INTRO :

சிறிய ரக விமானம் ஒன்று மைதானத்தில் விழுந்த காட்சி என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் “மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கும்போது சிறியரக விமானம் ஒன்று மைதானத்தில் விழுந்த காட்சி “ என கடந்த மாதம் 25 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு (25.02.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

நாம் முதலில் குறித்த பதிவின் கீழ் பதிவிட்டிருந்த கமெண்டுக்களை பார்வையிட்ட போது, அதில் அதிகமானோர் குறித்த வீடியோ எடிட் செய்யப்பட்ட வீடியோ என பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது.

இது தொடர்பாக நாம் இணையத்தில் வைரலாகும் குறித்த வீடியோவின் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்தபோது, Soccer Express Broadcasts என்ற ஒரு யூடியுப் சேனில் இணையத்தில் வைரலாகும் 10 செக்கன்கள் கொண்ட வீடியோவை ஒத்த வீடியோ இருப்பது எம்மால் அவதானிக்க கிடைத்தது.

இணையத்தில் வைரலாகும் வீடியோவையும் எம்மால் ஆய்வுக்கு எடுக்கப்பட்ட வீடியோவையும் ஆய்வு செய்த போது, இரண்டும் ஒரே வீடியோ என கண்டறியப்பட்டது.

நாம் குறித்த வீடியோவில் விபத்திற்குள்ளாகும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த விமான வீடியோவை ஆய்வு செய்த போது, இது envato.com இணையத்தளத்தில் மூலம் தரவிறக்கம் செய்யப்பட்ட வீடியோ என கண்டறியப்பட்டது.

நாம் இணையத்தில் மைதானத்தில் விழுந்த விமானம் என பகிரப்படும் வீடியோவில் உள்ள விமானத்தையும் Envanto இணையத்தில் விற்பனைக்கு உள்ள வீடியோவில் இருந்த விமானத்தையும் ஆய்வுசெய்த போது இரண்டும் ஒரே வீடியோ என கண்டறியப்பட்டது.

இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், சிறிய ரக விமானம் ஒன்று மைதானத்தில் விழுந்த காட்சி என பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்ட வீடியோ என உறுதி செய்யப்பட்டுள்ளது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok

Conclusion: முடிவு


எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:சிறிய ரக விமானம் ஒன்று மைதானத்தில் விழுந்த காட்சி என பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: S.G.Prabu

Result: Altered