
INTRO :
தாய்லாந்தில் உள்ள ஆற்று நீர் ஓம் என்று உச்சரித்தால் மேலே எழும்புகின்றது என ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

Lucky Suresh என்ற பேஸ்புக் பக்கத்தில் ” தாய்லாந்தில் மலைகளுக்கிடையில் உள்ள ஆற்று நீர், ஓம் என்று உச்சரித்தால் மேலே எழும்புகிறது.” என கடந்த மாதம் 27 ஆம் திகதி (27.02.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
குறித்த தகவலானது பலராலும் இணையத்தில் பகிரப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
முதலில், நாம் குறித்த வீடியோவிலிருந்து screenshots புகைப்படத்தினை கூகுள் ரிவஸ் இமேஜ் இனை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, இது தாய்லாந்து நாட்டில் உள்ள ஆறு அல்ல என்பதோடு, இது வடக்கு சீனாவில் அமைந்துள்ள ஆறு என கண்டறியப்பட்டது.
சீனாவில் இயங்கி வருகின்ற China Xinhua News என்ற செய்தி நிறுவனத்தின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் குறித்த வீடியோவை ஒத்த வீடியோ பதிவு பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.
குறித்த வீடியோவில் மன அழுத்தம் போக்க கத்துங்கள், என பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது.
இது குறித்து நாம் மேலும் தேடும் போது, இது செயற்கையாக வடிவமைக்கப்பட்ட ஒரு கருவி என கண்டறியப்பட்டது. இதனை Changsha Himalaya Music Fountain என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இவர்கள் செயற்கை குரல் கட்டுப்பாட்டு நீரூற்றுகளை தயாரிக்கும் நிறுவனமாகும்.
எமது தேடலுக்கு அமைய, தாய்லாந்தில் உள்ள ஆற்று நீர் ஓம் என்று உச்சரித்தால் மேலே எழும்புகிறது என பரவுகின்ற தகவல் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:தாய்லாந்தில் உள்ள ஆற்று நீர் ஓம் என்று உச்சரித்தால் மேலே எழும்புகிறதா?
Fact Check By: Nelson ManiResult: False