INTRO :
இலங்கை நாட்டை சேர்ந்த மெனிக்கே மகே ஹித்தே பிரபல பாடகியான யோஹானியை வரவேற்பதற்கு இந்தியாவில் குவித்த ரசிகர்கள் என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

Jaffna Pullingow என்ற பேஸ்புக் பக்கத்தில் ” மெனிக்கே புகழ் இலங்கை பாடகியை காண இந்தியாவில் குவிந்த நான்கரை லட்சம் ரசிகர்கள்!!👇👇

உலகளாவிய ரீதியில் பிரபல்யம் அடைந்துள்ள இலங்கையின் இளம் பாடகி யோஹானி டி சில்வாவை (Yohani Diloka de Silva) வரவேற்க பெருமளவு இந்திய ரசிகர்கள் ஒன்று கூடியுள்ளனர்.

இந்தியாவில் இடம்பெறவுள்ள இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக யோஹானி அங்கு சென்றுள்ளார். இதன்போது புது டெல்லி விமான நிலையத்தில் சுமார் நான்கரை இலட்சம் ரசிகர்கள் ஒன்று கூடியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மெனிக்கே மகே ஹித்தே என்ற பாடல் மூலம் இந்திய இசை ரசிகர்கள் மத்தியில் யோஹானி பிரபல்யம் அடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் இந்தியாவுக்கு சென்றுள்ள பாடகிக்கு மகத்தான வரவேற்று கொடுக்கப்பட்டதுடன், ரசிகர்கள் சார்பில் பணப்பரிசும் கொடுக்கப்பட்டதாக தெரிய வருகிறது.

Youtube இல் வெளியிடப்பட்ட மெனிக்கே மகே ஹித்தே என்ற பாடல் சர்வதேச ரீதியாக புகழ் அடைந்துள்ளதுடன், இதுவரையில் 133 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

இலங்கையின் வரலாற்றில் சிங்கள பாடல் ஒன்று சர்வதேச ரீதியாக பிரபல்யம் அடைந்த முதல் சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. “ என இம் மாதம் 02 ஆம் திகதி 02.10.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது போன்று மேலும் பலர் பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

யோஹானியை வரவேற்க 450,000 பேர் வருகை தந்ததாக வெளியான செய்தி தொடர்பான ஆய்வில் இந்தியாவின் பிரதான செய்தி நிறுவனங்களும் இது தொடர்பாக எவ்விதமான செய்தியும் வெளியிட்டிருக்கவில்லை.

மேலும் நாம் இது குறித்தான தேடலின் போது, இந்தியாவிற்கு வருகை தந்த யோஹானியின் புகைப்படம் வெளியாகிருந்த செய்தி எமக்கு கிடைக்கப்பெற்றது. அதில் யோஹானி உடன் அவர் குழு மொத்தமாக 9 பேர் வருகை தந்துள்ள புகைப்படம் எமக்கு கிடைக்கப்பெற்றது. மேலும் அவ்விடத்தில் இணையத்தில் பரவுவது போன்று 450,000 ரசிகர்கள் வருகை தந்தமைக்கான எவ்விதமான ஆதாரங்களும் எமக்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

indiablooms.com | Archived

நாம் குறித்த புகைப்படத்தினை கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, 2019 ஆம் ஆண்டு டோக்கியோவை தாக்கிய சூறாவளி காரணமாக விமானங்கள் நிறுத்தப்பட்டதால் ஜப்பானின் நரிடா சர்வதேச விமான நிலையத்தில் சிக்கி தவித்த மக்களின் புகைப்படம் என கண்டறியப்பட்டது.

Japan forward | Archived Link

யோஹானி டி சில்வாவை வரவேற்க இந்தியாவில் டெல்லி விமான நிலையத்தில் திரண்ட ரசிகர்கள் என பகிரப்பட்ட புகைப்படத்தினையும், ஜப்பானின் டோக்கியோ விமான நிலையத்தில் விமானங்கள் இடைநிறுத்தப்பட்டதால் ஏற்பட்ட நெரிசல் புகைப்படத்தினையும் ஒப்பிட்டபோது,

யோஹானிக்கு டெல்லியில் திரண்ட ரசிகர்கள் என பகிரப்படும் புகைப்படம் போலியானது என கண்டறியப்பட்டது.

நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், யோஹானிக்கு இந்தியாவில் குவித்த ரசிகர்கள் என பகிரப்படும் புகைப்படம் முற்றிலும் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.

எமது சிங்கள பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:யோஹானிக்கு இந்தியாவில் குவிந்த ரசிகர்களா இவர்கள்?

Fact Check By: S G Prabu

Result: Misleading