
பதுளையில் முஸ்லிம் புடவை கடை ஒன்றில் பெண்கள் புடைவை மாற்றுவதை வீடியோ எடுத்த இளைஞர் ஒருவர் கைது என்று பேஸ்புக் பக்கங்கள் பகிரப்படுவதை நாம் அவதானித்தோம்.
குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:

Tamil People – தமிழ் மக்கள் என்ற பேஸ்புக் பக்கத்தில் ” பதுளை நகரில் சிங்கள பெண்களை புடவை கடவையில் ஆடைமாற்றும் அறையில் கமரா வைத்து வீடியோ எடுத்த குற்றச்சாட்டில் முஸ்லிம் இளைஞர் கைது!
இலங்கையில் வடகிழக்கு, தம்புள்ள, மினுவாங்கொட, வரக்காப்பொல, குருணாகல், கண்டி, மாத்தளை என அணைத்து முக்கிய வர்த்தக மையங்களில் முஸ்லிம் புடவைக்கடைகளும் அதில் தினம் புடவைகளை விற்று சம்பாத்தியம் ஒருபுறம் மறுபுறம் இவ் கடைகளை நாடி செல்லும் அப்பாவி சிங்கள தமிழ் பெண்கள் வீடியோக்கள் எடுத்து அதை விற்று சம்பாதித்து பணத்தை உழைப்பதும் தொடர்கதையாய் உள்ளது.
இலங்கையை பொருத்தவரை தமிழரும் சிங்களவரும் 30ஆண்டுகாலம் சண்டை பிடித்து உயிர் உடமை இழந்த நேரம் முஸ்லிம்கள் இவ் இடைவெளியை பயன்படுத்தி பொருளாதர ரீதியில் முக்கிய வர்த்த மையங்கள் உள்ள ஊர்களில் தமது பணபலத்தை பயன்படுத்தி முன்னேறினார்.இதை விட தமிழ் இளைஞர் வெளிநாடு சென்று உழைக்கும் மோகத்தாலும் சிங்கள இளைஞர் தமது நகர காணிகளை முஸ்லிம்களிடம் விற்று நகரத்தை விட்டு கிராமங்களை நோக்கி தங்களது குடிமனையை அமைத்தார்கள் .இவ்விரு இனத்தவரின் பலவீனம் முஸ்லிம்களின் உயர்ச்சியை கொண்டு சென்றுள்ளது.” என்று கடந்த 9 ஆம் திகதி (09.02.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் இது பலராலும் பேஸ்புக் கணக்கில் பகிரப்பட்டிருந்தமையும் எமது அவதானத்திற்கு உட்பட்டது.

Fact Check (உண்மை அறிவோம்)
இதுதொடர்பில் நாம் ஆய்வினை மேற்கொள்ள பதுளை மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினை தொலைபேசி தொடர்பு கொண்டு நாம் குறித்த சம்பவம் தொடர்பில் வினவிய போது, அவர்களுக்கு அவ்வாறான எவ்வித முறைப்பாடும் கிடைக்கப்பெறவில்லை என எமது பிரிவினருக்கு தெரிவித்தனர்.
நாம் குறித்த தகவலுடன் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள புகைப்படத்தினை Google Reverse Image Tool ஐ பயன்படுத்தி மேற்கொண்ட சோதனையில், குறித் புகைப்படம் 2014 ஆம் தம்புள்ளையில் இடம்பெற்ற சம்வத்துடன் தொடர்புடைய என கண்டறியப்பட்டது.

தம்புள்ளை அமைந்திருந்த ஆடை விற்பனை நிலையத்தில் பெண்ணொருவரிடம் தகாத முறையில் நடந்து கொள்ள ஊழியர் ஒருவர் முற்பட்டதாக பெண் வீதிக்கு ஓடிச்சென்று சத்தமிட்டுள்ளார்.
குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய ஊழியரை கைது செய்ததோடு குறித்த ஆடை விற்பனை நிலையத்தினையும் தற்காலிகமாக மூடவும் செய்துள்ளனர்.

Hiru news link | Archived link
Conclusion: முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், பதுளையில் முஸ்லிம் புடவை கடை ஒன்றில் பெண்கள் புடைவை மாற்றுவதை வீடியோ எடுத்த இளைஞர் ஒருவர் கைது என்ற செய்தி போலியானது என உறுதி செய்யப்படுகிறது.

Title:பதுளை முஸ்லிம் புடவை கடை; பெண்கள் ஆடை மாற்றுவதை வீடியோ எடுத்த இளைஞர் கைதா?
Fact Check By: Nelson ManiResult: False