கொரோனா வைரஸின் தாக்கத்தினால் கஃபாவை தவாப் செய்ய யாரையும் அனுமதிக்காத நிலையில் வெறிச்சோடி உள்ளதாக சில புகைப்படங்கள் பகிர்ந்த வண்ணம் உள்ளமை எமக்கு காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link 

Muslim ministers in sri lanka என்ற பேஸ்புக் பக்கத்தில் ” கொரோனா வைரஸின் தாக்கம் !!!

கஃபாவைச் தவாப் செய்ய யாரையும் அனுமதிக்காத நிலையில் வெறிச்சோடி காணப்படுகிறது.

இது வரை காணப்படாத காட்சி. மறுமைநாள் அண்மித்து விட்டதாகவே உணர தோன்றுகின்றது. ” என்று இம்மாதம் 5 ஆம் திகதி (05.03.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

இதுதொடர்பில் நாம் மேற்கொண்ட ஆய்வில், குறித்த பதிவிற்கு கீழ் பதியப்பட்ட கமெண்டுக்களை பார்வையிட்டோம். குறித்த கமெண்டுக்களில் பலரும் இந்த தகவல் போலியானது என தெரிவித்திருந்தனர்.

மேலும் நாம்  மேற்கொண்ட தேடுதலில் ஹரமைன் ஷெரிஃபைன் என்ற இணையத்தளத்தில் வெளியாகிருந்த செய்தியில் மக்கா மற்றும் மதீனா இரண்டும் ஈஷா தொழுகையின் பின்னர் மூடப்பட்டு Fajr தொகைக்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னர் திறக்கப்படும் என அறிவிப்பு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

News Link | Archived Link

ஹரமைன் ஷெரிஃபைன் பேஸ்புக் பக்கத்தினால் கடந்த 6 ஆம் திகதி (06.03.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த பதிவில் நேற்றிரவு மூடப்பட்ட Masjid Al Haram. Fajr Salat தொழுகைக்கு ஒரு மணித்தியாலங்களுக்கு முன்னர் பக்தர்கள் உள்நுழைந்துள்ளனர் என பதிவேற்றம் செய்துள்ளமை காணக்கிடைத்தது.

Haramain Sharifain | Archived Link

நாம் மேற்கொண்ட தேடுதலில் தினமும் இரவு தொழுகையின் பின்னர் மக்கா மற்றும் மதீனா ஆகிய இரு இடங்களும் மூடப்பட்டு அங்கு சுத்திகரிப்பு பணிகள் இடம்பெறுகின்றன.

Facebook link | Archived Link

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாப்பதற்காகவே அவர்கள் தினமும் சுத்தம் செய்து வருகின்றனர்.

மேலும் சவூதி அரேபியாவின் உத்தியோகபூர்வ தொலைக்காட்சியின் டுவிட்டர் பக்கத்தில் புனித பள்ளிவாசல்கள் இரண்டும் மாலை தொழுகை முடிந்து ஒரு மணிநேரத்தின் பின்னர் மூடப்பட்டு மீண்டும் அதிகாலை தொழுகையிற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்னர் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Twitter Link | Archived Link

மேலும் மக்கா மற்றும் மதீனாவின் பொதுவான தலைவர் (General Presidency) அவர்களால் இரு பள்ளிவாசல்களும் திறக்கப்படும் மற்றும் மூடப்படும் நேரஅட்டவணை அவரின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். 

Twitter Link | Archived Link

இதை தவறாக பேஸ்புக் பக்கங்களில் பதிவேற்றம் செய்து மக்கள் மத்தியில் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

Conclusion: முடிவு

மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், கஃபாவை தவாப் செய்ய யாரையும் அனுமதிக்காத நிலை என பேஸ்புக்கில் பகிரப்பட்ட தகவல் தவறானது  என்று உறுதியாகிறது.

Avatar

Title:கொரோனா வைரஸின் தாக்கம்; கஃபா தவாப் செய்ய யாரும் இல்லையா?

Fact Check By: Nelson Mani

Result: False