அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய போராட்டம் என பரவுகின்ற புகைப்படம் உண்மையா..? 

Altered சர்வதேசம் | International

Subscribe to our WhatsApp Channel

INTRO :

அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய போராட்டம் என ஒரு புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின்விவரம் (What is the claim):

facebook Link  | Archived Link

#டிரம்புக்கு எதிராக மக்கள் வெள்ளம்!

அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய போராட்டம் ! பாவமாக  இருக்கிறது அமெரிக்காவின் நிலை இவ்வளவு மக்கள் தெருக்களில் ஒருபோதும் இருந்ததில்லை! ஊடகங்கள் ஏன் இதைப் பற்றி அமைதியாக இருக்கின்றன!! “என இம் மாதம் 05 ஆம் திகதி 2026 ஆம்ஆண்டு  (05.02.2026) பதிவேற்றம்செய்யப்பட்டிருந்தது. 

இது உண்மையென நினைத்து பலர்பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

நாம் முதலில் குறித்த புகைப்படத்தினை நன்கு அவதானித்தபோது, இது சற்று இயற்கைக்கு மாறாக தென்படவே நாம் இதனை கூகுள் ரிவஸ் இமேஜீனை பயன்படுத்தி ஆய்வு செய்தோம்.

குறித்த தேடலின் போது, கடந்த மாதம் 23 ஆம் திகதி (23.01.2026) அமெரிக்காவில் மினசோட்டா மாகாணத்தின் மினியாபொலிஸ் நகரில் குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத் துறை (ICE) அமைப்பின் நடவடிக்கைக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டம் என கண்டறியப்பட்டது. இது தொடர்பாக gettyimages இணையத்தளத்தில் வெளியாகியிருந்த புகைப்படமும் எமக்கு கிடைக்கப்பெற்றது.

குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத் துறை (ICE) அமைப்பின் நடவடிக்கைக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக பல சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமையும் காணக்கிடைத்தது.

The Guardian | nbc news | forbes | bbc.com

<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/sWvqjYSVP8Y?si=8b-DRszJKcH-6yCe” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>

Gettyimages வெளியாகியிருந்த புகைப்படமும், இணையத்தில் பகிரப்படும் புகைப்படத்தினையும் ஒப்பிட்டு நன்கு அவதானித்த போது, இணையத்தில் பகிரப்படும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

ஆகவே நாம் இணையத்தில் வைரலாகின்ற குறித்த புகைப்படத்தினை செயற்கை நுண்ணறிவு கண்டறியும் கருவிகளை பயன்படுத்தி ஆய்வு செய்தபோது, இது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்படடிருந்தமை உறுதியானது.

நாம் கூகுள் Map உதவியுடன் குறித்த போராட்டம் இடம்பெற்ற இடத்தினை கண்டறிந்தபோது, அங்கு US Bank Stadium பகுதி கண்டறியப்பட்டது. இது சமூகவலைத்தளத்தில் வைரலாகின்ற புகைப்படத்திலும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

ஆயினும் குறித்த பகுதியில் இருந்த மற்றைய கட்டிடங்கள் வைரலாகின்ற புகைப்படத்தில் நீக்கப்பட்டுள்ளமை காணக்கிடைத்தது.

குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத் துறை (ICE) அமைப்பின் அதிரடி நடவடிக்கைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

மினசோட்டா மாகாணத்தின் மினியாபொலிஸ் நகரில் கடந்த ஜனவரி 7 ஆம் திகதி (07.01.2026)  ரெனீ நிகோல் குட் (37) என்பவர் ICE அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் பனியில் சிக்கிய வாகனங்களை அகற்ற ICE அதிகாரிகளைத் தடுத்தபோது சம்பவம் நடந்தது. அதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 24 ஆம் திகதி (24.01.2026) அலெக்ஸ் பிரிட்டி (37) என்பவரும் ICE அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவ்விரு சம்பவங்களும் குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு காரணமாக அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய போராட்டம் என பரவும் புகைப்படமானது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கபட்டுள்ளமை கண்டறியப்பட்டது.

எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு

எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Avatar

Title:அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய போராட்டம் என பரவுகின்ற புகைப்படம் உண்மையா..? 

Fact Check By: S G Prabu  

Result: Altered

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *