
அமெரிக்காவை சேர்ந்த்த பெண் இஸ்லாத்தை ஏற்று ஹிஜாப் அணிந்தார் என ஒரு பதிவு புகைப்படத்துடன் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவது எமக்கு காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:

News Saranteeb என்ற பேஸ்புக் கணக்கில் ” American women accepted Islam masha Allah ..
அமெரிக்காவை சேர்ந்த்த பெண் இஸ்லாத்தை ஏற்று ஹிஜாப் அணிந்து வாழ்கின்றார் மாஷா அல்லாஹ்” என்று இம் மாதம் 03 ஆம் திகதி (03.07.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் குறித்த தகவலை உண்மை தன்மையினை கண்டறிவதற்கு மேற்கொண்ட சோதனையில் Google Reverse Image Tool ஐ பயன்படுத்தி குறித்த புகைப்படத்தினை நாம் ஆய்விற்கு உட்படுத்தினோம்.
பெல்ஜியம் நாட்டை சேர்ந்த Silke Raats (21) என்ற மாணவி சமூக ஆய்வு நிமிர்த்தமாக மேற்கொண்ட சோதனையின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தினை தற்போது அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாக செய்திகள் பரப்பி வருகின்றனர்.
ஒரு மாதம் காலம் அவர் மேற்கொள்ள இருந்த இந்த சோதனையினை 10 நாட்களிலே முடித்து கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவரது யுடீயூப் அலைவரிசையிலும் அவர் காணொளி வெளியிட்டிருந்தார்.
குறித்த சமூக ஆய்வு வீடியோ 2015 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய அமெரிக்காவை சேர்ந்த்த பெண் இஸ்லாத்தை ஏற்று ஹிஜாப் அணிந்தார் என பகிரப்படும் தகவல் போலியானது என உறுதி செய்யப்படுகின்றது.
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.
Conclusion: முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் அமெரிக்காவை சேர்ந்த பெண் இஸ்லாத்தை ஏற்று ஹிஜாப் அணிந்தார் என பகிரப்படும் தகவல் போலியானது என்று உறுதி செய்யப்படுகின்றது.

Title:அமெரிக்காவை சேர்ந்த பெண் இஸ்லாத்தை ஏற்று ஹிஜாப் அணிந்தாரா?
Fact Check By: Nelson ManiResult: False