
INTRO :
இளைய தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் வெளிவர இருக்கின்ற மாஸ்டர் திரைப்படத்தினை ஓ.டி.டி. நிறுவனம் கைப்பற்றியதாக இணையத்தில் செய்திகள் பரவி வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

NEWS1st என்ற பேஸ்புக் பக்கத்தில் ” மாஸ்டர் படத்தை கைப்பற்றிய ஓ.டி.டி. நிறுவனம்… ரிலீஸ் எப்போ தெரியுமா? ” என இம் மாதம் 28 ஆம் திகதி (28.11.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இதனை பல ஊடக நிறுவனங்களும் மற்றும் தனிநபர் பலரும் பகிர்ந்திருந்தமை எமக்கு காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
மாஸ்டர் படத்தின் இந்த தகவல் அனைத்து சமூகவலைத்தளங்கள் மற்றும் பத்திரிகைகள் என அனைத்து ஊடகங்களிலும் மிக விரைவாக பரவ ஆரம்பித்ததை தொடர்ந்து குறித்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் இது குறித்து தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் கணக்கில் இது தொடர்பாக ஊடக அறிக்கையினை வெளியிட்டனர்.
#MasterPressRelease pic.twitter.com/OZbAjNeX8T
— XB Film Creators (@XBFilmCreators) November 28, 2020
குறித்த ஊடக அறிக்கையில் இதன்படி, ‘’சமூக வலைதளங்களில் மாஸ்டர் பட ரிலீஸ் பற்றி பலவிதமான தகவல்கள் பகிரப்படுகின்றன. அவர்கள் சொல்வதில் முழு உண்மையில்லை. எங்களது படத்தை ரிலீஸ் செய்வதற்காக ஒரு முன்னணி OTT சேவை நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியது உண்மைதான்.
ஆனால், மாஸ்டர் படத்தை திட்டமிட்டபடி தியேட்டரில்தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று தீர்மானித்துள்ளோம். தற்போதைய (கொரோனா) நெருக்கடி காலத்தில் நலிவடைந்துள்ள தியேட்டர் உரிமையாளர்களுக்கு உதவும் வகையில், இந்த முடிவை மேற்கொள்கிறோம்,’’ என, குறிப்பிடப்பட்டுள்ளது.
நாம் மேற்கொண்ட தேடலில் மாஸ்டர் படத்தை கைப்பற்றிய ஓ.டி.டி. நிறுவனம் என இணையத்தில் பரவிய தகவலுக்கு குறித்த படத்தின் தயாரிப்பு நிறுவனமே தியேட்டரில் தான் ரிலீஸ் செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.
எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட சோதனையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.