INTRO :
இலங்கை அரசாங்கத்தினால் இஸ்லாமிய புத்தங்களுக்கு தடை என ஒரு பதிவு பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

Rifkan Srilankan என்ற பேஸ்புக் பக்கத்தில் ” srilankan racism trying Next episode

"No Body Can't changes Mind " ” என இம் மாதம் 06 ஆம் திகதி (06.03.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

குறித்த தகவலானது பலராலும் இணையத்தில் பகிரப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

அவர்கள் பதிவிட்டுள்ள அறிவிப்பை நாம் மொழிபெயர்த்தோம், தயவு செய்து உங்கள் கவனத்திற்கு இன்று முதல் (05.03.2021) நாட்டிற்கு கொண்டு வரப்படுகின்ற எந்த இஸ்லாமிய மத புத்தங்களும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின் பின்னரே விடுவிக்கப்படும் என தெரிவித்துள்ளமை காணக்கிடைத்தது.

அதில் எங்கும் இஸ்லாமிய புத்தங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டவில்லை.

நாம் மேலும் இதனை உறுதி செய்வதற்காக நாம் சுங்க பிரிவினரை தொடர்பு கொண்டு வினவியபோது, இஸ்லாமிய புத்தங்களுக்கு தடை விதிக்கப்படவில்லை என்றும் மேலும் இலங்கைக்கு கொண்டுவருகின்ற இஸ்லாமியப் புத்தங்கள் அவர்களின் பரிசோதனைக்கு பின்னர் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடனே விற்பனை நிலையங்களுக்கு அனுப்புதல் வேண்டும் என தெரிவித்தார்.

இது தொடர்பாக நாம் Islamic Book House நிறுவனத்தினை நாம் தொலைபேசியில் தொடர்புக்கொண்டு உரையாடிய போது, அவர்கள் இது தொடர்பாக அவர்கள் உயர்மட்ட அதிகாரிகளுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும், இஸ்லாமிய புத்தங்களுக்கு எவ்விதமான தடைகளும் விதிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தனர்.

எமது தேடலுக்கு அமைய, முஸ்லிம் புத்தங்களுக்கு தடை என வெளியான தகவல் போலியானது என்று கண்டறியப்பட்டுள்ளது.

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:முஸ்லிம் புத்தங்களுக்கு தடையா?

Fact Check By: Nelson Mani

Result: Misleading