
INTRO :
ரியான் ரிக்கெல்டனுக்கு பதிலாக குசல் ஜனித் பெரேரா மும்பை இந்தியன்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என சில பதிவுகள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):
சமூகவலைத்தளங்களில் “ரியான் ரிக்கெல்டனுக்கு பதிலாக குசல் ஜனித் பெரேரா மும்பை இந்தியன்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்!
நேற்றைய ஆட்டத்தின் இறுதியில் ரியான் ரிக்கெல்டனுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது.
அவர் சுமார் 3 வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டும். அவருக்கு பதிலாக இலங்கை அதிரடி, துடுப்பாட்ட வீரரும் விக்கெட் காப்பாளருமான குசல் ஜனித் பெரேரா மும்பை இந்தியன்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
#ipl2025 #KusalPerera #sportsmedianews #sportsmedia “ என இம் மாதம் 01 ஆம் திகதி 2025 ஆம் ஆண்டு (01.04.2025) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
முதலில் நாம் குறித்த தகவல் தொடர்பாக எதும் அறிவித்தல்கள் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக வழங்கப்பட்டுள்ளதா என அவர்களின் உத்தியோகப்பூர்வ சமூகவலைத்தளங்கள் மற்றும் இணையத்தளத்தில் ஆய்வினை மேற்கொண்டபோது, அவ்வாறான எவ்விதமான பதிவும் எம்மால் காணக்கிடைக்கவில்லை.
Facebook Link | Instagram Link | X.com | Website
இது தொடர்பாக சர்வதேச ஊடகங்கள் மற்றும் நாட்டின் பிரதான ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளதா என ஆய்வு செய்தபோது, அவ்வாறு செய்தி வெளியாகி இருக்கவில்லை.
மேலும் நாம் ஆய்வினை மேற்கொண்டபோது, பாகிஸ்தான் நாட்டில் இடம்பெறும் பாகிஸ்தான் சூப்பர் லீக் (Pakistan Super League ) போட்டியில் லாஹூ கிலாண்டர்ஸ் (Lahore Qalandars) அணியில் குசல் ஜனித் பெரேரா இணைக்கப்பட்டுள்ளமை காணக்கிடைத்தது.
லாஹூ கிலாண்டர்ஸ் அணியினர் குசல் ஜனித் பெரேராவை தமது அணிக்கு வரவேற்ற வீடியோ பதிவினை அவர்களின் உத்தியோகப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்த்தில் பதிவேற்றியிருந்தமை காணக்கிடைத்தது.
குசல் ஜனித் பெரேரா ஜபிஎல் வரலாறு
இலங்கை நாட்டினை சேர்ந்த அதிரடி துடுப்பாட்ட வீரரான குசல் ஜனித் பெரேரா 2013 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக களமிறங்கிய இவர் 2 போட்டிகள் மாத்திரமே விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://www.iplt20.com | cricbuzz.com
இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில்ரியான் ரிக்கெல்டனுக்கு பதிலாக குசல் ஜனித் பெரேரா மும்பை இந்தியன்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பரவும் தகவல்கள் போலியாக பகிரப்பட்டுள்ளமை என கண்டறியப்பட்டுள்ளது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:ரியான் ரிக்கெல்டனுக்கு பதிலாக குசல் ஜனித் பெரேரா மும்பை இந்தியன்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளாரா?
Written By: S.G.PrabuResult: False
