பிரபல பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பேஸ்புக்கில் பரவும் செய்தி குறித்து எமது ஆய்வினை நாம் மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link

Inhammohamed Isfak என்ற பேஸ்புக் கணக்கில் புதிய தலைமுறை நிவூஸ் கார்டில் ” எஸ்.பி.பி உயிர் பிரிந்தது கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவமனை நிர்வாகம்” இன்று (14.08.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

நாம் குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு ஆய்வினை மேற்கொண்ட போது, புதிய தலைமுறையின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் எஸ்.பி.பி உடல்நிலை குறித்த பரவி வருகின்ற வதந்தியை நம்ப வேண்டாம் என்று தங்கள் செய்தி நிறுவனத்தின் பெயரில் பரவி வருகின்ற நியூஸ் கார்ட் போலியானது என்ற செய்தியினை வெளியிட்டிருந்தனர்.


twitter link | Archived Link

Facebook Link | Archived Link

மேலும் நேற்று மாலை MGM Healthcare வைத்தியசாலையினால் வெளியிடப்பட்டிருந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் தொடர்பான அறிக்கையில் அவரின் இன்னும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்திருந்தனர்.

அதற்கமைய தற்போது புதியதலைமுறை நியூஸ் கார்டில் எஸ்.பி.பி உயிர் பிரிந்தது என பகிரப்படும் தகவல் போலியானது என்று நாம் மேற்கொண்ட சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:பாடகர் எஸ்.பி.பி அவர்களின் உயிர் பிரிந்ததா?

Fact Check By: Nelson Mani

Result: False