
INTRO :
அர்ஜென்டீனாவின் பிரபல கால்பந்தாட்ட வீரரான மரடோனாவின் இறுதி ஊர்வலத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என சில புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றமை எமக்கு காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

Faiz Ul என்ற பேஸ்புக் பக்கத்தில் ” மறைந்த மரடோனாவின்
இறுதி ஊர்வலம். ” என இம் மாதம் 29 ஆம் திகதி (29.11.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
பலரும் இதன் உண்மை தன்மையினை கண்டறியாமல் பகிர்ந்திருந்தமை எமக்கு காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்ற புகைப்படத்தினை நாம் Google Reverse Image Tool பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டோம்.
அத்தேடலின் போது, குறித்த புகைப்படமானது ayrton senna death brazil என எமக்கு கிடைக்கப்பெற்றது.
கூகுள் தேடு தளத்தில் ayrton senna death brazil என்ற நாம் தேடிய போது, பிரேஸில் நாட்டை சேர்ந்த கார் பந்தைய வீரரான ayrton senna இறுதி ஊர்வலத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என கண்டறியப்பட்டது.

dw.com | Archived link
piqueshow.com | Archived link
குறித்த புகைப்படத்தினை நன்கு அவதானித்தால் அதில் பிரேஸில் நாட்டு தேசிய கொடி இருப்பதை அவதானிக்கலாம்.
நாம் இதுவரை மேற்கொண்ட தேடலில் இருந்து இது அர்ஜெண்டினா கால்பந்து வீரரான மரடோனாவின் இறுதி ஊர்வலத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் அல்ல என்பது உறுதியாகியுள்ளது.
மேலும் அர்ஜெண்டினா கால்பந்து வீரரான மரடோனாவின் இறுதி ஊர்வலத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோ தொகுப்பு பல்வேறு இணைய ஊடகங்களில் வெளியாகியிருந்தது.
இணையத்தில் பரவுகின்ற குறித்த வீடியோவையும் Google Reverse Image Tool பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்ட போது, குறித்த வீடியோவானது 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் அர்ஜென்டினாவில் புவெனஸ் அயர்ஸில் நடந்த பேரணியுடன் தொடர்புடையது என கண்டறியப்பட்டது.
ஜனாதிபதி மொரிசியோ மேக்ரிக்கு ஆதரவாக குறித்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Multitudinario #19o. #SíSePuede pic.twitter.com/DJWofhRr5t
— Mauricio Macri (@mauriciomacri) October 19, 2019
அவரின் ஆதரவாளர் ஒருவர் குறித்த வீடியோவை டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தமையும் காணக்கிடைத்தது.
La convocatoria política más numerosa desde la de Alfonsín en 1983. Ahora que van a decir los medios de prensa de los K que mienten en todos los actos de Macri? NADA ESTÁ PERDIDO. TODO ES POSIBLE SI CUIDAMOS CADA VOTO.. pic.twitter.com/eg38PLztop
— El Censor86 (@ElCensor3) October 20, 2019
நாம் மேற்கொண்ட தேடலில் பழைய வீடியோவினை எடுத்து மரணித்த மரடோனாவின் இறுதி ஊர்வலம் என்றும், அதைபோல் ayrton senna மரண ஊர்வலத்தினையும் மரடோனாவின் இறுதி ஊர்வல புகைப்படம் என பதிவிட்டு பகிரந்து வருகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட சோதனையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:மறைந்த மரடோனாவின் இறுதி ஊர்வலத்தின் புகைப்படம் மற்றும் வீடியோவா இது?
Fact Check By: Nelson ManiResult: False