Fact Check : காத்தான்குடியில் பெய்த பனி மழையா இது?
INTRO :
காத்தான்குடியில் பெய்த பனி மழையின் அழகிய காட்சி என சமூக வலைத்தளங்கள் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):
சமூகவலைத்தளங்களில் ” இன்று காலையில் காத்தான்குடியில் பெய்த பனி மழையின் அழகியே காட்சியே இது....
குட்டி சவுதி அல்ல
குட்டி சுவிஸ்... “ என இம் மாதம் 10 ஆம் திகதி (10.12.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
முதலில் நாம் குறித்த புகைப்படத்தினை fotoforensics.com இணையத்தினை பயன்படுத்தி ஆய்வினை செய்த போது
இது முற்றிலும் Photoshop தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புகைப்படம் என நமக்கு தெளிவாக தெரிகின்றது.
fotoforensics.com | Archived Link
நாம் இவ்வாறு Photoshop தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி புகைப்படங்களை மாற்றம் செய்ய முடியுமா என்று இணையத்தில் ஆய்வினை மேற்கொண்டோம்.
நாம் இம்மாதத்திற்கான காத்தன்குடியின் வானிலை அறிக்கையினை நாம் ஆய்வு செய்த போது, அங்கு பனி நிலவுதலுக்கு ஏற்ற வகையில் வெப்பநிலை காணப்படவில்லை என்பது தெளிவாகின்றது.
accuweather.com | Archived Link
ஏனவே மேலே காட்டப்பட்டுள்ள தொழில்நுட்ப யுக்தியினை பயன்படுத்தி குறித்த புகைப்படத்தினை மாற்றல் செய்துள்ளமை இங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், காத்தான்குடியில் பெய்த பனி மழை என பகிரப்படும் புகைப்படம் போலியானது என்று கண்டறியப்பட்டுள்ளது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.
.hocal-container {
border: 2px solid #000;
background-color: #eee;
border-radius: 5px;
padding: 16px;
margin: 16px 0
}
.hocal-container::after {
content: "";
clear: both;
display: table;
}
.hocal-container img {
float: left;
margin-right: 20px;
border-radius: 50%;
}
.hocal-container span {
font-size: 20px;
margin-right: 15px;
}
@media (max-width: 500px) {
.hocal-container {
text-align: center;
}
.hocal-container img {
margin: auto;
float: none;
display: block;
}
}