எதிர்வரும் பொதுத்தேர்தலில் முத்தையா முரளிதரன் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட போவதாக, ஒரு செய்தி பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவது எமக்கு காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link

‎ மூதூர் வசந்தம் என்ற பேஸ்புக் பக்கத்தில் ” பொதுத்தேர்தலில் போட்டியிடுவதாக முரளிதரன் அறிவித்தார்..

கிரிக்கட் நட்சத்திரம் முத்தையா முரளிதரன் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில் தான் நுவரெலியா மாவட்டத்தில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் போட்டி இட இருப்பதாக கூறியுள்ளார்” என்று பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி (17.02.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

குறித்த செய்தி பலராலும் பகிரப்பட்டிருந்தமை எமக்கு காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)


இலங்கையில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட போவதாக செய்திகள் பலராலும் பகிரப்பட்டு வந்தது.

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலினால் பிற்போடப்பட்டிருந்த நாடாளுமன்ற தேர்தல் நடத்துவதற்கான திகதி இந்த வாரத்திற்குள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையத் தலைவர் மகிந்த தேசப்பிரியா நேற்று தெரிவித்துள்ளார்.


virakesari | Archived Link

இந்நிலையில் முத்தையா முரளிதரன் குறித்த பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட போவதாக வெளியான செய்தி குறித்து நாம் ஆய்வினை மேற்கொண்டோம்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அல்லது சுயாதீனக் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள வேட்பாளர்களின் பெயர்கள் பட்டியல் தேர்தல் ஆணையகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த பெயர் பட்டியலினை நாம் ஆய்வு செய்தவேளையில், நுவரெலியா மாவட்டத்தில் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலில் முத்தையா முரளிதரனின் பெயர் இடம்பெற்றிருக்கவில்லை.

குறித்த பெயர் பட்டியிலில் முத்தையா முரளிதரினின் தம்பியான முத்தையா பிரபாகரனே போட்டியிடவுள்ளார்.

link

முத்தையா பிரபாகரன் தேர்தலில் களமிறங்குவதை முன்னதாகவே அறிவித்துள்ளார்.

Dailymirror Link | Archived Link

முத்தையா முரளிதரனின் தம்பியின் அரசியல் பிரவேசத்தினை தவறவாக புரிந்துகொண்ட சிலர் முத்தையா முரளிதரன் தேர்தலில் போட்டியிட போவதாக செய்திகளை பரவிவருகின்றமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய முத்தையா முரளிதரன் பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட போவதாக தெரிவித்ததாக பேஸ்புக்கில் பகிரப்பட்ட தகவல் போலியானது என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Conclusion: முடிவு

மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் சுமந்திரன் நாடகமாடுவதை நிறுத்த வேண்டும் என்று அவர்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்ததாக பேஸ்புக்கில் பகிரப்பட்ட தகவல் போலியானது என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Avatar

Title:முத்தையா முரளிதரன் பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியா?

Fact Check By: Nelson Mani

Result: False