செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய போது பெர்சிவரன்ஸ் எடுத்த வீடியோவா இது?

False சர்வதேசம்

INTRO :
அமெரிக்காவின் நாஸா விண்வெளி நிறுவனத்தினால் செவ்வாய் கிரகத்தினை ஆய்வு செய்வதற்காக அனுப்பிய பெர்சிவரனஸ் ஆய்வு விண்கலம் எடுத்து அனுப்பிய செவ்வாய் கிரகத்தின் வீடியோ என ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

புதிய தலைவன் மாத்தளை – Puthiya Thalaivan Matale என்ற பேஸ்புக் பக்கத்தில் ” செவ்வாய் கிரகம் வீடியோ பதிவு

==========================

ஒரு மணிக்கு 20 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் 7 மாதங்கள் பயணம் செய்து நேற்று முன்தினம் 18/02/2021 செவ்வாய் கிரகத்தில் கால் வைத்துள்ளது பேர்சேவேரன்ஸ் (Preseverance) என்கின்ற தானியங்கி வாகனம்.. இந்த வாகனத்தில் பொருத்தப்பட்ட அதிநுட்ப கேமரா மூலமாக எடுக்கப்பட்ட செவ்வாய்க் கிரகத்தின் தரைப் பகுதி காணொளியை பாருங்கள் …

இந்த அதிநுட்ப கேமராக்களை வடிவமைத்து தயாரித்தது பிரெஞ்சு விஞ்ஞானிகள் என்பது குறிப்பிடத்தக்கது.”  என கடந்த மாதம் 23 ஆம் திகதி  (23.02.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

குறித்த தகவலானது பலராலும் இணையத்தில் பகிரப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்) 

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

செவ்வாய் கிரகத்தினை ஆய்வு செய்வதற்காக நாசா நிறுவனம் பெர்சிவரன்ஸ் என்ற விண்கலத்தினை அனுப்பியிருந்ததது. அது கடந்த பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி (21.02.2021) செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது. 

குறித்த தரையிறங்கும் வீடியோவினை நாசா 23 ஆம் திகதி அன்று வெளியிட்டிருந்த நிலையில் அதற்கு முன்னதாகவே ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகியிருந்தமை காணக்கிடைத்தது.

முதலில், நாம் குறித்த வீடியோவிலிருந்து screenshots புகைப்படத்தினை கூகுள் ரிவஸ் இமேஜ் இனை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, அது 2020 ஆம் ஆண்டு முதல் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

இவற்றுக்கு இடையே நாசா வெளியிட்டிருந்த க்யூரியாசிட்டி எடுத்த 1.8 பில்லியன் பிக்சல் பனோரமா காட்சி  என்ற பதிவில் நாம் வீடியோவில் பார்த்த காட்சிகள் அனைத்தும் இருப்பதைக் காண முடிந்தது.

மேலும், நாசா வெளியிட்டிருந்த பதிவில் க்யூரியாசிட்டி என்று தெளிவாக எழுதப்பட்டிருந்த பெயர் பலகையும் இருந்தது. இது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவோடு ஒத்துப்போனது.

mars.nasa.gov I Archived link   I photojournal.jpl.nasa.gov I Archived link 

மேலும், நாசாவின் பெர்சிவரன்ஸ் மார்ஸ் ரோவர் என்ற டுவிட்டர் பக்கத்தை ஆய்வு செய்தோம். அதில் பெர்சிவரன்ஸ் மார்ஸ் ரோவர் தரையிறங்கும் வீடியோ வெளியிட்டிருந்தமை காணக்கிடைத்தது.

எமது தேடலுக்கு அமைய, பெர்சிவரன்ஸ் எடுத்த வீடியோ என்று பகிரப்படுவது க்யூரியாசிட்டி எடுத்து அனுப்பிய புகைப்படத்தின் காட்சி என கண்டறியப்பட்டுள்ளது.

எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய போது பெர்சிவரன்ஸ் எடுத்த வீடியோவா இது?

Fact Check By: Nelsoon Mani 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *