
‘’முஸ்லிம்களின் வாக்குகளுக்காக நாம் ஒருபோதும் கையேந்த மாட்டோம். ஊடகவியளாலர் சந்திப்பில் விமல் வீரவன்ச அதிரடிப் பேச்சு,’’ என்ற தலைப்பில் ஒரு வீடியோ பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவது எமக்கு காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:
எஸ். எம் மரிக்கார் என்ற பேஸ்புக் கணக்கில் ” முஸ்லிம்களின் வாக்குகளுக்காக நாம் ஒருபோதும் கையேந்த மாட்டோம்.
ஊடகவியளாலர் சந்திப்பில் விமல் வீரவன்ச அதிரடிப் பேச்சு.” என்று இம்மாதம் 14 ஆம் திகதி (14.06.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இலங்கையில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகள் தமக்கு தேவையில்லை என விமல் வீரவன்ச தெரிவித்ததாக ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
குறித்த வீடியோ சமூகம் என்ற யூடியுப் அலைவரிசையில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
நாம் அந்த வீடியோவை ஆய்வுக்கு உட்படுத்திய வேளையில், குறித்த வீடியோவானது இம்மாதம் 9 ஆம் திகதி பனை பொருள் வியாபார நடவடிக்கைகளை இணையத்தின் மூலம் முன்னெடுக்கும் திட்டத்தின் படி ஓர் இணையத்தள அங்குராப்பண நிகழ்வின் எடுக்கப்பட்ட காணொளியினை கொண்டு இம்மாதம் 13 ஆம் திகதி அவர்கள் செய்தி பதிவேற்றம் செய்துள்ளனர்.
குறித்த போலி செய்தி பரவுவதை ஊடக சந்திப்பில் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளதோடு, அதற்கான ஆதரங்கள் இருப்பின் அவற்றை வெளியிடுமாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தாம் ஒருபோதும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகள் தமக்கு தேவையில்லை என்று விமல் வீரவன்ச தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளதாகவும், அவர்களுக்கு முடிந்தால் நான் பேசிய உரையாடல் பதிவு அல்லது அங்கீகரிக்கப்பட்ட பத்திரிக்கையில் வெளியான செய்தி இருந்தால் காட்டுமாறு சவால் விட்டுள்ளார்.
நாம் விமல் வீரவன்ச கலந்துகொண்ட குறித்த ஊடக சந்திப்பு தொடர்பாக ஊடகங்களில் வெளியான அனைத்து செய்திகளையும் பரிசோதனை செய்தோம் அதில் பேஸ்புக்கில் பகிரப்படுவதை போல எதுவும் விமல் வீரவன்ச தெரிவித்ததாக இல்லை.
Ada derana link | hiru tv link | ITN Tv Link | Rupavahini TV | Dan Tv
இதற்கமைய முஸ்லிம்களின் வாக்குகளுக்காக ஒருபோதும் கையேந்த மாட்டோம் என விமல் வீரவன்ச தெரிவித்ததாக பேஸ்புக்கில் பகிரப்பட்ட தகவல் போலியானது என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.
Conclusion: முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் முஸ்லிம்களின் வாக்குகளுக்காக ஒருபோதும் கையேந்த மாட்டோம் என விமல் வீரவன்ச தெரிவித்ததாக பேஸ்புக்கில் பகிரப்பட்ட தகவல் போலியானது என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Title:முஸ்லிம்களின் வாக்குகளுக்காக ஒருபோதும் கையேந்த மாட்டோம் – விமல் வீரவன்ச தெரிவிப்பா?
Fact Check By: Nelson ManiResult: False