
கண்டி ஹந்தானை இளைஞர்களை ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளரான வேலுகுமார் கேவலப்படுத்தியதாக தெரிவித்து பேஸ்புக்கில் தொலைபேசி அழைப்பின் ஒலிப்பதிவு, என பேஸ்புக்கில் ஒரு பதிவு பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:
தமிழர்களின் உரிமை குரல் என்ற பேஸ்புக் பக்கத்தில் ”ஹந்தானை இளைஞர்களை கேவலப்படுத்திய வேலு குமார்” என்று நேற்று (04.08.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
<iframe src=”https://archive.org/embed/screencast-www.facebook.com-2020.08.05-07_43_41″ width=”640″ height=”480″ frameborder=”0″ webkitallowfullscreen=”true” mozallowfullscreen=”true” allowfullscreen></iframe>
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நிமிர்த்தமாக நாம் மேற்கொண்ட சோதனையின் போது, Velu Kumar Army என்ற பேஸ்புக் பக்கத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் கண்டி வேட்பாளரான வேலுகுமார் அவர்கள் இதுதொடர்பாக பேசிய காணொளி பதிவு காணப்படுகிறது.
குறித்த காணொளி பதிவில், ”தன்னை போன்று மிமிக்கிரி செய்து ஒருவர் பேசியுள்ளதாகவும், தன்னுடைய வெற்றியினை தடுக்கவே இவ்வாறான பதிவுகள் பதிவேற்றம் செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் நாம் வேலுகுமார் அவர்களை தொடர்புகொண்டு குறித்த வீடியோ தொடர்பாக வினவியபோது, இது தன்னை போன்று உரையாடி எடுக்கப்பட்டுள்ள குரல் பதிவி என்று தெரிவித்தார்.
இதற்கமைய, ஹந்தானை இளைஞர்களை கேவலப்படுத்தினார் வேலு குமார், என்று பேஸ்புக்கில் பகிரப்படும் தகவல் போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.
Conclusion: முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்ட ஆதாரங்களுடன் ஹந்தானை இளைஞர்களை கேவலப்படுத்தினார் வேலு குமார் என்று பேஸ்புக்கில் பகிரப்படும் தகவல் போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

Title:ஹந்தானை இளைஞர்களை கேவலப்படுத்தினாரா ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் வேலு குமார்?
Fact Check By: Nelson ManiResult: False