இலங்கையின் இரண்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவையும் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவையும் படத்தில் அருகருகே காண்கிறீர்கள் என ஒரு புகைப்படம் பேஸ்புக்கில் பரவி வருகின்றமை காணக்கிடைத்தது. இதை குறித்து நாம் ஆய்வினை மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link

Ceylon Magazine என்ற பேஸ்புக் பக்கத்தில் ” இலங்கையின் 2வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவையும் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவையும் படத்தில் அருகருகே காண்கிறீர்கள்.” என்று இம்மாதம் 09 ஆம் திகதி (09.08.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இதனை பலரும் தங்களின் பேஸ்புக் பக்கங்கள் மற்றும் கணக்குகளில் பகிர்ந்துள்ளமை எமக்கு காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

நாம் குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு Google Reverse Image Tool பயன்படுத்தி தேடுதலில் ஈடுபட்டோம்.

குறித்த தேடுதலின் போது இலங்கை இராணுவத்தின் சிங்க ரெஜிமென்ட்டின் இணையத்தளத்தில் இரண்டாவது சிங்க படைப்பிரிவினர் ”1990 ஆம் ஆண்டு பல்லேகலவில் இடம்பெற்ற கம் உதான நிகழ்வின் போது ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவிற்கு இராணுவத்தினர் வழங்கிய மரியாதையின் ” போது எடுக்கப்பட்ட புகைப்படம் என கண்டறியப்பட்டது.

Link | Archived Link

குறித்த புகைப்படத்தினையும் பேஸ்புக்கில் பகிரப்படும் புகைப்படத்தினையும் நாம் ஆய்வு செய்தபோது இரு புகைப்படங்களும் ஒத்துப்போனது.

குறித்த இரு புகைப்படங்களிலும் ஜனாதிபதிக்கு பின்னால் உள்ள பொலிஸ் அதிகாரியும் ஜனாதிபதிக்கு இடது பக்கத்தில் வரும் இராணுவ அதிகாரியின் பின்னால் வரும் அதிகாரியின் முகமும் முற்றாக மறைந்துள்ளது.

மேலும் நாம் இப்படத்தினை ஓய்வு பெற்ற சிங்க ரெஜிமென்ட் இராணுவ அதிகாரிகளிடம் காட்டி வினவிய போது, குறித்த புகைப்படமானது சிங்க ரெஜிமென்ட் அணியின் புகைப்படமே என உறுதி செய்யப்பட்டது.

நாம் அதை உறுதிசெய்த பின்னர் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் இராணுவ வாழ்க்கையினை ஆராய்ந்தோம். 1971 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திகதி கேடட் அதிகாரியாக இராணுவத்தில் இணைந்தார். பின்னர் 1972 மே மாதம் 25 ஆம் திகதி இரண்டாவது லெப்டினெண்டாக பதிவி உயர்த்தப்பட்டு இலங்கை சிக்னல் கார்ப்ஸில் இணைக்கப்பட்டார்.

பின்னர் அவர் சின்ஹா ​​ரெஜிமென்ட் மற்றும் ராஜரதா ரைஃபிள்ஸில் குறுகிய காலத்திற்கு பணியாற்றினார் மற்றும் 1983-ல் கஜாபா ரெஜிமெண்டில் இணைக்கப்பட்டார்.

ஜூலை 08, 1989 அன்று லெப்டினன்ட் கேணல் பதவிக்கு உயர்த்தப்பட்ட அவர், 1 வது கஜாபா படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, ஜனவரி 26, 1991 வரை பதவியில் இருந்தார்.

பேஸ்புக்கில் பகிரப்பட்ட புகைப்படம் எடுக்கப்பட்டதாக இராணுவ இணையத்ததளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள வருடத்தில் தற்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ 1-வது கஜாபா படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக பணியாற்றியுள்ளமை எமது ஆய்வில் இருந்து கண்டறியப்பட்டது.

Link | Archived Link

நாங்கள் கஜாபா ரெஜிமென்ட்டின் வலைத்தளத்தைப் பார்வையிட்டு, 1-வது கஜாபா படைப்பிரிவின் கட்டளை அதிகாரிகளின் பட்டியலைச் சோதித்தபோது, ​​தற்போதைய ஜனாதிபதி அந்த படைப்பிரிவின் ஐந்தாவது தளபதி என்பது உறுதி செய்யப்பட்டது.

Link | Archived Link

கஜாபா ரெஜிமென்ட்டின் வணக்கத்திற்கு பயன்படுத்தப்படும் சீருடைகளும் புகைப்படத்தில் காட்டப்பட்டுள்ளதைவிட வித்தியாசமாகத் தெரிந்தன. 2018 சிங்க ரெஜிமென்ட் சல்யூட் போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் 1990 புகைப்படத்தின் ஒப்பீடு பார்த்த புகைப்படம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

அப்புகைப்படத்தில் தலையில் அணிந்துள்ள இராணுவ தொப்பி உட்பட இரண்டு சீருடைகளுக்கு இடையே பல ஒற்றுமைகள் உள்ளமை கண்டறியப்பட்டது.

நாம் 1990 ஆண்டு காலத்தில் வெளியான பத்திரிகைகளில் ஆய்வினை மேற்கொண்டோம். குறித்த தேடலின் போது 1990 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 26 ஆம் திகதி வெளியாகியிருந்த ”தவச” பத்திரிகையில் குறித்த புகைப்படம் வெளியாகி இருந்தமை எமக்கு காணக்கிடைத்தது.

எமது இலங்கை சிங்களப்பிரிவினரும் குறித்த செய்தி போலியானது என்று உண்மை ஆய்வினை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.

குறித்த செய்தியினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

இதற்கமைய கோட்டபாய ராஜபக்ச மற்றும் ரணசிங்க பிரேமதாச இருவரும் உள்ள புகைப்படம் என வெளியான தகவல் போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:கோட்டபாய ராஜபக்ச மற்றும் ரணசிங்க பிரேமதாச இருவரும் உள்ள புகைப்படமா இது?

Fact Check By: Nelson Mani

Result: False