
INTRO :
சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான ஒரு செயலியாக விளங்கும் வாட்ஸ் அப் புதிய விதிகள் விதித்துள்ளதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

Thevathas Kokulan என்ற பேஸ்புக் கணக்கில் *முக்கிய* *அறிவிப்பு*
×××××××××××××
வாட்ஸ் அப் மற்றும் வாட்ஸ் அப் வீடியோ கால்களுக்கு நாளைமுதல் அரசு புதிய சட்டத்தை அமல்படுத்த உள்ளது…
1, நீங்கள் அழைக்கும் ஒவ்வொரு கால்களும் பதிவு செய்யப்பட்டு சேமிக்க ப்படும்….
2.வாட்ஸ் அப்,பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம்,மற்றும் அனைத்து சமூக வளைதளங்களும் கண்காணிக்கப்படும்..
3.உங்களது செல்போன் இணைப்பு மத்திய அரசின் தகவல் தொடர்புடன் இணைக்கப்படுவதால் தயவுசெய்து யாரும் தவறான தகவல்களை அனுப்ப வேண்டாம்…
4.சமூக வளைதளங்களை கவனமாக கையாளுமபடி உங்கள் குழந்தைகள்,நண்பர்கள், சொந்தங்கள், சொல்லி வையுங்கள்…
5-கொரானா, அரசியல், பிரதமர் மற்றும் அரசுக்கு எதிராக எந்த தகவல்களையும் வாட்ஸ் அப்பில் அனுப்ப வேண்டாம்…
6. அப்படி அனுப்பினால் உங்களை எந்தவித வாரண்டும் இல்லாமல் கைது செய்வார்கள்….
7.காவல்துறை உங்களுக்கு நோட்டீஸ் கொடுத்து உங்கள் மீது வழக்கு தொடரப்படும்…
8.குருப்பில் உள்ள அனைவரும் கவனமாக தகவல்களை அனுப்ப வும்,இதை அனைவருக்கும் தெரியப்படுத்தவும்…
*குரூப்பில்* *உள்ள* *அனைவருக்கும்* *வாட்ஸ்* *அப்* *புதிய* *சட்டம்* *பற்றிய* *தகவல்* ..
1. செல் போனில் நீங்கள் மெசேஜ் அனுப்பிய பின் ஒரு ✔️வந்தால் தகவல் அனுப்பபட்டது..
2. ✔️✔️ வந்தால் தகவல் போய் சேர்ந்து விட்டது…
3.இரண்டு ஊதா கலர்✔️✔️வந்தால் தகவல் படிக்கப்பட்டது..
4.மூன்று ஊதா கலர்✔️✔️✔️ அரசு கவனிக்கிறது…
5.ஒரு ஊதா✔️ இரண்டு✔️✔️சிவப்பு வந்தால் அரசு உங்கள் தகவல்களை அரசு கவனிக்கின்றது…
6. இரண்டு ஊதா✔️✔️ஒருசிவப்பு✔️வந்தால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கிறது.
7. மூன்று சிவப்பு✔️✔️✔️ வந்தால் உங்கள் மேல் நடவடிக்கை எடுத்து கோர்ட் சம்மன் விரைவில் அனுப்பி வைக்கப்படும்…
ஆகவே நன்கு யோசித்து தகவல்களை அனுப்ப வும் மாட்டிக்கொள்ளாதீர்கள்.. “ என கடந்த ஜுன் மாதம் 15 ஆம் திகதி (15.06.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது போன்று மேலும் பலர் பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
உண்மையில் வாட்ஸ்அப் வழியாக இரண்டு நபர்களுக்கு அல்லது ஒரு குழுவிற்கோ இடையில் பகிரப்படுகின்ற செய்திகளை மூன்றாம் நபர் அல்லது தரப்பினருக்கு பெறுவது சாத்தியமா ?
வாட்ஸ்அப் ஒரு சமூக வலைத்தளமாகும் இதில் End to End Encryption என்ற தொழில்நுட்பம் பயன்படுத்துகிறது, மேலும் உங்கள் தனிப்பட்ட செய்திகள் மற்றும் அழைப்புகளின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு என்றும் மாறாது அத்துடன் அந்த தகவல் கண்டிப்பாக குறியாக்கம் செய்யப்பட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கில் நிறுவனங்களுக்கு அதனை வாசிக்கவோ கேட்கவோ முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு ஒருபோதும் மாற்றம் செய்யப்படாது என்றும் ஒவ்வொரு செய்தியும் (chat) ரகசியமாக வைக்கப்படும் என்றும் அது கூறுகிறது.
End to End Encryption என்பது உங்கள் WhatsApp செய்திகளைப் பாதுகாக்கும் குறியீடாகும். நீங்களும் பெறுநரும் மட்டுமே செய்தியைப் படிக்கவும் பார்க்கவும் இந்த குறியீடு சேமிக்கப்பட்டுள்ளது. இதையும் நீங்கள் பார்க்கலாம்.
இந்த குறியீடு 60 இலக்கங்களைக் கொண்டுள்ளது, ஒவ்வொன்றும் தனித்துவமான குறியீடுகளைக் கொண்டுள்ளது, மேலும் ஒவ்வொரு குறியீடும் செய்தி பெறுநரின் குறியீட்டைப் போன்றது. அப்படியானால், செய்தி பாதுகாப்பானது என உறுதி செய்யப்படுகிறது.

இந்த தொழில் நுட்பம் தொடர்பாக தமிழில் தரப்பட்ட விளக்க வீடியோ

மேலும், இங்கே சரி (✔) அடையாளம் உண்மையில் சாம்பல் மற்றும் நீலத்தில் மட்டுமே பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.
இதில் நாம் அனுப்பும் செய்தி சாம்பல் நிறத்தில் ✔ அடையாளம் காணப்படின் செய்தி எம்மிடமிருந்து அனுப்பப்பட்டது என அர்த்தமாகும்.
குறித்த செய்தி பெறுநரின் தொலைபேசிக்கு பெறப்பட்டதைக் சாம்பல் நிறத்தில் ✔✔ குறிக்கும்.
பெறுநர் செய்தியைப் படித்திருப்பதை நீல நிறக் ✔✔ குறிக்கிறது.
இது வாட்ஸ்அப்பில் விளக்கப்பட்டது.

இணையத்தில் பரவுகின்ற பல நிறங்களில் சரி குறியீடு வரும் மற்றும் அதன் பின்னணி தொடர்பாக தரப்பட்டுள்ள விளக்கங்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியான செய்தி அறிக்கைகள்
நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், வாட்ஸ் அப் அழைப்புக்கள் பதிவு செய்யப்படவுள்ளதாக என பகிரப்படும் செய்தி முற்றிலும் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.
எமது சிங்களப்பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
ஆங்கிலத்தில் இது தொடர்பாக ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.