ஐவரி கோஸ்ட் நாட்டின் ஜனாதிபதி ஹஜ் கடமையின் போது தரையில் உறங்கியதாக பரவும் புகைப்படம் உண்மையா? 

False சர்வதேசம் | International
Subscribe to our WhatsApp Channel


INTRO :

ஐவரி கோஸ்ட் நாட்டின் ஜனாதிபதி ஹஜ் கடமையின் போது தரையில் உறங்கியதாக தெரிவித்து சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது.

எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின்விவரம் (What is the claim):

facebook Link  |  Archived Link

சமூகவலைத்தளங்களில் “#தற்போது தரையில் விரித்து படுத்திருப்பவர் ஐவரி கோஸ்ட் (சாஹில் அல்-ஆஜ்) நாட்டின் ஜனாதிபதி டாக்டர் ஹசன் அப்துர் ரஹ்மான் வத்தாரா ஆவார்.

அவர் ஹஜ் கடமையை தனது சொந்த செலவில் நிறைவேற்றச் சென்றார். மேலும், சவூதி அரச மன்றம் மரபுப்படி வழங்கியிருந்த அரண்மனை தங்குமிடத்தை மரியாதையுடன் மறுத்ததாக கூறப்படுகிறது.

இப்போது கேள்வி என்னவென்றால் — அவருடைய பாதுகாப்பு எங்கே?

அவர் எந்த பாதுகாப்பு படையினரையும் உடன் கொண்டு வரவில்லை என்று சொல்லப்படுகிறது.

Assdo Voice Asf Sri Lanka அஸ்டோ நூலகம் Hafiz Imran Attari Hamdullah Jawahir 

ஹசன் அவர்கள் ஐவரி கோஸ்ட் நாட்டின் ஆட்சியை ஏற்றதிலிருந்து, அந்த நாடு அரசியல், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு துறைகளில் நிலைத்தன்மையை அடைந்தது. குறுகிய காலத்திலேயே அந்நாட்டில் ஒருவரின் வருடாந்திர வருமானம் சுமார் 5000 டாலராக உயர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

அவர் நீதியுடன் ஆட்சி செய்ததால் மக்கள் பாதுகாப்பாக வாழ்ந்தனர்; அதனால் அவர் அமைதியாக உறங்கினார் என்பதையும் உலக ஊடகங்கள் இந்த படத்தின் மூலம் எடுத்துக்காட்டின.

அல்லாஹ் அவர்களின் ஹஜ்ஜை ஏற்றுக்கொண்டு, அனைத்து நன்மைகளிலும் அவருக்கு வெற்றி அளிப்பானாக!

குறிப்பு: இந்த படம் பழையது. இது 2024 / 1445 ஹிஜ்ரி ஹஜ் காலத்தைச் சேர்ந்ததாகும்.“என கடந்த மாதம் 21 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு  (21.05.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

இணையத்தில் பரவி வருகின்ற ஐவரி கோஸ்ட் ஜனாதிபதியின் அண்மைக்கால மேற்காசிய பயணம் குறித்து இணையத்தில் தேடியபோது, ஏப்ரல் 2022 இல் அவர் மதீனாவில் உள்ள மஸ்ஜித் நபவியில் உம்ராஹ் செய்ய வந்ததாக செய்திக் அறிக்கைகள் எமக்கு கிடைத்தன. 

saudi gazette வெளியிட்ட அறிக்கையின்படி, ஐவரி கோஸ்ட் ஜனாதிபதி அலசானே வட்டாராவை சவூதி சிறப்புப் படைகள் மற்றும் மசூதி அதிகாரிகள் நேரில் வரவேற்றனர். குறித்த இணையத்தளத்தில் பதிவேற்றியிருந்த அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் எதுவும் தற்போது வைரலாகும் புகைப்படத்துடன் ஒத்துப்போகவில்லை.

saudigazette.com | Arab news 

மேலும் நாம் மேற்கொண்ட தேடலின் போது கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஜனாதிபதி அலசானே வட்டாரா மக்கா மற்றும் மதீனாவுக்கு புனிதப் பயணம் மேற்கொண்டார்.

அவர் சக்கர நாற்காலியில் (Wheelchair) ஹஜ் செய்தபோதிலும், அவரது குடும்பத்தினருடனும் பல ஐவரியன் பிரமுகர்களுடனும் அங்கு சென்றிருந்தமை புகைப்படங்களில் காணக்கிடைத்தது. சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல்அஜிஸ் அல் சவுத்தின் அழைப்பின் பேரிலேயே அவர் இந்த யாத்திரையைத் சென்றிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தனரை். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் கிடைக்கின்றன, ஆயினும் குறித்த புகைப்படங்கள் எதுவும் இந்த வைரல் புகைப்படத்துடன் பொருந்தவில்லை.

இதே புகைப்படம் 2018 ஹஜ்ஜின் போது ஐவரி கோஸ்ட் அதிபர் என்று பரவியபோது, சவூதி அரேபியாவின் உண்மை கண்டறியும் நிறுவத்தினால்  வெளியிடப்பட்ட எக்ஸ் பதிவும் எமக்கு கிடைக்கப்பெற்றது. அதில், “புகைப்படத்தில் உள்ள நபர் ஜனாதிபதி அலசானே வட்டாரா இல்லை. சவூதி அரசு நெறிமுறைகள் நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல. ஜனாதிபதி வட்டாரா 2018 இல் தனது தனிப்பட்ட பாதுகாப்புப் பிரிவினருடன் ஹஜ் செய்தார்” என்று தெளிவுபடுத்தியது.

செயற்கை நுண்ணறிவு அறியும் கருவி மூலம் இணையத்தில் பரவி வருகின்ற குறித்த படத்தை ஆய்வு செய்தபோது குறித்த புகைப்படமானது செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டுள்ளமை கண்டறியப்படட்து.

எனவே நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் ஐவரி கோஸ்ட் நாட்டின் ஜனாதிபதி ஹஜ் கடமையின் போது தரையில் உறங்கியதாக  பரவும் புகைப்படம் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என கண்டறியப்பட்டது.

எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு

எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Result Stamp

Title: ஐவரி கோஸ்ட் நாட்டின் ஜனாதிபதி ஹஜ் கடமையின் போது தரையில் உறங்கியதாக பரவும் புகைப்படம் உண்மையா?

Fact Check By: S.G.Prabu

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *