INTRO :
ரம்புக்கனை பகுதியில் நேற்று (19.04.2022) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் மரணமடைந்த நபர் என சிலரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் ” ரம்புக்கன போரட்டத்தில் வீரமரணம் அடைந்த நான்கு சகோதரர்கள்.

எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். “ என இம் மாதம் 19 ஆம் திகதி (19.04.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

பெற்றோல் விலையேற்றத்திற்கு எதிராக நேற்று ரம்புக்கனையில் புகையிரத பாதையினை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது, ஆர்ப்பாட்டத்தினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார். காயமடைந்த 13 பேர் தொடர்ந்து கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதென கேகாலை வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். வாசிக்க

எனினும் உயிரிழந்தவர் சமிந்த லக்ஷான் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்திருந்தார்.

Facebook Link | Archived Link

இது தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ரம்புக்கனையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டவர் ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் முன்னணியின் முன்னாள் உறுப்பினர் என்றும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபர் மற்றும் போராட்டத்தின் போது காயமடைந்த ஏனையவர்களின் உறவினர்களை சந்திப்பதற்காகவே ரம்புக்கனை பிரதேசத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன வருவதாக அந்த டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாம் இணையத்தில் பகிரப்பட்டிருந்த 4 புகைப்படங்களையும் தனித்தனியாக ஆய்வு மேற்கொண்ட போது,

போராட்டத்தின் போது உயிரிழந்ததாக சமூக வலைத்தளங்களில் சுட்டிக் காட்டிய நபரின் பின்வரும் புகைப்படத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தனவிற்கு அனுப்பி வைத்தோம். குறித்த புகைப்படத்தில் உள்ளவர் உயிரிழந்த சமிந்த லக்ஷான் என அவர் குறிப்பிட்டார்.

A picture containing text  Description automatically generated
Facebook | Archived Link

இரண்டாவது புகைப்படத்திலகடந்த 18 ஆம் திகதி கார் விபத்திற்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் என கண்டறியப்பட்டது.

Facebook | Archived Link

எவ்வாறாயினும், குறித்த நபரின் நண்பரான சமில நிரோஷனை தொடர்பு கொண்டோம், அவர் மோட்டார் சைக்கிள் விபத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சுமார் ஒரு மாதத்தின் பின்னர் லக்ஷான் தினேஷ் இம்மாதம் 18 ஆம் திகதி உயிரிழந்ததாக தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் அவரின் புகைப்படம் இதோ

மற்றைய புகைப்படத்தினை நாம் ஆய்வு செய்த போது, அமில சுபோதன என்ற நபர் விரைவில் குணமடைய கூறி சஜீவ என்ற நபரினால் கடந்த 18 ஆம் திகதி பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது.

Facebook | Archived Link

மேலதிக தகவல்களுக்கு நமது குழுவினர் சஜீவ டி.மதுரங்கவை தொடர்பு கொண்டோம், அவர் 17 ஆம் திகதி அரலகங்வில தெஹியத்தகண்டிய வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் கடந்த 19 ஆம் திகதி உயிரிழந்ததாக தெரிவித்தார்.

மேலும், நான்காவது புகைப்படத்தில் இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மாணவன் தேஜக சந்தருவன், சமூக வலைத்தளங்களில் பரவிய தனது புகைப்படம் தொடர்பில் முகநூல் பதிவொன்றை பதிவிட்டிருந்தார்.

இது விளையாட்டாக யாரோ ஒருவரினால் பகிரப்பட்ட விடயம் என அதில் அவர் பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது.

Facebook | Archived Link

எனவே நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், ரம்புக்கனை போரட்டத்தில் துப்பாக்கி சூட்டில் மரணமடைந்த நபர் என பரவும் சில புகைப்படங்கள் போலியானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:ரம்புக்கனை போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்த நபர் யார் தெரியுமா?

Fact Check By: S G Prabu

Result: Misleading