GMOA இற்கு கொடுத்த நிலத்தினை ரணில் திருப்பித் தருமாறு கேட்டாரா..?

False இலங்கை | Sri Lanka

Subscribe to our WhatsApp Channel

INTRO :

GMOA இற்கு கொடுத்த நிலத்தினை ரணில் திருப்பித் தருமாறு கேட்டதாக ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின்விவரம் (What is the claim):

facebook Link  | Archived Link

சமூகவலைத்தளங்களில் “#ஏலாத #கட்டத்துக்கு #என்ன #செய்ற 

அதுதான் வேல 😁

ஹப்புத்தளையில் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு விடுமுறை விடுதி கட்டுவதற்காக வழங்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்தை அரசாங்கத்திடம் திருப்பித் தருமாறு ரணில் வலியுறுத்தியுள்ளார்.! “என இம் மாதம் 30 ஆம் திகதி 2026 ஆம்ஆண்டு  (30.01.2026) பதிவேற்றம்செய்யப்பட்டிருந்தது. 

இது உண்மையென நினைத்து பலர்பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

இது தொடர்பாக பிரதான ஊடகங்களில் செய்தி வெளிவந்துள்ளனவா என நாம் ஆய்வினை மேற்கொண்டபோது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தான் கொடுத்த நிலத்தினை திருப்பி கேட்டதாக எவ்விதமான செய்தி அறிக்கைகளும் எமக்கு காணக்கிடைக்கவில்லை.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஊடக பிரிவு

இது தொடர்பாக நாம் தகவலினை உறுதி செய்ய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஊடகப்பிரிவினை தொடர்புக்கொண்டு வினவியபோது, இது முற்றிலும் போலியான தகவல் என அவர்கள் எமக்கு உறுதி செய்தனர்.

GMOA இற்கு ரணில் வழங்கிய காணி மீண்டும் அரசாங்கத்தால் பொறுப்பேற்பு

மேலும் நாம் GMOA இற்கு வழங்கிய காணி தொடர்பாக நாம் மேற்கொண்ட தேடலின் போது, கடந்த மாதம் 30 ஆம் திகதி (30.01.2026) வெளியாகியிருந்த செய்தி அறிக்கையொன்று எமக்கு கிடைக்கப்பெற்றது. 

அதில் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு (GMOA) விடுமுறை விடுதி ஒன்றை அமைப்பதற்காக வழங்கப்பட்ட ஹப்புத்தளை விஹாரகல தோட்டத்திற்குச் சொந்தமான 5 ஏக்கர் காணி, மீண்டும் அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.

முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல் இந்த நிலம் வழங்கப்பட்டதோடு, குத்தகை நிபந்தனைகள் மீறப்பட்டமையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. thinakaran.lk

Archived Link

GMOA ஊடகப்பேச்சாளர்

இது தொடர்பாக கூடுதல் விளக்கத்தினை நாம் பெறுவதற்கு GMOA ஊடகப்பேச்சாளரை தொடர்புக்கொண்டு வினவியபோது, குறித்த தகவல் போலியானது என தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சி காலத்தில் 30 வருட குத்தகை அடிப்படையில், ஹபுத்தளை விஹாரகல தோட்டத்திற்குச் சொந்தமான 5 ஏக்கர் காணி, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு (GMOA) விடுமுறை விடுதியொன்று கொண்டு நடத்துவதற்கு வழங்கப்பட்டது.


எனினும் குறித்த காணி கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி (28.08.2025) உத்தியோகப்பூர்வமாக மீண்டும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சிடம் கையளிக்கப்பட்டதாகவும், குறித்த காலக்கட்டத்திற்கான அனைத்து குத்தகையும் தாங்களால் முறையாக செலுத்தப்பட்டு முறையாக கொண்டு நடத்தியதாக எமக்கு அறியத்தந்தார்.

அத்துடன் தற்போது இது தொடர்பாக தவறான தகவல்கள் இணையத்தில் பரவுவதாகவும் எமக்கு தெரிவித்தார்.

நாம் இது ரணில் விக்ரமசிங்கவிற்கு சொந்தமான காணியா? என வினவிய போது, இது பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சிக்கு சொந்தமான காணி என எமக்கு தெரிவித்தார்.

GMOA குறித்த குத்தகை காணி மீண்டும் கையளிக்கப்பட்டமை தொடர்பாக அனுப்பிய கடிதம்

நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் GMOA இற்கு கொடுத்த நிலத்தினை ரணில் திருப்பித் தருமாறு கேட்டார் என பரவும் தகவல் தவறானது என கண்டறியப்பட்டது.

எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு

எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Avatar

Title:GMOA இற்கு கொடுத்த நிலத்தினை ரணில் திருப்பித் தருமாறு கேட்டாரா..?

Fact Check By: S G Prabu  

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *