கோவிலுக்குள் செல்ல முன் கையை சுத்திகரிப்பதற்கு Sanitizer பயன்படுத்தினால் எரியும் கற்பூரத்தின் மீது கையைக் கொண்டு செல்ல வேண்டாம் என ஒரு செய்தி பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link

Suren Nada என்ற பேஸ்புக் கணக்கில் ” கோவிலுக்குள் செல்ல முன் கையை சுத்திகரிப்பதற்கு Sanitizerஐ பயன்படுத்தினால் எரியும் கற்பூரத்தின் மீது கையைக் கொண்டு செல்ல வேண்டாம்!

விளைவு இவ்வாறு இருக்கும்” என்று ஜுலை மாதம் 05 ஆம் திகதி (05.07.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

நாம் குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமிர்த்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

குறித்த தேடலின் போது, ஹேண்ட் சானிட்டைசர் பயன்படுத்தினால் தீப்பிடிக்குமா என்று கேட்டால், இல்லை என்பதே பதில். சானிட்டைசரில் கலந்துள்ள ஆல்கஹால் காரணமாக, தீப்பிடிக்கும் என்று முழுதாகச் சொல்லிவிட முடியாது.

சானிட்டைசர் பாட்டில்களை சூடான இடத்தில் களஞ்சியம் செய்து வைத்தால் தீப்பிடிக்க வாய்ப்புள்ளது. அதேபோல, அவற்றின் மீது நீண்ட நேரம் நேரடியாக வெயில் அல்லது தீ பட்டால், தீப்பிடிக்கக்கூடும். மற்றபடி, கைகளில் தேய்த்துக் கொண்டு, அதன் ஈரம் காய்ந்துவிட்டால், மீண்டும் நெருப்பின் மீது கைகளை காட்டினால், தீப்பற்ற வாய்ப்பில்லை.

Usatoday.com Link | Nbcdfw.com Link

இதுதொடர்பாக, உலக சுகாதார நிறுவனம் (WHO) வெளியிட்டுள்ள அறிக்கையினையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.

WHO Advisory Link

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின் படி கைகளில்

சானிட்டைசரை தேய்த்துக் கொண்டால், சில நிமிடங்கள் அதனை உலர விட வேண்டும். அதன் பிறகு, தீ பட்டாலும் கைகளில் தீப்பிடிக்க வாய்ப்பில்லை. காரணம், சானிட்டைசரில் கலந்துள்ள ஆல்கஹால் கைகளில் தேய்த்து உலர விடும் நேரத்தில், ஆவியாகிவிடும்.

எங்கள் கைகள் உலர்ந்து விட்டால் அது பாதுகாப்பாகவுள்ளது. மேலும் கைகளில் சானிட்டைசர் உலராமல் அதன் ஈரத்தன்மையோடு நெருப்பின் மீது கையை நீட்டினால் கண்டிப்பாக அதிலுள்ள ஆல்கஹால் காரணமாக தீப்புண் ஏற்பட வாய்ப்புள்ளது என உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையில் உள்ளது.

பேஸ்புக்கில் பகிரப்படுகின்ற குறித்த புகைப்படம் சானிட்டைசர் தடவிய கைகளை கற்பூர தட்டின் மீது காட்டியதினால் ஏற்பட்ட காயமா என்று நாம் ஆய்வினை மேற்கொண்டோம்.

குறித்த புகைப்படமானது, தீக்காயம் தொடர்பானது இல்லை. Dyshidrotic Eczema என்ற நோய் பாதிப்பால் ஏற்படக்கூடியதாகும்.

எமது இந்திய தமிழ் பிரிவினரின் ஆய்வு அறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

நாம் மேற்கொண்ட தேடுதலில் அடிப்படையில் கோயிலுக்குச் செல்வோர் Hand Sanitizer பயன்படுத்தக்கூடாது என பரவும் செய்தி போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:Sanitizer பயன்படுத்தினால் எரியும் கற்பூரத்தின் மீது கை காட்ட வேண்டாம்; உண்மை என்ன?

Fact Check By: Nelson Mani

Result: Missing Context