தெஹிவளை மிருகக் காட்சி சாலையிலிருந்து தப்பிச் சென்றதா சிங்கம்?

இலங்கை செய்திகள் உலக செய்திகள்

கொழும்பு தெஹிவளை மிருகக்காட்சி சாலையிலிருந்து சிங்கம் ஒன்று தப்பிச்சென்றுள்ளதாகவும், குறித்த சிங்கம் இரவு வேளையில் தெஹிவளை சந்தியில் திரிந்ததாக ஒரு புகைப்படத்துடன் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்ட பதிவு பலராலும் பகிரப்பட்டிருந்தது.

தகவலின் விவரம்:

Abdul Hakeem Sha | Archived Link

Abdul Hakeem Sha என்ற நபரின் பேஸ்புக் கணக்கில் “colombo Dehiwala junction…,..

சில தினங்களுக்கு முன் – தெஹிவளை மிருகக் காட்சிசாலையிலிருந்து தப்பிச் சென்ற சிங்கம் தெஹிவளை சந்தியால் இரவில் வலம் வரும் காட்சி. ” கடந்த 6 ஆம் திகதி(06.09.2019) பதிவேற்றம் செய்திருந்தார்.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த பதிவில் பதியப்பட்ட Comments-ஐ நாம் ஆராய்ந்தோம். அதில் பலரும் இது போலியானது என்று தெரிவித்திருந்தமை காணக்கூடியதாக இருந்தது.

மேலும் இது குறித்து ஆய்வினை நாம் மேற்கொண்டவேளையில் குறித்த புகைப்படத்தினை Google Reverse Image பயன்படுத்தி தேடும் வேளையில், இப்புகைப்படமானது 2016 ஆம் காலக்கட்டத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கூடியதாக இருந்தது.

உண்மையில் தெஹிவளை மிருகக்காட்சி சாலையிலிருந்து சிங்கம் தப்பிச்சென்றதா..? என்ற கேள்வியை ஆராய்ந்து பார்த்த போது அவ்வாறு எவ்விதமான சம்பவமும் இடம்பெறவில்லை என தெஹிவளை மிருகக்காட்சிசாலை நிர்வாகம் அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

News Link

News link

மேலும் குறித்த புகைப்படத்தில் உள்ள வீதியின் பெயரை கொண்டு கொழும்பு தெஹிவளை பகுதியில் Google Map இல் தேடிய வேளை அவ்வாறான பெயரில் ஒரு வீதியும் கிடைக்கவில்லை.

குறித்த JORISSEN STREET கூகுளில் தேடிய போது அது தென்னாபிரிக்கா நாட்டில் உள்ள வீதி என காண கிடைத்தது.

மேலும், சிங்க புகைப்படம் தொடர்பில் ஆய்வினை மேற்கொண்ட வேளையில் புகைப்படத்தில் உள்ள சிங்கம் தொடர்பாக 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி வெளியான செய்தி ஒன்று கிடைத்தது.

தென்னாபிரிக்கா வீதியில் உலா வரும் சிங்கம் என்ற தலைப்பில் ஆங்கில இணையத்தளம் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. முழு அறிக்கை

 முடிவு

மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் தெஹிவளை மிருகக் காட்சிசாலையிலிருந்து தப்பிச் சென்ற சிங்கம் தெஹிவளை சந்தியால் இரவில் வலம் வரும் காட்சி என்று பதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்படம் உரிய ஆதாரங்களின்படி தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது.

Avatar

Title:தெஹிவளை மிருகக் காட்சி சாலையிலிருந்து தப்பிச் சென்றதா சிங்கம்?

Fact Check By: Nelson Mani 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *