GRATULA என கமெண்ட் செய்து உங்கள் முக நூல் பாதுகாப்பானதா! என உறுதிப்படுத்திக்கொள்ளவும் என ஒரு பதிவு பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவது எமக்கு காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link

Uthaya Anustiyan என்ற பேஸ்புக் கணக்கில் ” GRATULA type செய்து

உங்கள் முக நூல் பாதுகாப்பானதா! என உறுதிப்படுத்திக்கொள்ளவும்...

சிவப்பு நிறம்வந்தால் நல்லதே...! ” என்று இம் மாதம் 15 ஆம் திகதி (15.07.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

நாம் குறித்த தகவலை உண்மை தன்மையினை கண்டறிவதற்கு மேற்கொண்ட சோதனையில் GRATULA என்ற சொற்பதம் பற்றி முதலில் தேடுதல் மேற்கொண்டோம்.

அதில் குறித்த சொல்லானது ஹங்கேரியன் மொழியில் வாழ்த்து தெரிவிப்பதற்காக பயன்படுத்தப்படும் சொல் என்பது கண்டறியப்பட்டது.

Google Link

குறித்த தேடலின் போது பல்வேறு உண்மை கண்டறியும் நிறுவனங்கள் இந்த GRATULA என்ற சொல்லை பற்றி ஆய்வறிக்கை வெளியிட்டிருந்தமை காணக்கிடைத்தது.

அதில் குறித்த சொல்லானது வாழ்த்துக்களை பகிர்வதற்கு உபயோகிக்கப்படுகின்ற சொல் என்பது உறுதியானது.

மேலும் நாம் மேற்கொண்ட சோதனையில், குறித்த சொல்லினை நாம் type செய்து comment comment பண்ணும் வேளையில் அதில் இருந்து வடிவமைக்கப்பட்ட பலூன்கள் பறக்கும் ஒரு animation தோற்றும்.

பேஸ்புக் நிறுவனத்தினால் பேஸ்புக் கணக்கு மற்றும் அதற்கு பயன்படுத்தும் கடவுச்சொல் என்பதை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதற்கான செய்தியினை வாசிக்க கீழ் உள்ள லிங்கினை கிளிக் செய்யுங்கள்.

Keeping Your Account Safe | Keeping Passwords Secure

இதற்கமைய மேற்கண்ட ஃபேஸ்புக் தகவல் போலியானது என்று உறுதி செய்யப்படுகின்றது.

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Conclusion: முடிவு

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் GRATULA என கமெண்ட் மூலம் உங்கள் பேஸ்புக் பாதுகாப்பானதா என கண்டறியலாம் என்று பகிரப்படும் தகவல் போலியானது என்று நிரூபித்துள்ளோம்.

Avatar

Title:GRATULA என கமெண்ட் மூலம் உங்கள் பேஸ்புக் பாதுகாப்பானதா என கண்டறியலாமா?

Fact Check By: Nelson Mani

Result: False