சீனாவில் தனது நாட்டு மக்கள் கொரோனா வைரஸினால் மடிகிறார்கள், அதற்கு பரிகாரம் அல்லாஹ்விடம் தான் என்று நம்பி பள்ளிவாசல் சென்று தொழுது கொள்ளும் சீன பிரதமர் என்று ஒரு வீடியோ பேஜ்புக்கில் பகிரப்படுவதை நாம் அவதானித்தோம்.

குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link

Mohamed Fowse என்ற பேஸ்புக் கணக்கில் ” தனது நாட்டுமக்கள் கொரோனா வைரசால் மடிகிறார்கள் அதற்க்கு பரிகாரம் அல்லாஹ்விடம்தான் என்று நம்பி பள்ளிவாசல் சென்று தொழுது கொள்ளும் சீன பிரதமர் அவர்கள்.” என்று இன்று (04.02.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

இது தொடர்பில் நாம் ஆய்வினை மேற்கொள்ள invid tool ஐ பயன்படுத்தி மேற்கொண்ட சோதனையில் குறித்த வீடியோ மலேசிய பிரதமர் உடையது என்பது உறுதி செய்யப்பட்டது.

Invid tool | archived link

மேலும் Ap Archived யூடியுப் தளத்தில் 2015 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 21 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்ட குறித்த வீடியோ பதிவில் கீழே தரப்பட்ட செய்தி அறிக்கையில் இவ்வீடியோவில் உள்ளது மலேசிய பிரதமர் அப்துல்லா அகமது படாவி தொழுகையில் ஈடுபடும் காட்சி என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் எமது ஃபேக்ட் கிரஸண்டோ இந்திய தமிழ் பிரிவினர் இது தொடர்பில் மேற்கொண்ட ஆய்வினை படிக்க இங்கே கிளிக் செய்க

முடிவு

மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், சீனா பிரதமர் கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்கும்படி பள்ளிவாசல் சென்று தொழுதார் என வெளியான வீடியோவில் மலேசியாவின் முன்னாள் பிரதமர் பள்ளிவாசலுக்கு சென்று தொழுகையில் ஈடுப்பட்ட வீடியோ என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Avatar

Title:சீனாவில் கொரோனா வைரஸ்; பள்ளிவாசல் சென்று தொழுதாரா சீன பிரதமர்?

Fact Check By: Nelson Mani

Result: False