
INTRO :
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் மரணித்து விட்டதாக மரண அறிவித்தல் புகைப்படம் இணையத்தில் பரவி வருகின்றமை காணக்கிடைத்து.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் இது போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

Mailvakanam Parameswaran என்ற பேஸ்புக் கணக்கில் முத்தையா முரளிதரன் இம்மாதம் 15 ஆம் திகதி (15.10.2020) மரணித்து விட்டதாக ஒரு மரண அறிவித்தல் புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. குறித்த புகைப்படமானது இம்மாதம் 16 ஆம் திகதி (16.10.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமிர்த்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றினை மையமாக கொண்டு விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியாகவிருந்த 800 என்ற படத்தின் motion poster வெளியானதை தொடர்ந்து பலரும் குறித்த படத்திற்கு எதிர்ப்புக்களை தெரிவித்திருந்து வந்தனர்.
குறித்த கிளர்ச்சினால் தமிழ் திரையுலகில் பிரபலமான விஜய் சேதுபதிக்கு பாதிப்பு வர கூடாது என முத்தையா முரளிதரன் விஜய் சேதுபதிக்கு குறித்த திரைப்படத்திலிருந்து விலகிக்கொள்ளுமாறு தெரிவித்திருந்தார்.
இதனிடையில் முத்தையா மரணித்து விட்டதாக சிலர் பொய்யான தகவலினை பரப்பி வருகின்றமை எமக்கு காணக்கிடைத்து.
முரளி மரணித்து விட்டதாக குறித்த மரண அறிவித்தலில் இம்மாதம் 15 ஆம் திகதி (15.10.2020) பதியப்பட்டுள்ளமை எமக்கு காணக்கிடைத்தது.
நாம் ஆய்வினை மேற்கொண்டவேளையில் இம்மாதம் 18 ஆம் திகதி (18.10
2020) முத்தையா முரளிதரன் ஐபிஎல் போட்டியின் போது ஊடக சந்திப்பில் உரையாடிய காணொளி எமக்கு கிடைக்கப்பெற்றது.
மேலும் விஜய்சேதுபதியினை குறித்த திரைப்படத்திலிருந்து விலகிக்கொள்ளுமாறு வேண்டுக்கொள்ளுமாறு வேண்டுக்கோள் விடுத்து முத்தையாமுரளிதரனால் இம்மாதம் 19 ஆம் திகதி (19.10.2020) அனுப்பப்பட்ட கடிதம் எமக்கு கிடைக்கப்பெற்றது.
நன்றி.. வணக்கம் 🙏🏻 pic.twitter.com/PMCPBDEgAC
— VijaySethupathi (@VijaySethuOffl) October 19, 2020
இதற்கமைய முத்தையா முரளிதரன் மேல் எழுந்த கோபத்தின் வெளிப்பட்டினால் அவர் மரணித்துவிட்டதாக பொய்யான தகவல்களை மக்கள் மத்தியில் பரவி வருகின்றமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.