INTRO :

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தசுன் சானக்க இணைக்கப்பட்டார் என ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் “இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷனாக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டார். “ என பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு (20.02.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

இலங்கை அணியின் ஒரு நாள் மற்றும் இருபதுக்கு20 போட்டிகளின் அணித்தலைவரான சகலத்துறை ஆட்டகாரரான தசுன் சானக்க இந்திய பிரிமியர் லீக் போட்டியான ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இணைக்கப்பட்டுள்ளார் என செய்தி கடந்த மாதங்களில் மிகவும் வைரலாக பரவி வருகின்றமை காணக்கிடைத்தது.

அதே காலக்கட்டத்தில் இவர் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வெளியாகிய செய்தித் தொடர்பில் எமது அணி மேற்கொண்ட ஆய்வறிக்கையில் அது தவறானது என்று உறுதி செய்யப்பட்டது. மேலும் வாசிக்க

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தசுன் சானக்க இணைக்கப்பட்டதாக எவ்விதமான உத்தியோகப்பூர்வ அறிவிப்புகளை குறித்த காலப்பகுதியில் வெளியாகியிருக்கவில்லை.

இந்நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து உபாதை காரணமாக நியூசிலாந்து கிரிக்கெட் வீரரான கேன் வில்லியம்சன் வெளியேற அதற்கு பதிலாக இலங்கை கிரிக்கெட் அணியின் சகலத்துறை ஆட்டகாரரான தசுன் சானக்க இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பினை குஜராத் டைட்டன்ஸ் அணியில் உத்தியோகப்பூர்வ சமூகவலைத்தள பக்கங்கள் அனைத்திலும் பகிரப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தசுன் சானக்க இணைந்தார் என்று பகிரப்பட்ட செய்தி போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok

Conclusion: முடிவு


எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தசுன் சானக்க இணைந்தாரா ?

Fact Check By: S.G.Prabu

Result: False