நாமல் ராஜபக்ஷ குழந்தையென பரவும் புகைப்படங்கள் அனைத்தும் உண்மையா?

False இலங்கை செய்திகள்

தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link

Askeen Fasmil என்ற பேஸ்புக் கணக்கில்  ” பிரதமர் #Mahinda_Rajapaksa

மகிந்த ராஜபக்ச அவர்களின் மகன் நாமல் ராஜபக்ச #Namal_Rajapaksa

தம்பதிகளின் குழந்தையுடன் (பேரன்) மகிழ்ச்சியில்….” என்று இம் மாதம் 14 ஆம் திகதி  (14.09.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

நாம் குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமிர்த்தமாக பேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ள புகைப்படங்கள் Google Reverse Image Tool  பயன்படுத்தி தேடுதலில் ஈடுப்பட்டோம்.

நாமல் கையில் குழந்தையினை ஏந்தியுள்ளவாறு உள்ள புகைப்படமானது, நாமல் ராஜபக்சவின் பிறந்தநாள் அன்று (09.04.2020)
அவரின் தம்பியான ரோஹித்த ராஜபக்ச அவர்களின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில்  “ Happy birthday ලොකු තාත්තී! @RajapaksaNamal , Love, Baby Nirvaan” என பதிவிட்டுள்ளார்.

‘இனிய பிறந்தநாள் பெரியப்பா; அன்புடன் குழந்தை நிர்வான்,’ என்பது குறித்த பதிவின் தமிழ் மொழியாக்கம் ஆகும்.

Twitter Link  | Archived Link 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, கைகளில் குழந்தையினை ஏந்தியவண்ணம் உள்ள புகைப்படத்தினை ஆய்வு செய்த போது, குறித்த புகைப்படமானது 2019 ஆம் ஆண்டு ரோஹித்த ராஜபக்ஷவின் குழந்தையினை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பார்வையிட்ட வேளையில் எடுக்கப்பட்ட புகைப்படமாகும்.

Twitter Link  | Archived Link

மேலும் நாம் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்களின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கங்களை பார்வையிட்ட வேளையில் சமீபத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்படங்களே கீழே காணப்படுகின்றது.

இதற்கமைய நாமல் ராஜபக்ஷவின் குழந்தையென பகிரப்படும் புகைப்படங்கள் அவரின் தம்பியான ரோஹித்த ராஜபக்ஷவின் குழந்தையின் புகைப்படங்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக எமது சிங்களப்பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:நாமல் ராஜபக்ஷ குழந்தையென பரவும் புகைப்படங்கள் அனைத்தும் உண்மையா?

Fact Check By: Nelson Mani 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *