பாடசாலைகள் சில தனிமைப்படுத்தல் மத்திய நிலையமாக மாற்றமா?

Coronavirus False இலங்கை செய்திகள்

கொழும்பில் உள்ள, ஐந்து பாடசாலைகளை தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களாக மாற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவதை எமக்கு காணக்கிடைத்தது. 

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link 

Jameel Kalkudah என்ற பேஸ்புக் கணக்கில் ” கொழும்பு ரோயல் கல்லூரி, D.S. சேனநாயக்க , இந்துக்கல்லூரி போன்றவையும் தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களாக…

27-4-2020

கொழும்பில் உள்ள, ஐந்து பாடசாலைகளை தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களாக மாற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்தவகையில் கொழும்பு ரோயல் கல்லூரி, தேர்ஸ்டன் கல்லூரி, இந்து கல்லூரி, மாநாம வித்தியாலயம், டீ.எஸ். சேனாநாயக்க வித்தியாலயம் ஆகியனவே, இவ்வாறு தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களா மாற்றப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

கொழும்பு ரோயல் கல்லூரி, கடற்படையினரை தனிமைப்படுத்துவதற்கும், மாநாம வித்தியாலயம் இராணுவத்தினர் தனிமைப்படுத்துவதற்கும் ஒதுக்கப்படவுள்ளது.

எனினும், இவ்விரு பாடசாலைகளிலும் தற்போது படையினர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரோயல் கல்லூரியின் ஆரம்பப் பிரிவு மற்றும் டீ.எஸ்.சேனாநாயக்க வித்தியாலயம், கொழும்பு இந்து கல்லூரி, ஆகியன நாளை மறுதினம் (28) முதல், தனிமைப்படுத்தல் மத்திய நிலையமாக மாற்றப்படவுள்ளதாகவும் அறியமுடிகிறது.

இதேவேளை கொழும்பு மத்தியில் இருக்கும் பாடாசாலைகளை தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களாக பயன்படுத்துவதற்கு எடுத்திருக்கும் தீர்மானத்துக்கு கடுமையான எதிர்ப்பும் கிளம்பியுள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.” என்று நேற்று (27.04.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

குறித்த செய்தி பலராலும் பகிரப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்) 

இதுதொடர்பாக, நாம் மேற்கொண்ட ஆய்வில், இன்று (27.04.2020) அததெரண தொலைகாட்சியில் இடம்பெற்ற தெரண அருண நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட இலங்கை இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா நாட்டில் உள்ள எந்தவொரு பாடசாலையையும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையமாக பயன்படுத்த போவதில்லை என தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் மேலும் உரையாற்றிய இராணுவ தளபதி கடமைக்கு சமூகமளிக்குமாறு முப்படை வீரர்கள் அழைக்கப்பட்டுள்ள நிலையில் அவ்வாறு அவர்கள் வருகை தந்த பின்னர் உரிய சமூக இடைவெளியை பேணுவதற்கு முகாம்களில் இடவசதி போதவில்லை என்றால் அருகில் உள்ள பாடசாலைகளில் தங்குவதற்கு அனுமதியளிக்குமாறு கல்வி அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முடியுமானவரை முப்படையினரை முகாம்களுக்குள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த முயற்சிப்பதாகவும் அவ்வாறு முடியாது போனால் மாத்திரமே மாற்று வழியை தெரிவு செய்ய நிலைமை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனை தவிர எந்தவொரு பாடசாலையையும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையமாக பயன்படுத்த போவதில்லை என இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

இது குறித்த இணையத்தளங்களில் வெளியாகிய செய்திகள் பின்வருமாறு,

Adaderana Link | Archived link  

Virakesari Link | Archived link

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Conclusion: முடிவு

மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் பாடசாலைகள் சில தனிமைப்படுத்தல் மத்திய நிலையமாக மாற்றம் என இணையத்தில் பரவி வருகின்ற செய்தி தவறானது என்று கண்டறியப்பட்டுள்ளது. 

Avatar

Title:பாடசாலைகள் சில தனிமைப்படுத்தல் மத்திய நிலையமாக மாற்றமா?

Fact Check By: Nelson Mani 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *