எல்ல காட்டுப்பகுதியில் தீயென பரவிய புகைப்படம் உண்மையா..?

Mixture இலங்கை செய்திகள்

கடந்த ஆகஸ்ட் மாதம் உலக மக்களே பேசிக் கொண்டிருந்த ஒரு சம்பவம் என்றால் அமேசான் காடுகளில் பரவிய தீ என்பது யாவரும் அறிந்த உண்மையே. அக்காலத்தில் இலங்கையில் எல்ல காட்டு பகுதியிலும் தீ பரவியதாக சில நபர்கள் பரப்பிய செய்தி நாம் காணக்கூடியதாக இருந்தது.

இதன் உண்மைத்தன்மையினை நாம் கண்டறிய ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விபரம் :

Nawalapitiya Memes | Archived Link

Nawalapitiya Memes என்ற பேஸ்புக் பக்கத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி(2019.08.22)  ” மொனராகலா மாவட்டத்தின் எல்லையான எல்ல மலைத்தொடரில் இன்று காலை முதல் தீ பரவி வருகிறது. சுற்றுளாப்பயணிகளை அதிகம் ஈர்த்த இந்த மலை “எல்ல ரோக் (Ella Rock)என்று பிரபலமாக அறியப்படுகிறது.

காலை முதல் தீ பரவி வருவதாக அப்பகுதியில் வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.

தீயை அணைக்க இராணுவ வீரர்கள் ஏற்கனவே சம்பவ இடத்திற்கு சென்றுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவிக்கிறது.

இதற்கிடையில், பிரேசிலின் அமேசான் காடு ஏற்கனவே தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.” என தலையில் ஒரு வெளிநாட்டு பெண் கை வைத்து தீ பரவியுள்ள எல்ல காட்டு பகுதியினை பார்த்தவாறு நிற்பதுபோன்ற ஒரு புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

குறித்த புகைப்படத்தில் ”இயற்கையின் மிகவும் தனித்துவமான படைப்பு சூழல்களில் ஒன்றான அதிக சுற்றுலா பயணிகளை கவர்ந்திலுக்கும் நம் நாட்டின் எல்ல தற்போது தீயில் உள்ளது. இயற்கை அன்னையின் அருளால் மழை பொழிந்து எல்ல காட்டுத்தீ நிற்கட்டும்.” என்ற வசனமும் பதியப்பட்டுள்ளது. 

Fact Check (உண்மை அறிவோம்

எல்ல பகுதியில் தீயென கடந்த ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி (2019.08.22) பரவிய புகைப்படத்தினை google reverse image Tool இனை கொண்டு ஆய்வினை மேற்கொண்டோம்.

குறித்த புகைப்படமானது SunChase Journey என்ற பெயரில் பேஸ்புக் பக்கத்திலும் மற்றும் இன்ஸ்டகிராம் கணக்கிலும் பகிரப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது. Luminita and Costi என்ற சுற்றுலா பயணிகளால் குறித்த இரு சமூகவலைத்தளங்களும் கையாளப்படுவதோடு, குறித்த புகைப்படம் 2018 ஆம் ஆண்டு ஓக்டோபர் மாதம் 25 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டது.

Instagram Post  

Luminita and Costi பேஸ்புக் பக்கம் 

 Facebook Post  | Archived FB Post

இதன் மூலம் பேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டு வருகின்ற புகைப்படமானது 2018 ஆம் ஆண்டு ஓக்டோபர் மாதம் 25 ஆம் திகதி எடுக்கபட்ட புகைப்படம் ஆகும்.

மேலும் குறித்த புகைப்படம் தொடர்பில் Google Search இல் “Ella mountain burning” என்ற தேடுதலை 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் திகதி காலப்பகுதியில் தேடிய போது குறித்த புகைப்படம் கிடைத்தது.

முடிவு

மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், எல்ல காட்டு பகுதியில் தீயென கடந்த ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி (2019.08.22) வெளியான புகைப்படமானது, 2018 ஆம் ஆண்டு ஓக்டோம்பர் மாதம் 25 ஆம் திகதி எடுக்கப்பட்ட புகைப்படம் என தெரியவருகிறது. எனவே, மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தியில், பாதி உண்மை, பாதி தவறான தகவல் உள்ளதாக உறுதி செய்யப்படுகிறது.

Avatar

Title:எல்ல காட்டுப்பகுதியில் தீயென பரவிய புகைப்படம் உண்மையா..?

Fact Check By: Nelson Mani 

Result: Mixture

Leave a Reply

Your email address will not be published.