INTRO :
மறைந்த மகராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் இந்து மந்திரங்கள் ஓதப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் ” Hari Om🙏🌺🕉🌺🙏

In England

Hindu Vedic Mantra

இங்கிலாந்தில் உலகம் போற்றும்

இந்து வேத மந்திரங்கள்🌺🙏 “ என இம் மாதம் 14 ஆம் திகதி (14.09.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

நாம் முதலில் குறித்த பதிவிலிருந்த வீடியோவை பார்வையிட்ட போது, அதில் முதலாவதாக The st james school choir என்ற பெயருடன் வந்த இடத்தில் 2010 டெல்லி என பெயரிடப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

நாம் கூகுளில் The st james school choir 2010 delhi என்ற வார்த்தையினை பயன்படுத்தி தேடிய போது,2019 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி WildFilmsIndia என்ற யூடியுப் தளத்தில் குறித்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

குறித்த வீடியோவிற்கு தரப்பட்டிருந்த விளக்கத்தில் காமன்வெல்த் போட்டியைத் தொடங்கி வைக்கும் மரபின் அடிப்படையில் 2009ம் ஆண்டு பக்கிங்காம் அரண்மனையில் நடந்த நிகழ்ச்சியில் இங்கிலாந்து மாணவர்கள் சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பாடினர் என்று குறிப்பிட்டிருந்தனர்.

மேலும் இணையத்தில் பரவுகின்ற வீடியோவில் இருந்த அதே www. Wildfilmsindia.com என்ற Watermark க்கும் அதில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மறைந்த மகா ராணியின் இறுதிச் சடங்குகள் அனைத்தும் கத்தோலிக்க முறைப்படி கடந்த திங்கட்கிழமை (19.09.2022) அன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக வெளியாகியிருந்த செய்தியில் டெல்லி 2010 காமன்வெல்த் விளையாட்டு போட்டி தொடங்குவதை முன்னிட்டு, அதற்கான தீபத்தை ஏந்திச் செல்லும் தொடர் ஓட்ட நிகழ்வை 2009ல் எலிசபெத் மகாராணி, மற்றும் அப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் ஆகியோர் தொடங்கிவைத்தனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

insidethegames.biz I Archive

இதற்கமைய மறைந்த மகாராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் இந்து மந்திரங்கள் ஓதப்பட்டதாக 2009 ஆம் ஆண்டு டெல்லி காமன்வெல் போட்டியை யொட்டி எலிசபெத் மகாராணி லண்டனில் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்த நிகழ்வின்போது எடுக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok

Conclusion: முடிவு

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:மறைந்த ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் இந்து மந்திரங்கள் ஓதப்பட்டதா?

Fact Check By: S G Prabu

Result: Misleading