்லை, முயல் இரத்த எண்ணெய் முடி வளர்ச்சிக்கு உதவாது. முயல் இரத்த எண்ணெய் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்பதற்கு எந்தவொரு அறிவியல் பூர்வமான ஆதாரமும் இதுவரை கண்டறியவில்லை. 

முடி வளர்ச்சி என்பது மரபியல் (Genetics), ஹார்மோன் சமநிலை, உணவுமுறை மற்றும் ஒட்டுமொத்த உடல்நலத்தைப் பொறுத்தது. Minoxidil அல்லது Finasteride போன்ற அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட மூலப்பொருட்களே முடி வளர்ச்சிக்கான சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுகின்றன. 

முயல் இரத்த எண்ணெயின் பயன்பாடு குறித்து என்னென்ன அறிவியல் சான்றுகள் உள்ளன?

முடி வளர்ச்சிக்கு உதவும் என்று கருதப்படும் பல்வேறு மூலப்பொருட்களைப் பல அறிவியல் ஆய்வுகள் ஆராய்ந்துள்ளன, ஆனால் அவற்றில் எதுவும் முயல் இரத்தத்தையோ அல்லது அதன் வழிப்பொருட்களையோ பயனுள்ளதாக இதுவரையில் அடையாளம் காணவில்லை. 

முடி வளர்ச்சி என்பது மயிர்க்கால் சுழற்சியை உள்ளடக்கிய ஒரு சிக்கலான உயிரியல் செயல்முறையாகும். இது வளர்ச்சி (anagen), நிறுத்தம் (catagen) மற்றும் ஓய்வு (telogen) ஆகிய நிலைகளைக் கொண்டுள்ளது. 

பயனுள்ள சிகிச்சைகள் பொதுவாக மயிர்க்கால் செயல்பாட்டைத் தூண்டுவதன் மூலமோ அல்லது வளர்ச்சியைத் தடுக்கக்கூடிய ஹார்மோன் சமநிலையின்மைகளைச் சரிசெய்வதன் மூலமோ இந்த நிலைகளை இலக்காகக் கொள்கின்றன.

மேலும், பல நாடுகளில் நெறிமுறைக் காரணங்கள் மற்றும் ஏற்படக்கூடிய சுகாதார அபாயங்கள் காரணமாக, அழகுசாதனப் பொருட்களில் விலங்குகளிலிருந்து பெறப்படும் மூலப்பொருட்களின் பயன்பாடு கடுமையாகக் கட்டுப்படுத்தப்படுகிறது.

உதாரணமாக, ஐரோப்பிய ஒன்றியம், விலங்கு சோதனை மற்றும் அழகுசாதனப் பொருட்களில் விலங்குகளிலிருந்து பெறப்படும் மூலப்பொருட்களின் பயன்பாட்டிற்கு எதிராகக் கடுமையான விதிமுறைகளைக் கொண்டுள்ளது.

ஆயுர்வேத வைத்தியர் கருணாதிலக்கவின் விளக்கம்

நாம் இது தொடர்பாக விளக்கத்தினை பெற ஆயுர்வேத வைத்தியர் கருணாதிலக்கவை தொடர்புக்கொண்டு வினவியபோது, 

“முயல் இரத்த எண்ணெய் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்ற கருத்திற்கு எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை எனவும், மனித மற்றும் முயல் இரத்தம் வெவ்வேறு கலவைகள் மற்றும் பண்புகளைக் கொண்டுள்ளதாகவும் இதை மனிதர்களுக்குப் பயன்படுத்துவதன் மூலம் நீண்டக்காலத்திற்கான கடுமையான தோல் ஒவ்வாமை (Allergy/Infections) , மண்டை ஓட்டில் புண்கள் மற்றும் அரிப்பு (Scalp irritation) விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடிய தொற்று நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக எமக்கு தெரிவித்தார்.

அத்துடன் குறித்த பொருட்கள் தொடர்பாக ஆராய்ச்சி அறிக்கைகள் சமர்ப்பித்து முறையாக அரசாங்க அனுமதி பெற்ற பின்னரே அதனை தயாரிக்க முடியும் என தெரிவித்தார்.

மேலும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் முயல் இரத்த எண்ணெய் போன்ற பொருட்களை இலங்கையில் விற்பனை செய்ய இயலுமா என நாம் கேள்வி எழுப்பிய போது அதற்கும் இலங்கை ஆயூர்வேத திணைக்களத்தில் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என தெரிவித்தார்.

வைத்தியர்  முத்து பிரபாகரன் விளக்கம்

இந்தியாவின் தமிழ்நாட்டை சேர்ந்த தோல் & முடி மாற்று அறுவை சிகிச்சை நிபுணரான வைத்தியர்  முத்து பிரபாகரன் அவரின் யூடியுப் அலைவரிசையில் இது குறித்து வெளியிட்ட ஒரு காணொளி எமக்கு கிடைக்கப்பெற்றது. 

அதில் முயல் இரத்ததினால் ஆன எண்ணெய்யில் முடி வளர்வதற்கு சாத்தியங்கள் இல்லை என தெரிவித்திருந்தார்.

முடி உதிர்வுக்கான காரணம் என்ன?

முடி உதிர்வு என்பது மரபணு (Genetics), ஹார்மோன் சமநிலை (Hormones), ஊட்டச்சத்துக் குறைபாடு (Iron, Vitamin D, Zinc deficiency), மன அழுத்தம் மற்றும் முறையற்ற பராமரிப்பு ஆகியவற்றால் ஏற்படுகின்றது. Link

தமிழக மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை

தமிழக மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை (Drugs Control Department) மேற்கொண்ட சோதனையில், சமூக வலைத்தளங்களில் “முயல் ரத்த எண்ணெய்” தயாரித்து முறையான அனுமதியின்றி, போலியான சான்றிதழ்களைக் காட்டி விற்று வந்த நிறுவனங்களின் பல லட்சம் மதிப்புள்ள தயாரிப்புகளைப் பறிமுதல் செய்து, குறித்த கடைகளுக்குச் சீல் வைத்துள்ளமை தொடர்பான செய்திகள் எமக்கு கிடைக்கப்பெற்றன. Humaneworld |  thehindu.com | expresspharma.in

எனவே நாம் மேற்கொண்ட ஆய்வின் முயல் இரத்தத்தினால் செய்யும் எண்ணெய் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் என பரவும் தகவல் தவறானது என கண்டறியப்பட்டது.

எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு


எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Result Stamp

Title: முயல் இரத்தத்தினால் செய்யும் எண்ணெய் முடி வளர்ச்சியை ஊக்குவிக்குமா? ?

Written By: S.G.Prabu

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *