கொரோனாவால் உயிரிழந்தாரா டாக்டர் ஆயிஷா?

Coronavirus False சர்வதேசம்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இளம் பெண் மருந்துவர் ஒருவர் உயிரிழந்ததாக பேஸ்புக்கில் ஒரு வதந்தி பரவி வருகின்றமை காணக்கிடைத்தது. இதை குறித்து நாம் ஆய்வினை மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link

யாழ்ப்பாணம்.com   என்ற பேஸ்புக் கணக்கில்  ” ஆழ்ந்த இரங்கள்

வெண்டிலேட்டர் வைக்க போகின்றார்கள் என்னையும் என் சிரிப்பையும் மறந்து விடாதீர்கள்

கொரோனாவால் உயிரிழந்த இளம் மருத்துவர் ஆஷாவின் கடைசி பதிவு

அபாயகரமான இந்த கொரோனா வைரஸ் குறித்து அஜாக்கிரதையாக இருந்து விடாதீர்கள்

டாக்டர்_ஆஷா” என்று  கடந்த இம்மாதம் 03 ஆம் திகதி (03.08.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

நாம் குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு Google Reverse Image Tool பயன்படுத்தி தேடுதலில் ஈடுபட்டோம்.

இதன் போது பல உண்மை கண்டறியும் நிறுவனங்கள் குறித்த தகவல் தொடர்பாக ஆய்வினை மேற்கொண்டுள்ளமை காணக்கிடைத்தது. அதைபோல் எமது ஃபேக்ட் கிரஸண்டோவின் இந்திய பிரிவில் ஆங்கிலம், மலையாளம் மற்றும் தமிழ் என பல மொழிகளில் ஆய்வுகள் நடத்தப்பட்டு இருப்பது தெரியவந்தது.

நாம் எமது ஆய்வினை மேலும் மேற்கொண்டவேளையில், குறித்த பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்த வெண்டிலேட்டர் வைக்கப்படும் புகைப்படத்தினை நாம் Google Reverse Image Tool பயன்படுத்தி தேடுதலில் ஈடுபட்டோம்.

அதன்போது, குறித்த புகைப்படமானது பல வருடங்கள் இணையத்தில் பல்வேறு இணைய செய்திகளில் பகிரப்பட்டு வந்துள்ளமை காணக்கிடைத்தது.

மேலும் குறித்த புகைப்படமானது, pixabay என்ற புகைப்படங்களை இலவசமாக உபயோகிக்க பதிவிறக்கம் செய்யக்கூடிய ஓர் இணையத்தளத்தில் 2014 ஆம் ஆண்டே பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

Pixabay link | Archived Link

மேலும் குறித்த பெண் இருந்த புகைப்படத்தினை நாம் சற்று மேலும் ஆய்வினை மேற்கொண்டோம். அதன்போது, குறித்த புகைப்படத்தில் life என்ற வைத்தியசாலையின் இலச்சினை பொறிக்கப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

பெண்ணின் தலையணையில் உள்ள வைத்தியசாலையின் பெயரை அடிப்படையாக வைத்துத் தேடியபோது, அது தெலங்கானாவின் காமரெட்டி என்ற இடத்தில் உள்ள ஒரு வைத்தியசாலை என்று தெரியவந்ததாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

எமது இந்திய தமிழ் பிரிவினர் குறித்த வைத்தியசாலையை தொடர்புகொண்டு வினவியபோது, அங்கு கொரோனாவிற்கு சிகிச்சை அளிப்பதில்லை என தெரிவித்தனர்.

இதற்கமைய கொரோனாவால் உயிரிழந்தார் டாக்டர் ஆயிஷா என 

பேஸ்புக்கில் பகிரப்பட்டு வந்த செய்தி போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:கொரோனாவால் உயிரிழந்தாரா டாக்டர் ஆயிஷா?

Fact Check By: Nelson Mani 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *