
சீனாவின் வுஹான் மாகாணத்தில் கொரானா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களின் தற்போதைய நிலை என பேஸ்புக்கில் புகைப்படம் ஒன்று பகிரப்படுகிறது.
குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:

Dharan Gnanenthirarasa என்ற பேஸ்புக் கணக்கில் ” சீனாவின் வுஹான் மாகானத்தில் கொரானா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களின் தற்போதைய நிலை.!!” என்று கடந்த மாதம் 30 ஆம் திகதி (30.01.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இது தொடர்பில் நாம் ஆய்வினை மேற்கொள்ள முதலில் குறித்த புகைப்படத்தினை Google Reverse Image Tool ஐ பயன்படுத்தி ஆய்வு செய்தோம்.

குறித்த ஆய்வின் போது voanews என்ற செய்தி இணையத்தளத்தில் 2014 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் திகதி ஜெர்மனி பிராங்பேர்ட்டில் உள்ள “கட்ஸ்பாஐ்” நாஜி வதை முகாமில் பாதிக்கப்பட்ட 528 பேரை நினைவுகூரும் வகையில் மக்கள் பாதசாரி நடக்கும் இடத்தில் நிலத்தில் படுத்துக் கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படமாகும்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் எமது ஃபேக்ட் கிரஸண்டோ இந்திய பிரிவின் மலையாளம் பிரிவினர் இது தொடர்பில் மேற்கொண்ட ஆய்வினை படிக்க இங்கே கிளிக் செய்க
முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், சீனாவின் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களின் தற்போதைய நிலை என வெளியான புகைப்படம் 2014 ஆம் ஆண்டு ஜெர்மனி பிராங்பேர்ட்டில் உள்ள “கட்ஸ்பாஐ்” நாஜி வதை முகாமில் பாதிக்கப்பட்ட 528 பேரை நினைவுகூரும் வகையில் மக்கள் பாதசாரி நடக்கும் இடத்தில் நிலத்தில் படுத்துக் காட்டியபோது எடுக்கப்பட்ட புகைப்படமாகும்.

Title:சீனாவின் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களின் தற்போதைய நிலை- புகைப்படம் உண்மையா?
Fact Check By: Nelson ManiResult: False