
ஏ9 வீதி சாவகச்சேரியில் மனிதர்கள் வீட்டிற்குள் முடங்கியதால் மகிழ்ச்சியாக இருக்கும் மான்கள் என சிலர் ஒரு புகைப்படத்தை பேஸ்புக்கில் பகிர்ந்த வண்ணம் உள்ளமை எமக்கு காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:

Mathutangan Lingam என்ற பேஸ்புக் கணக்கில் ” மனிதர்கள் வீட்டிற்குள் முடங்கியதால் மகிழ்ச்சியாக இருக்கும் மான்கள்..😍 இடம்-A9 வீதி சாவகச்சேரி” என்று இம்மாதம் 22 ஆம் திகதி (22.03.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இதுதொடர்பில் நாம் மேற்கொண்ட ஆய்வில் செய்தோம், குறித்த புகைப்படம் கீழ் பதியப்பட்டிருந்த கமெண்ட்டுக்களை பார்வையிட்டோம் அதில் குறித்த பலர் இது போலியான தகவல் என்று பதிவேற்றம் செய்துள்ளமை எமக்கு காணக்கிடைத்தது.

அதில் பலர் இது ஜப்பான் நாட்டில் நாரா என்ற இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த புகைப்படத்தினை நாம் Google Reverse Image Tool பயன்படுத்தி தேடுதலில் ஈடுப்பட்டோம்.
அதன்போது, குறித்த புகைப்படத்திற்கு கூகுளால் ஜப்பானில் மான்கள் நகரம் என்று பெயர் இடம்பெற்றுள்ளமை காணக்கிடைத்தது.
மேலும், பலர் குறித்த பேஸ்புக் பதிவில் கமெண்ட் செய்துள்ளவாறு, நாரா என்ற நகரத்தின் பெயரும் காணக்கிடைத்தது.

மேலும் நாம் மேற்கொண்ட சோதனையின் போது imgur என்ற இணையத்தளத்தில் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி (06.02.2019) VodkaBalalaika என்ற பயனாளரால் குறித்த புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளமை எம்மால் கண்டறியப்பட்டது.

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். இந்த புகைப்படம் பல ஆண்டுகளாகவே சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதைக் காண முடிந்தது. அதில், ஜப்பானின் நாரா நகரத்தில் மான்கள் என்று குறிப்பிட்டிருந்தனர். 2017ம் ஆண்டு முதல் இந்த படம் பகிரப்பட்டு வருவதைக் காண முடிந்தது.
நிஜமாக எடுக்கப்பட்ட புகைப்படத்தில் காணப்படும் ஜப்பானிய மொழியில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த பெயர் பலகை பகுதியினை நீக்கி விட்டு பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

ஏற்கனவே இது குறித்த எமது இந்திய பிரிவின் தமிழ் குழு மேற்கொண்ட உண்மை தேடல் பரிசோதனையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
Conclusion: முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், A9 வீதி சாவகச்சேரியில் மகிழ்ச்சியாக இருக்கும் மான்கள், என பேஸ்புக்கில் பகிரப்பட்ட தகவல் தவறானது என்று உறுதியாகிறது.

Title:A9 வீதி சாவகச்சேரியில் மகிழ்ச்சியாக இருக்கும் மான்களா?
Fact Check By: Nelson ManiResult: False