
கொரோனா வைரஸ் தடுப்பூசி தயார். ஊசி போட்ட 3 மணி நேரத்திற்குள் நோயாளியை குணப்படுத்தும் திறன் கொண்டது. அமெரிக்க விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு என்று சில தகவல்கள் பேஸ்புக்கில் பலராலும் பகிர்ந்த வண்ணம் உள்ளமை எமக்கு காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:

Jaffna Kopi என்ற பேஸ்புக் பக்கத்தில் ” #கொரோனா_வைரஸ்_தடுப்பூசி_தயார்
#ஊசி_போட_நீங்கள்_தயாரா
🙏💉💉💉💉🙏
கொரோனா வைரஸ் தடுப்பூசி தயார். ஊசி போட்ட 3 மணி நேரத்திற்குள் நோயாளியை குணப்படுத்தும் திறன் கொண்டது. அமெரிக்க விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ரோச் மருத்துவ நிறுவனம் அடுத்த ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசியை வெளியிடுவதாக டிரம்ப் அறிவித்தார், அதிலிருந்து மில்லியன் கணக்கான மருந்துகள் தயாராக உள்ளன !!!
#testing” என்று இம்மாதம் 22 ஆம் திகதி (22.03.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
குறித்த பதிவில் Sugentech – SGT1 – flex COVID 19 IgM/IgG என்ற பெயரிட்ட ஒரு மருந்தின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர்.
Fact Check (உண்மை அறிவோம்)
இதுதொடர்பில் நாம் மேற்கொண்ட ஆய்வில், குறித்த பேஸ்புக் பதிவில் இருந்த Sugentech – SGT1 – flex COVID 19 IgM/IgG என்பதை கூகுள் தேடுதல் தளத்தில் தேடுதல் செய்தோம். இது தடுப்பூசி இல்லை, கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தக்கூடிய டெஸ்ட் கிட் என்ற விவரம் தெரியவந்தது.

இதுகுறித்த நாம் மேலும் ஆய்வு செய்த தென்கொரியாவை சேர்ந்த Sugentech என்ற மருத்துவ தொழில்நுட்ப உபகரணங்களை தயாரித்து விநியோகித்து வருகின்றனர். இவர்கள் சமீபத்தில் கோவிட் 19 வைரஸ் பரிசோதனைக்காக புதிய டெஸ்ட் கிட் தயாரித்துள்ளனர்.

Sugentech Link | Archived Link
குறித்த Sugentech நிறுவனமே இதுவரையில் எவ்விதமான மருந்தோ அல்லது தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளதோடு, பலருக்கு கோவிட் 19 வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் தென்படாது அவர்களுக்கு கோவிட் 19 வைரஸ் தொற்றுள்ளதா என்று கண்டறிவதற்கு இந்த டெஸ்ட் கிட் உதவுவதாக தெரிவித்துள்ளனர்.
அதேபோல், குறித்த செய்தி தொடர்பில் எமது இந்திய தமிழ் பிரிவு மேற்கொண்ட ஆய்வினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், கொரோனா
வைரஸ்க்கு கண்டுபிடிக்க பயன்படுத்தப்படும் டெஸ்ட் கிட்டின் புகைப்படத்தை வைத்து தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதாக, வதந்தி பரப்பியுள்ளனர் என்று தெளிவாகிறது.
Conclusion: முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், கொரோனா வைரஸ் தடுப்பூசி தயார் என பேஸ்புக்கில் பகிரப்பட்ட தகவல் தவறானது என்று உறுதியாகிறது.