INTRO :
தமிழர்கள் வாழும் பகுதியில் உள்ள பெயர் பலகையில் தமிழ் மொழி மறுக்கப்பட்டுள்ளதாக, ஒரு பெயர் பலகையின் புகைப்படப்பதிவு இணையத்தில் பரவி வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

எங்கட யாழ்ப்பாணம் என்ற பேஸ்புக் பக்கத்தில் ” தமிழே காணல பிறகு என்ன ? Chinese தானே இருக்கு . இதை பற்றி சொல்லுங்கள் 🤪😂😢😢

கொழும்பு central park” என இம் மாதம் 27 ஆம் திகதி (27.12.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

பலரும் இதன் உண்மைத் தன்மையினை கண்டறியாமல் பகிர்ந்திருந்தமை எமக்கு காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

எமது ஆய்வின் போது, குறித்த பெயர் பலகையின் கீழ் பெயரிடப்பட்டிருந்த இலச்சினையினை நாம் ஆய்வு செய்த போது, குறித்த பெயர் பலகையானது சீனா நிறுவனத்தினால் நிறுவப்பட்டுள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

அதில் இருந்த இலச்சினை ஆய்வு செய்தபோது, அது China Harbor Engineering Corporation (CHEC), என்ற போர்ட் சிட்டி நிர்மாணிப்பு பணிகளை மேற்கொள்ளும் நிறுவனமாகும்.

நமது ஆய்வின் போது, இலங்கையில் பிரபல்யமான யூடியுப் அலைவரிசையான “Travel with Wife” என்ற அலைவரிசையில் இவ்வருடம் ஜனவரி மாதத்தில் வெளியான போர்ட் சிட்டி நிர்மாணப்பணிகள் தொடர்பான காணொளியில் இருந்து குறித்த பெயர் பலகையின் புகைப்படத்தினை எடுத்து பேஸ்புக்கில் பகிர்ந்து வருகின்றமை எம்மால் உறுதி செய்யப்பட்டது.

குறித்த புகைப்படமானது, இந்த வீடியோவில் இருந்து 38 வது செக்கனில் இருந்து screen capture எடுத்து பகிர்ந்து வருகின்றனர்.

நாம் கொழும்பு போர்ட் சிட்டி மக்கள் தொடர்பாளரை தொடர்பு கொண்டு வினவிய போது, இது கட்டுமானப் பணிகளின் போது வைக்கப்பட்டுள்ள பெயர் பலகை என தெரிவித்தனர்.

இது இங்கு பணியாற்றும் பணியாளர்களுக்கு இலகுவான புரிந்து கொள்ளுவதற்காக அமைக்கப்பெற்றுள்ளது எனவும் இங்கு சிங்களம் பேசும் நபர்களும், சீன மொழி பேசும் நபர்களும் அதிகமாக பணியாற்றுவதாகவும் தெரிவித்தார்.

மேலும் கொழும்பு போர்ட் சிட்டியானது மக்கள் பாவணைக்காக இன்னும் திறக்கப்படவில்லை எனவும், இது அனைத்தும் குறித்த நிர்மாணப் பணிகள் நிறைவடைந்த பின்னர் அகற்றப்பட்டு, இலங்கையின் சட்டத்தின் படி அங்கீகரிக்கப்பட்ட மும்மொழிகளில் பெயர் பலகையில் வைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இருப்பினும், இது தவறான செய்தியாக பகிரப்படுவதால் குறித்த பெயர் பலகைகள் அகற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நமக்கு கிடைக்கப்பெற்ற ஆதாரங்களுக்கு அமைய பெயர் பலகையில் தமிழ் மொழி மறுக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி தவறானது என கண்டறியப்பட்டுள்ளது.

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:பெயர் பலகையில் தமிழ் மொழி மறுக்கப்பட்டுள்ளதா?

Fact Check By: Nelson Mani

Result: Misleading