
அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் ஈரான் இராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டார் தொடர்ந்து இதற்கு பதிலடியாக ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது 16 ஏவுகணைகளை ஈரான் ஏவியது.
அத்தாக்குதலில் அமெரிக்க படை வீரர்கள் பலியாகியுள்ளதாக புகைப்படங்கள் மற்றும் அதற்கு அமெரிக்க ஜனாதிபதி மற்றும் உயர் அதிகாரிகள் உயிரிழந்த இராணுவ அதிகாரிகளுக்கு இரங்கல் தெரிவிக்கும் புகைப்படம் என்று சில சமூகவலைத்தளங்களில் பகிரப்படுவதை நமக்கு காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Link | News link | Archived Link
Rasalingam Satheeswaran என்ற பேஸ்புக் கணக்கில் ” ஈராக்கில் கொத்துக் கொத்தாக உயிரிழந்து கிடக்கும் அமெரிக்க இராணுவ வீரர்கள்! திடுக்கிடும் புகைப்படங்கள்.” என்று இம் மாதம் 10 ஆம் திகதி (10.01.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
குறித்த பதிவோடு jvp news இணையத்தளத்தில் செய்தி லிங்கினையும் இணைத்துள்ளனர்.
Fact Check (உண்மை அறிவோம்)
இது தொடர்பில் நாம் ஆய்வினை மேற்கொள்ள முதலில் குறித்த செய்தி இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்த புகைப்படங்களை Google Reverse Image Tool ஐ பயன்படுத்தி ஆய்வு செய்தோம்.
அமெரிக்க ஜனாதிபதி மற்றும் உயர் அதிகாரிகள் உயிரிழந்த இராணுவ அதிகாரிகளுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக புகைப்படம் 2019 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதிக்காக கிறிஸ்தவ தலைவர்கள் செபத்தில் ஈடுபட்டபோது எடுத்ததாகும்.
நாம் மேற்கொண்ட சோதனையில் பதியப்பட்டிருந்த புகைப்படங்கள் அனைத்து வெவ்வேறு சம்பவங்களுடன் தொடர்புடைய புகைப்படங்கள் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், ஈராக்கில் உயிரிழந்த அமெரிக்க இராணுவ வீரர்கள் என கூறப்பட்ட வெளியான புகைப்படங்கள் போலியானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Title:ஈராக்கில் உயிரிழந்த அமெரிக்க இராணுவ வீரர்கள் என வெளியான புகைப்படங்கள் உண்மையா?
Fact Check By: Nelson ManiResult: False